Monday, January 31, 2011

அப்துல் கலீம் பேசுகிறார்

சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.

செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்து தளர்ந்துபோன அப்துல்கலீம் சமீபத்தில் விடுதலையான பொழுது தனது அனுபவத்தை நினைவுக் கூறுகிறார்: "சஞ்சல்குடா சிறையில் நான் 'அங்கிள்' என்றழைத்த அஸிமானந்தாவின் மனமாற்றம், நான் மற்றும் அப்பாவிகளான இதர முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக நிரூபிக்க உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை."

ஷேக் அப்துல் கலீம் என்ற 19 வயது இளைஞர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்படுகிறார். 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை சேகரித்ததாகவும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டை பரிமாறினார் எனவும் போலீஸ் அப்துல் கலீம் மீது குற்றஞ் சுமத்தியது.

தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அப்துல் கலீமுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. நிரபராதி என நீதிமன்றம் கூறிய பொழுதும் உள்ளத்தில் ஏற்பட்ட ஆறாத காயக்களுடன் அப்துல் கலீம் சிறையிலிருந்து விடுதலையானார்.

கடுமையான நிராசை, உதவுவதற்கு எவருமில்லாத சூழல் என்ற அப்துல் கலீமின் நிலைமை அஸிமானந்தாவின் உள்ளத்தை உருக வைத்தது.

செர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரன் காஜாவுக்கு மொபைல் ஃபோனை கொண்டு கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டி மீண்டும் 2010 ஆம் ஆண்டு அப்துல் கலீம் சிறையிலடைக்கப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டி காஜாவை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால், சிறையில் போலீசாரே மொபைலைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு தன் மீது பொய்வழக்குப் போட்டதாக கூறுகிறார் அப்துல் கலீம்.

என்னவாயினும், சஞ்சல்குடா சிறையில் என்னை அடைத்தது ஒருவகையில் எனக்கு அருள்தான் என அப்துல்கலீம் கூறுகிறார்.

ஆறுமாத காலமாக நீண்ட இச்சிறை வாழ்க்கையின் போதுதான் அஸிமானந்தாவை அப்துல் கலீம் சந்தித்தார். சிறையில் வைத்து எப்பொழுதாவது முகமன் கூறுவதன் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.

அஸிமானந்தாவுக்கு உணவும், குடிநீரும் கொண்டு கொடுத்துவிட்டு சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுக் கொண்டு தனது கதையை கூறியுள்ளார் அப்துல் கலீம். அஸிமானந்தாவை அப்துல் கலீம் 'அங்கிள்' என அழைத்துள்ளார்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அப்துல் கலீமும் கைதுச் செய்யப்பட்டார் என அஸிமானந்தா அறிந்தபொழுது, அப்துல் கலீமின் வீட்டுச்சூழல் மற்றும் அவரது வாழ்க்கையைக் குறித்து விசாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அஸிமானந்தா.

முஸாராம்பாகிலிருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தானும் இதர முஸ்லிம் இளைஞர்களும் கைதுச் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து கூறத் துவங்கினார் அப்துல் கலீம். அங்கிருந்து ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றது, அங்கு வைத்து நான்கு தினங்களாக கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியது, இரண்டுமுறை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியது பின்னர் தான் உயிருள்ள சடலமாக மாறிய சூழல் வரை அனைத்தையும் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார் அப்துல் கலீம்.

இதனைக் கேட்டு தலையை அசைத்துள்ளார் அஸிமானந்தா. பின்னர் கைதுச் செய்யப்பட்ட இதர இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப சூழல்களை குறித்து கேட்டறிந்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தையும் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் போவதாக ஒருமுறை அஸிமானந்தா கூறியுள்ளார்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தனது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள்தான் என அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை ஒரு சிறை அதிகாரி மூலமாக அறிந்துள்ளார் அப்துல்கலீம்.

"என்னைப் போன்ற நிரபராதிகளான இளைஞர்கள் பொய் வழக்குகளிலிருந்து விடுபட வழிவகுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் இதற்கு காரணமல்ல, அல்லாஹ்தான் காரணம். என்னை நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கலாம். ஆனால், தீவிரவாதி என்ற முத்திரை எப்பொழுதும் எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்"- தழுதழுத்த குரலில் கூறுகிறார் அப்துல்கலீம்.

