Friday, October 29, 2010

மோடி வித்தையெல்லாம் குஜராத்தில் பலிக்கலாம், எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது- சுஷ்மா ஸ்வராஜ்

குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில அயல்நாடுகளில் விசிட் விசா மறுக்கப்பட்டது. இதனால் பெருத்த   அவமானம் அடைந்த மோடிக்கு, அடுத்த அவமானமாக பீகாரில் இவர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கெடுக்கக்  கூடாது என பிகாரில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கண்டுள்ள நிதிஷ்குமார் கட்சியின் தடை அமைந்தது. அதிலிருந்து மோடி மீண்டுவருவதற்குள் மேலும் ஒரு  அவமானம் அவரது  கட்சி முக்கியத் தலைவர் வாயிலாகவே கிடைத்துள்ளது மோடியை நிச்சயம் 'அப்செட்' ஆக்கியிருக்கும். நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றிருந்தபோது, பிரசாரத்துக்கு மோடி வரவில்லையா என்று நிருபர்கள் கேட்டபோது,
 மோடி வித்தையெல்லாம் எல்லா மாநிலங்களிலும் எடுபடும் என்று கூற முடியாது என்று பதில் அளித்ததாக செய்திகள் கூறுகின்றன.

குஜராத் முஸ்லிம் இன சுத்திகரிப்பு படுகொலையை நடத்திய மோடி, அங்கு மீண்டும் முதல்வரானதும், சமீபத்தில்  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதையும் வைத்து  மோடியை  மக்கள் செல்வாக்கு மிக்கவராக காட்ட சிலர் முனைகின்றனர்.

ஆனால் மோடியின் தொடர் வெற்றி, பிரதான கட்சியான காங்கிரசின் மிதவாத மதவாதமும், அரசியல் அணுகுமுறையும்தான் காரணம் என்பதுதான் உண்மை. எதிர்கட்சி தெளிவான அரசியல் செய்யாத நிலையில், அதிகாரத்தை  கையில் வைத்துள்ள மோடி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவது பெரிய வித்தையல்ல. ஆனாலும் மோடியின் இந்த மோடி வித்தை எல்லா இடங்களிலும் எடுபடாது என அவரது கட்சியை சேர்ந்த பிரதான தலைவரும், நாடளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளதன் மூலம், மோடியின் மக்கள் செல்வாக்கு என்பது ஒரு வித்தையன்றி உண்மையல்ல என்பது திண்ணம். அதோடு பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 'சோ' வகையறாக்களால் புகழப்படும் இவருக்கு ஏற்படும் அடுத்தடுத்த அவமானங்கள் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Thursday, October 28, 2010

சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற SDPI வேட்பாளர்

தனது சொந்த வாக்கையே பதிவுச் செய்ய அனுமதியில்லாமல் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்தில் வஞ்சிநாடு டிவிசனில் போட்டியிட்ட பேராசிரியர் அனஸ் 3992 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் எ.எம்.குஞ்சு முஹம்மது 2089 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இடதுசாரி வேட்பாளரான யு.எஸ்.குஞ்சு முஹம்மதிற்கு 1666 வாக்குகளே கிடைத்தன.

இத்தொகுதியில் பி.டி.பி, ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையிலான ஜனகீய விகசன முன்னணி, கேரள காங்கிரஸ் மாணி பிரிவு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள அரசியல் வரலாற்றில் சிறையிலிருந்து ஒரு வேட்பாளர் வெற்றிப் பெறுவது அபூர்வ சம்பவமாகும்.

முவாற்றுப்புழாவில் பேராசிரியர் ஜோசப் என்பவர் நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் விதமாக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வினாத்தாள் தயாரித்த சம்பவத்தில் கோபமடைந்த இளைஞர்கள்  சிலர் அவருடைய கையை வெட்டினர். இதுத் தொடர்பாக போலீசாரால் பேராசிரியர் கைதுச் செய்யப்பட்டார்.