செய்தி:தேஜஸ்

முஸ்லிம் உலகின் மேற்குலக சார்பு சர்வதிகாரத்துக்கு எதிரான மக்கள் எழுச்சி


துனீசியாவில் ஏற்பட்டு வரும் மக்கள் புரட்சி அரபுநாடுகள் முழுவதும் தாக்கம் -domino effect- செலுத்த தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காடுகின்றனர். துனீசியாவில் கடத்த மாதம் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஜனாதிபதியான பின் அலி நாட்டை விட்டும் ஓடிவிட்டார் இந்த போரட்டங்களுக்கு அல் நதா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெரிதும் பங்காற்றியுள்ளது இதேபோன்று கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் ஐந்து நாட்களாக எகிப்தில் கடுமையான ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றது இங்கு போராட்டங்களில் முக்கிய எதிர் கட்சியான இஹ்வானுல் முஸ்லிமீன் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கின் அரசாங்கம் மாற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.
எகிப்து மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக துருக்கி உட்பட பல முஸ்லிம் நாடுகளில் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன எகிப்தில் மேற்கு சார்பான அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் உச்ச நிலையை அடைந்துள்ளது நேற்று வெள்ளிகிழமை ஜூம்மாஹ் தொழுகையுடன் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 100 பேர் உயிர் இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இஹ்வானுல் முஸ்லிமீன் சற்று முன்னர் ஹுஸ்னி முபாரக் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் விரிவாக பார்க்க
வன்முறையற்ற அதிகார மாற்றத்துக்கு இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது இதேவேளை எகிப்து முக்கிய இராணுவத் தளபதியான ஸாமி அனான் ஹுஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து அகற்ற முயல்வதாக உறுதிப்படுத்தப் படாத செய்திகள் தெரிவிக்கின்றன
அதேபோன்று 18 வருடங்காள சர்வதிகார அரசின் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படும் அல்ஜீரியாவிழும் ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது ஆனாலும் அங்கு மிகவும் கடுமையான முறையில் ஆர்பாட்டம் முடக்கப்பட்டுள்ளது 1992 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமிய மீட்பு முன்னணி என்ற கட்சி தேர்தலில் வெற்றி பெரும் நிலையில் மேற்குலகின் ஆதரவுடன் இராணுவ புரட்சி ஏற்படுத்தப்பட்டு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது 1992 தொடக்கம் 2002  வரையான காலபகுதிகளில் ஒரு இலட்த்தி 60 ஆயிரம் பேர் அரசினால்  இஸ்லாமிய எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் என்று கருதப்பட்ட அனைவரும் படு கொலை செய்யப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன 2002 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றாலும் இராணுவ அரசின் விசுவாசிகள்தான் ஆட்சியில் இடம்பெற்றுள்ளனர்
இங்கு இயங்கும் அரச உளவு இராணுவம் மிகவும் பயங்கரமான படுகொலைகளை நிகழ்த்தி அவற்றை இஸ்லாமிய சக்திகள்தான் செய்யவதாக காட்டி வருவதாக பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன, உளவு இராணுவம் மிகவும் பயங்கரமான படுகொலைகளை நிகழ்த்தி அவற்றை இஸ்லாமிய சக்திகள்தான் செய்யவதாக காட்டிய போலியான நாடகம் ஒன்று அண்மையில் வெளியானது அல்ஜீரியாவில் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு , ஆர்பாட்டங்கள் செய்வது எந்த அனுமதியையும் சர்வாதிகார அப்துல் அசீஸ் அரசாங்கள் மக்களுக்கு வழங்கவில்லை என்பதுடன் முழுமையான மேற்குலகின் விசுவாசியாக இருந்து வருகின்றார் என்று விமர்சிக்கப்படுகின்றார்.
ஜோர்டானிலும் பிரதமர் சமீர் ரிபாய் பதவி விலக வேண்டும் என்றும் தேர்தலின் மூலமான அரசு உருவாக்கப் படவேண்டும் என்றும் கோரி ஆர்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன இங்கு செயல்படும் ஜோர்டான் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி ஆகியன தேர்தலின் மூலமான அரசு உருவாக்கப் படவேண்டும் என்று கோரியுள்ளது
யெமென் நாட்டில் இந்த ஆர்பாட்டங்கள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டைவிட்டும் தலைமறைவான துனீசியா ஜனாதிபதி பின் அலியுடன் யெமென் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்வை ஒப்பிட்டு கோசங்களை எழுப்பியுள்ளனர் இந்த ஆர்பாட்டம் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்றுள்ள பாரிய ஆர்ப்பாட்டமாக பதிவாகியுள்ளது வறுமை, ஊழல் என்பன அதிகரித்துள்ளதுடன் அமெரிக்காவின் செறிவான புலனாய்வாளர்களின் கோட்டையாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது
அதேபோன்று ,பலஸ்தீனிலும் மேற்குலக ஆசான்களுக்கு வழிப்படும் அரசுகளுக்கும் அரச தலைவர்களுக்கும் எதிரான ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது பலஸ்தீன் காஸாவில் நேற்று ஜூம்மாஹ் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் அப்பாசின் அரசு கலைக்க படவேண்டும் என்று தெரிவித்து ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது தற்போது அப்பாஸ் நிர்வாகத்தின் ஆதரவு பெரிதும் மேற்கு கரையிலேயே சரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Saturday, January 29, 2011

சட்டவிரோத பேச்சு வார்தைகளால் பலஸ்தீன் கட்டுப்படுத்தப் படமாட்டாது


பலஸ்தீன உரிமைகளுக்காக போராடும் ஹமாஸ் இயக்கம் ‘பாதாஹ்’ கட்டுபாட்டின் கீழ் இருக்கும் பலஸ்தீன அதிகார சபைக்கு எதிரான இணைந்த தேசிய நிலைப்பாடு ஒன்றை உருவாக்க பலஸ்தீனிலுள்ள போராளிகள், படைப்பிரிவுகள், சுயாதீன அமைப்புகள் போன்றவற்றுடன் முழுஅளவிலான கலந்துறையாடலை ஆரம்பித்திருந்தது இது தொடர்பான பலஸ்தீன் அமைப்புகளின் ஒன்று கூடல் ஒன்று காஸாவில் இடம்பெற்றுள்ளது அதில் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக போராடும் பல்வேறு பட்ட அமைப்புகள் பங்கேற்றுள்ளன
இந்த வகையில் ‘ பாதாஹ்’ கட்டுபாட்டின் கீழ் இருக்கும் பலஸ்தீன அதிகார சபையின் இஸ்ரேலுடனான சட்டவிரோதமான பேச்சுவார்த்தைகளின் எந்த முடிவுகளையும் அங்கீகரிப்பது இல்லை என்ற ஏகோபித்த முடிவுக்கு வந்துள்ளதுடன் பலஸ்தீன உரிமைகளை பெறுவதற்கு தொடரான போராட்டம்தான் ஒரே தீர்வாக அமையும் என்றும் சட்டவிரோத பேச்சு வார்தைகளால் பலஸ்தீன் கட்டுப்படுத்தப் படமாட்டாது என்றும்  விரிவாக  அர்த்தமற்ற பேச்சுவார்தை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும், போராளிகளை கொலை செய்வது நிறுத்தப்படவேண்டும் போன்ற விடையங்களும் கலந்துறையாடபட்டுள்ளது
இந்த ஆலோசனை கூட்டத்துக்கான அழைப்பை இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் விடுத்திருந்தது இதில் அப்பாஸ் , அப்பாஸின் அமைப்பு தவிர்ந்த அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன.
அல்ஜசீரா தொலைக்காட்சி பலஸ்தீன் தொடர்பான 1600 ஆவணக் கோப்புக்களை வெளிப்படுத்தி வரும் இதில் அப்பாஸ் தலைமயிலான PLO அரசாங்கத்தின் பலஸ்தீன மக்களின் உரிமைகளை இஸ்ரேல் தரப்புக்கு விட்டுக் கொடுக்கும் தகவல்கள் , இஸ்ரேல் தொடர்பான அணுகுமுறைகள், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை இஸ்ரேலுக்கு தாரை வார்க்கும் பேச்சுவார்த்தைகள்
பலஸ்தீனில் தனது சொந்த மக்களை இஸ்ரேலுக்கு காட்டிகொடுக்கின்றமை, இஸ்ரேலுடன் இணைத்து பலஸ்தீன போராளிகளை கொலை செய்கின்றமை போன்ற அப்பாஸ் அரசின் துரோகங்களை அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிப்படுத்த தொடங்கியுள்ளது என்பது குறிபிடத்தக்கது

அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளினால் இஸ்ரேல் அச்சம்கொண்டுள்ளது