சிறைச் சட்டப்படி தண்டனைப் பெற்ற குற்றவாளிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. ஆனால், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சிறை அதிகாரிகள் மேற்கண்ட சட்டத்தையே நடைமுறைப்படுத்தியதால் பேராசிரியர் அனஸ் வாக்களிக்க இயலவில்லை.

பேராசிரியர் அனஸ் கைவெட்டி வழக்கில் நிரபராதி என இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளே கூறியதால் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி தேர்தலில் களமிறங்கினார் பேராசிரியர் அனஸ்.

முவாற்றுப்புழா நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்து அனுமதி கிடைத்த பிறகுதான் பேராசிரியர் அனஸ் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி போலீஸ் அழைத்ததன் பேரில் முவாற்றுப்புழா காவல் நிலையத்தில் ஆஜரான அனஸை கைதை பதிவுச் செய்யாமலேயே இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்தனர்.

சமூக-கலாச்சார களங்களில் தீவிர பணியாற்றிய முவாற்றுப்புழா இலாஹியா கல்லூரி பேராசிரியரான அனஸ் போட்டியின் துவக்கத்திலேயே தான் நிரபராதி என்பதை மக்கள் முன் விவரித்ததால் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

போலீசார் சதித்திட்டம் தீட்டி கல்வியறிவுப் பெற்ற முஸ்லிம் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றும் வகையில் செயல்பட்டதே தனது விவகாரத்திலும் நடந்ததாக பேராசிரியர் அனஸ் வாக்காளர்களை புரியவைத்ததன் பலனாக அனஸிற்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக அவரை தேர்தலில் வெற்றிப்பெற வைத்துள்ளனர் மக்கள்.

சிறையிலிருந்து தனது வெற்றியை அறிந்த பேராசிரியர் அனஸ் தனது நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொண்டார். தான் நிரபராதி என்பதை நிரூபித்து சிறையிலிருந்து விடுதலையானால் உடனடியாக ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து நன்றி தெரிவிப்பதாகவும் அனஸ் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் அனஸை கைவெட்டிய வழக்கில் குற்றவாளியாக சேர்த்தைத் தொடர்ந்து இலாஹியா கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது. ஆனால் அக்கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் 21 இடங்களை  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் மாணவர் அமைப்பான  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் 

பாபர் மசூதி விசயமாக தீவிரவாத ஹிந்துத்துவா அமைப்புகளுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டாம்: PFI

பெங்களூர்,அக்:பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் தீவிரவாத சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு முஸ்லிம் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவெடுத்திருக்கும், சுன்னி வக்ஃப்போர்டு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முஸ்லிம்களில் அதிக செல்வாக்குப் பெற்ற அமைப்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியம் இந்த மாதம் கூட்டிய கூட்டத்தில் வைத்து சமரசத் தீர்வு காண்பதற்கான சந்தேகங்களுக்கு முடிவுக்கட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவும் செய்ததாகும். ஆதாரங்களை விட நம்பிகையை அடிப்படையாகக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பின் அபத்தங்களை திருத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டு என அக்கூட்டம் மதிப்பீடுச் செய்திருந்தது.

கோயிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதம் நிரூபிக்கப்படாத சூழலில், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கவேண்டும் என்ற வாதம் உள்ளிட்ட சில தனிப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, மூத்த தீவிரவாத ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இதுக்குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சில உறுப்பினர்களின் நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாகவும், தேவையற்றதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விமர்சிக்கப்பட்டுள்ள தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார்,தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர்களான சுவாமி சிதானந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது வீண் வேலையாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் குறித்த முஸ்லிம்களின் உரிமைக் கோரிக்கையைக் குறித்து பொதுமக்களிடம் இது சந்தேகத்தை கிளப்பவே உதவும்.பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமன் பிறந்த இடம் என்பதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமல் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காண இயலும் என தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்
தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முடிவுச் செய்துள்ள தீர்மானங்களைக் குறித்து எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்தார். ஹிந்தத்துவா அமைப்புகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் வாரியத்தின் உறுப்பினர்களை தலைவர்கள் சந்தித்து அந்த சிந்தனையிலிருந்து மாற்றவேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்