OurUmmah: இஸ்ரேலிய பத்திரிகையொன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு எகிப்தில் துனிசியா போன்று மக்கள் புரட்சி ஏற்பட்டு எகிப்தின் தலைமைத்துவம் மாறிவிடுமோ என்ற அச்சம் கொண்டிருபதாக தெரிவித்துள்ளது இஸ்ரேலின் பிரபல தினப் பத்திரிகையான -Ha’aretz -வெளியிட்டுள்ள  கட்டுரை ஒன்றில் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு தனது ஜெருசலம் அலுவலகத்தில் தனிமையில் இருந்த வண்ணம் தனது முழுபலத்தையும் பயன்படுத்தி தற்போது இருக்கும் நிலையை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றார்என்று தெரிவித்துள்ளதுடன்
உலக தலைவர்கள் நெதன்யாகுவை சந்திக்க ஆர்வம்கொள்ளவில்லை அவர் பிஜிங்கின் அழைப்பு ஒன்றுக்காக இன்றும் காத்திருகின்றார் அது வரவேண்டிய ஒரு அழைப்பு நெதன்யாகுவை அடிக்கடி அழைக்கும் ஒரேஒரு தலைவர் நேற்றைய உலகின் மிக முக்கிய பிரதிநிதியான எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் என்று தெரிவித்துள்ளது விரிவாக
நெதன்யா துனீசியாவின் புரட்சியை பார்த்து முகம் சுழிப்பது ஆச்சரியமான விடயமில்லை அவர் இந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தை – பிராந்தியத்தில் மிக மோசமான இஸ்திரமற்றநிலை “great instability” in the region’- தோன்றியுள்ளது என்ற எச்சரிக்கை வசனங்களுடன் தொடங்கியுள்ளார் அவர் வாலிபராக இருக்கும்போது அரபு உலகில் ஜனநாயகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்று வாதிட்டார் ஆனால் இந்த நாட்களில் அவர் சர்வாதிகாரிகளை பெரிதும் விரும்புகின்றார் அவர்கள் -சர்வாதிகாரிகள் -நம்பிக்கை கொள்ள முடியுமானவர்கள் நெதன்யாகுவை அதிர்சிக்கு உட்படுத்த மாட்டார்கள் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது

CIA தயாரிக்கும் போலியான விடியோக்கள் : Jeff Stein

CIA உளவுத் துறை பல தடவைகள இஸ்லாத்தையும் அதன் சட்டங்களையும், தமக்கு விரோதமானவர்களையும்  மக்கள் மத்தியில் இருந்து ஓரம்கட்டவும்   இஸ்லாம்  சார்த்த அமைப்புகளையும் நபர்களையும்   மிகவும் கேவலமாகவும் பயங்கரமாகவும்  சித்தரிக்கவும்   போலியான நாடகங்களை அரங்கேற்றி வருவது CIA உளவு அமைப்பில் கடமையாற்றிய உறுப்பினர்கலாலேயே அவ்வப்போது  வெளிப்படுத்தப்  பட்டுவருகின்றது முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தமது அனுபவங்களை  வெளியிட்டு வருகின்றனர்அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட   தகவல்களை  நீண்டகால புலனாய்வு ஊடக அனுபவம் கொண்டவரான ஜெப்  ஸ்டீன்    Jeff Stein- மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்
ஜெப்  ஸ்டீன்    Jeff Stein- ஒரு அமெரிக்கர் என்பதுடன் சிறந்த புலனாய்வு எழுத்தாளரும் , புத்தக ஆசிரியரும் SpyTalk என்ற இணையத்தின் சிறந்த கட்டுரையாளருமாவார்  அண்மையில் முன்னால் CIA உளவாளிகள் தெரிவித்த தகவல்களை  மேலும் இவர் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில் குறிபிடத்தக்கவர் விரிவாக
அந்த தொடரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் வெளியிட்டுள்ள தகவலில்  அமெரிக்காவினால் படுகொலை செய்யப்பட்ட  சதாம் ஹுசைன் மற்றும் உஸாமா பின்  லாதின் போன்றவர்கள் தன்னினச்   சேர்க்கையாளர்கள் என்று காட்டும் போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கக்கும்  முயற்சியில் CIA  உளவு பிரிவு ஈடுபட்டமையை  அதன் உறுபினர்களே தெரிவித்ததை  இவர் வெளிப்படுத்தியுள்ளனர்
SpyTalk. என்ற இணைய நிகழ்ச்சில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவிக்கின்றார்   CIA உளவு அமைப்பு ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் மறைத்து வைக்கப்பட்ட கமரா ஒன்றினால் பதிவு செய்யப்பட்டதை போன்ற சதாம் ஹுசைன்  டீன்ஏஜ் வாலிபன் ஒருவனுடன்  பாலியல் உறவு கொள்வதை போன்ற காட்சிகளை தயாரிக்க திட்டமிட்டிருந்ததை முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்
அந்த முனால் CIA உளவாளி மேலும் உஸாமா பின் லாதினும் அவரின் உறுபினர்களும் ஒன்றாக அமர்திருந்து மதுபானம் அருந்துவது போலவும் தமது பாலியல் தாகத்தை வாலிபர்களை கொண்டு தீர்த்து கொள்வதை போலவும் வீடியோ ஒன்றை தயாரித்துள்ளதாகவும் இதில் நடித்தவர்கள் எமது அமைப்பில் வேலைபார்க்கும் கறுத்த தோல் கொண்ட உறுப்பினர்கள் என்றும் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்
இதேபோன்று பல நாடக விடியோக்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவைகள் ஊடக முகவர்களின் ஊடாக  ஊடகங்களுக்கு வழங்கபடுவதாகவும் தெரிவிக்கின்றார் எனினும் சதாம் ஹசனை தன்னினச்   சேர்க்கையாளர் போன்று காட்சிப்படுத்தும் முயற்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் வேறு உபாயங்களை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்
அதேபோன்று பல மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தாலிபான்கள் ஒரு இளம் பெண்ணை நடுவீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஊடகங்கள் ஒளி ஒலி பரப்பியது இது பாரிய உணர்வலைகளை எழுப்பியது இதன் பின்னர் இந்த வீடியோ திட்டமிட்ட முறையில் அமெரிக்க , பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் இணைந்து ஒரு அரசசார்பற்ற நிறுவத்தின் உதவியுடன் அந்த வீடியோ தயாரிக்கபடுள்ளது என்ற உண்மையை பாகிஸ்தான் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்தது  இந்த வீடியோ காட்சியில் நடித்தவர்களில் இருந்து பங்குபற்றிய அனைவரூக்கும் அந்த  அரசசார்பற்ற நிறுவனம் பணம் வழங்கியுள்ளது வெளியானதுடன் இந்த வீடியோவில் நடித்த பெண் கைது செய்யப்பட்டார் தற்போதும் இது போன்ற வீடியோகள் உலாவருகின்றன என்பது  குறிபிடத்தக்கது

M.ரிஸ்னி முஹம்மட்

Saturday, January 22, 2011

கேரளா மாராட்டு கலவரத்தை நடத்திய ஹிந்து ஐக்கியவேதி தலைவர் உள்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.

கோழிக்கோடு,ஜன.21: கேரளா மாநிலத்தில் உள்ள மாராட்டு என்ற வூரில் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் ஒரு கலவரம் நடத்தப்பட்டது அதுவே முதல் மாராட்டு கலவரம் என்று சொல்லபடுகிறது. முதல் மாராடு படுகொலைகள் சம்பவத்தில் குஞ்சுக்கோயா(வயது 32) என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி பிபிஷ்(வயது 37), இரண்டாவது குற்றவாளி ஹிந்து ஐக்கியவேதி மாநிலப் பொதுச்செயலாளர் சுரேஷ், மூன்றாவது குற்றவாளி விஜேஷ்(வயது 31) ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அபராதத் தொகையில் 50 ஆயிரத்தை கொலைச் செய்யப்பட்ட குஞ்சுக்கோயாவின் குடும்பத்தினருக்கு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரவு எட்டு மணியளவில் மாராடு கடற்கரைப் பகுதியில் இரு பிரிவினர்களுக்கிடையே நடைப்பெற்ற மோதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இச்சம்பவத்தில் முதலில் கொல்லப்பட்டது முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த குஞ்சுக்கோயா என்பவராவார்.

மாராடு ஜும்ஆ பள்ளி முன்பக்கத்தில் வைத்து ஆயுதங்களுடன் வந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஹிந்து ஐக்கியவேதியின் பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் சேர்ந்து குஞ்சுக்கோயாவை கொடூரமாக கொலைச் செய்தனர். இதனை நேரில் கண்ட சாட்சி அளித்த வாக்குமூலத்தை மிக முக்கிய ஆதாரமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கில் இதர குற்றவாளிகள் பிபிஷ்(வயது 37), விஜேஷ்(வயது 31) ஆகியோராவர். முதல் மாராடு சம்பவத்தில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு பதிலடியாக நடந்த இரண்டாவது மாராடு சம்பவத்தில் 9பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை நேர்மையாக நடைபெற வழி என்ன? சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கூறும் ஆலோசனை

இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்த என்ன செய்யவேண்டும் என்பதற்கான சீரிய ஆலோசனைகளை சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் சி.வி. நரசிம்மன் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள யோசனைகளில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன:

இந்த ஊழலில் மிகப்பெரிய அள வுக்கு சட்டவிரோதமான பணம் கைமாறி யுள்ளது. மாபெரும் குற்ற நடவடிக்கையான இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கள் குறித்த சாட்சிகள் முழுமையாகவும் விரிவாகவும் விசாரிக்கப்பட வேண்டும். தொடர்புடைய ஆவணங்களும் அவற்றுக்குத் துணைபுரியும் சாட்சியங்களும் அடையாளம் காணப்பட்டு விரைவாக கைப்பற்றப்பட வேண்டும். சந்தேகத்திற்குரியவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண் டும். இவ்வாறு ஒவ்வொரு சாட்சியையும் விசாரித்து அறிவதற்கும் பல இடங்களில் சோதனை நடத்திப் பலரைக் கைது செய்வதற்கும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினாலோ அல்லது இதற்கென்று அமைக்கப்படுகிற ஆணையத்தினாலோ இயலாத காரியமாகும். சி.பி.ஐ. போன்ற குற்றப் புலனாய்வு அமைப்பு ஒன்றின் மூலமே இது சாத்தியமாகும்.

இந்த மிகப்பெரிய ஊழலை விசா ரிப்பதற்கு தொழில்ரீதியான திறமையும் உயர்ந்தபட்ச அர்ப்பணிப்பும் தேவை. இந்த ஊழலில் தொடர்புடைய குற்றங் கள் பல்வேறு வகையான சட்டங்களின் கீழ் வருபவையாகும். ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், வெளிநாட்டுப் பணப்பறிமாற்ற விதி முறைகள்- வருமானவரிச் சட்டம் போன்ற பல சட்டங்களின் கீழ் இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. தற்போது சி.பி.ஐ. வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு ஆகியவை இந்த ஊழல் குறித்துத் தனித்தனியே விசா ரித்து வருகின்றனர். சில வேளைகளில் முக்கியமான சில சாட்சிகளும் ஆவ ணங்களும் இந்த மூன்று அமைப்பு களுக்கும் பொதுவானவையாக இருக்கக் கூடும். போலிஸ் அமைப்பாக இருப்பத னால் சி.பி.ஐ. சாட்சிகளிடமிருந்து கையெ ழுத்திடப்பட்ட வாக்குமூலங்களைப் பெற முடியும். ஆனால் விசாரணைக்கு உதவுமே தவிர இந்த வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால் அமலாக்கப்பிரிவிற் கும் வருமான வரித்துறைக்கும் மேற் கண்ட சட்டரீதியான கட்டுப்பாடுகள் எது வும் கிடையாது. அவர்கள் கையொப்பம் இடப்பெற்ற வாக்குமூலங்களைப் பெற்று அவற்றை சாட்சியமாக தங்கள் விசார ணையில் பயன்படுத்த முடியும். பொது வான சாட்சிகளிடமிருந்து இந்த மூன்று அமைப்புகளினாலும் பெறப்பட்ட பல வகையான வாக்குமூலங்கள் ஒன்றுக் கொன்று முரணாக அமையுமே ஆனால் நீதிமன்றத்தில் மிகக்கடுமையான வாதத் திற்கு உள்ளாகும். குற்றவாளித் தரப்பு வழக்கறிஞர்கள் இத்தகைய பிரச்சனை களைப் பயன்படுத்தி விசாரணையை நீட்டிக்கவும் தாமதப்படுத்தவும் முடியும். இந்த நீண்ட காலத்தில் குற்றவாளிகள் பிணையில் வெளிவந்துவிடக்கூடும். மேலும் குற்றவாளிகள் நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் குவித்து வைத்தி ருக்கிற செல்வத்தின்மூலம். பணம் சார்ந்த ஆதாயங்களை அனுபவிக்க முடியும். இத்தகைய நிலைமை நாட்டின் நல னுக்கு உகந்தது அல்ல. எனவே இந்த மூன்று அமைப்புகளினாலும் நடத்தப் படும் விசாரணை ஒன்றுக்கொன்று இணைந்தும் ஒரு குழு மனோபாவத்து டனும் செயல்படவேண்டும். இந்த குழு விற்கு சி.பி.ஐ.யின் தலைமை விசாரணை அதிகாரி தலைமை தாங்கவேண்டும். மற்ற அமைப்புகளினால் சேகரிக்கப்படும் சாட்சியங்கள் அனைவருக்கும் கிடைக்கு மாறும் பயன்படுமாறும் பார்த்துக்கொள் ளப்படவேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின்படி பிப்ரவரி 10ஆம் தேதி இதற்கான ஏற்பாடுகளை யெல்லாம் செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அமைப்புகள் இணைந்து செயல் படவேண்டும்.

விசாரணை நடைபெறும்போது கிடைக்கும் சாட்சியங்களின் மூலம் பினாமியாக நடைபெற்ற பணப் பரி மாற்றம் பினாமி பெயரில் உள்ள சொத் துக்கள் ஆகியவை குறித்து ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. 1988ஆம் ஆண்டு மத்திய அரசு பினாமி பரிமாற்றங்கள் தடைச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ஊழலோடு தொடர்புடைய குற்றங்கள், ஊழலில் திரட்டிய பணம் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது இந்தச் சட் டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இந்தச் சட்டம் கொண்டுவரப் பட்டு 22 ஆண்டுகள் ஆனபிறகும் இது நடைமுறையில் செயலற்றச் சட்டமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தச் சட்டத் தின்கீழ் வகுக்கப்படவேண்டிய விதி முறைகள் இன்னமும் வகுக்கப்பட வில்லை. மேலும் அது அறிவிக்கையின் மூலம் வெளியிடப்படவும் இல்லை. மிக முக்கியமான ஊழல் எதிர்ப்புச் சட் டத்தை தொடக்கத்திலிருந்து பயனற்ற தாகச் செய்த மத்திய அரசின் போக்கு மன்னிக்க முடியாதது ஆகும். இந்தப் பிழை உடனடியாகத் திருத்தப்பட்டு இந் தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக் கப்பட்டு அறிவிக்கப்படவேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப் பட்டவர்களின் பினாமி சொத்துக்கள் இச்சட்டத்தின்கீழ் முடக்கப்படவேண்டும். மேலும் அந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இச்சட்டத்தின்படி வேறுவகை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் சி.பி.ஐ.யால் இயலும்.

1946ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட தில்லி சிறப்புப் போலிஸ் அமைப்பு சட்டத்தின்படியும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்கீழும் சி.பி.ஐ. மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரத்திற்கு கட்டுப் பட்டதேயாகும். ஆனால் சி.பி.ஐ.யின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து தன் வசமே வைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்ட பொருளாதார குற் றங்கள் குறித்து சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை பற்றிய தகவல்களை மத்திய அரசு கேட்டுப்பெறுவதற்கு இந்த மேற்பார்வை அதிகாரம் சட்டப்படி இட மளிக்கிறது. சி.பி.ஐ. மற்றும் அமைப்புகள் சேகரித்துள்ள விவரங்கள் குறித்து மத்திய அரசு தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் இந்த விவரங்கள் சம்பந்தப் பட்ட வட்டாரங்களுக்குக் கசியக்கூடும். இதன்மூலம் சாட்சியங்களுக்கு துணை யாக இருக்கக்கூடிய மற்ற ஆதாரங் களை சம்பந்தப்பட்டவர்கள் அழிக்க முயற்சிக்கக்கூடும். சி.பி.ஐ.விசாரணைக்கு இவையெல்லாம் இடையூறாக அமை யும். எனவே இந்த வழக்கு சம்பந்தப் பட்ட சி.பி.ஐ. விசாரணை குறித்த தகவல் களை மேற்பார்வையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என உரிய ஆணையை உச்சநீதிமன்றத்திடம் பெறவேண்டும்.

இந்த வழக்கில் உள்ள பணயங் கள் மிகமிக அபாயகரமானவை. விசார ணையின்போது குற்றவாளி மிகவும் நெருக்கப்பட்டால் அவர் திருப்பி அடிக்கக்கூடும். முக்கியமான ஆவணங் கள், முக்கிய சாட்சிகள் மிக உயர்ந்த பாதுகாப்புக்கு உள்ளாக்கப்படுவது இன்றியமையாததாகும் சி.பி.ஐ.யுடன் கலந்தாலோசித்து இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும்.

டிசம்பர் 16ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியவற்றின் விசாரணை குறித்து உச்சநீதிமன்றமே மேற்பார்வையிடும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரையிலே அப்போதைக்கப் போது என்ன நடந்தது என்பதைக் குறித்த அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படுவதால் எதிர்பார்க்கும் பயன் விளையாது. இப்பிரச்சினையில் அள வைவிட குணாம்சம் மிகமிக முக்கிய மானது ஆகும்.

உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ள மேற்பார்வையிடும் வேலை கீழ்க்கண்ட வற்றை உள்ளடக்கியது ஆகும். விசார ணைக் குழுவின் தலைவருடன் உச்சநீதி மன்றம் உட்கார்ந்து சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை குறித்து விவா தித்து முடிவுகள் எடுக்கவேண்டியதிருக்கும். உச்சநீதி மன்ற மண்டபத்தில் இத்தகைய விவாதங்களும் கூட்டங்களும் நடைபெற முடியாது. எனவே உச்சநீதி மன்றத்தின் சார்பில் மூவர் கொண்ட ஒரு குழு அமைக் கப்படவேண்டும். இந்த குழுவிற்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைவராகவும், சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் அல்லது இணை இயக்குநர், ஓய்வுபெற்ற அரசு தலைமை வழக்கறிஞர் ஆகிய இருவர் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப் படவேண்டும். இந்த மேற்பார்வை குழு விசாரணையை அடிக்கடி மேற்பார்வை யிட்டு அவ்வவ்போது உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். அடுத்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த ஆலோசனையைத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தின் சம்மமதத்தைப் பெறவேண்டும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விசாரணையில் அரசியல் அல்லது வேறுவகையான குறுக்கீடுகள் இல் லாமல் இருக்கவும், இந்த ஊழலுக்குப் பின்னே மறைந்துள்ள முழு உண்மையை வெளிக்கொணரும் வகையிலும் நேர்மையான விசாரணை நடைபெறவும் மேற்கொண்ட ஏற்பாடு நிச்சயமாக உதவும்.

பொதுப்பதவிகளில் அமர்ந்து மிகப்பெரிய ஊழல் குற்றம் புரிந்தவர்கள் குறித்த இந்த வழக்கில் சிறப்பான விசாரணை, வழக்குத் தொடர்தல், வழக்கு நடைபெறுதல் ஆகியவை முறையாகவும் ஒழுங்காக வும் நடைபெற வேண்டும். அப்போதுதான் எதிர் காலத்தில் இத்தகைய ஊழலை யாரும் செய்யாமல் இருப்பார்கள்.பழைய பிரிட்டிசு அரசின் கீழ் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களில் இருந்து விலகி இதற்கான குற்றவியல் நீதிமுறை தனியாக வகுக்கப்பட் டாக வேண்டும். மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் இத்தகைய சிறப்பு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுத்துறையில் உள்ளவர்களின் குற்ற ஒழுங்கீனங் களைத் தடுக்கவும் விசாரிக்கவும் தண்டிக்கவும் உரிய சட்டம் ஒன்றினை மத்திய அரசு உடனடியாகக் கொண்டுவரவேண்டும். பொதுத்துறையில் இருப்பவர் கள் என்ற பதத்தின்கீழ் மத்திய மாநில அமைச்சர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் கள் ஆகியோரை உள்ளடக்கும் வகையில் இந்தப் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு எவ்வளவு விரைவில் நிறைவேற் றப்படுகிறதோ அவ்வளவு விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்த மிகப்பெரிய ஊழல் வழக்கில் அடுத்த 9 மாதங்களில் அல்லது அதற்குள்ளாகவே விசாரணையை சிறப்பாக நடத்தமுடியும்.

- நன்றி : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 6-1-11

தொலைக்காட்சிகளின் புலனாய்வு நிகழ்ச்சிகள் ந்டப்பது என்ன?


பல்கிப் பெருகியிருக்கின்றன தொலைக் காட்சிகளும், இதர ஊடகங்களும். நாள் முழுக்க திரைப்படங்களையும், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், ரசித்தவை, பிடித் தவை, சாதித்தவை, நெஞ்சைத் தொட்டவை, உங்கள் சாய்ஸ், டெலி சாய்ஸ், நேயர்கள் தொலை பேசியில் அழைப்பது, நேயர்களை தொலை பேசியில் அழைப்பது என்று திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளையும் ஒரு நாளில் 24 மணி நேரம் போதாமல் ஒளிபரப்பித் தீர்க்கும் தொலைக்காட்சிகள் ஒரு பக்கம். 24 மணி நேரத் திற்கும் செய்திகள் வழங்க முடியாமல், திரும்பத் திரும்ப ஒரே செய்தியை ஒளிபரப்பியோ, அல்லது புதிதாக செய்தியை உருவாக்கியோ, உப்புக்குப் பெறாதவற்றை பெரிதாக்கியோ நேரத்தை ஓட்டும் தொலைக் காட்சிகள் இன்னொரு பக்கம்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம், தனது ஒரே ஒரு அலைவரிசை மூலம் அத்தனை நிகழ்ச்சி களையும் ஒளிபரப்பியது ஒரு காலம். இன்று கிட்டத்தட்ட அத்தனை ஊடகங்களும் ஒன்றுக் கும் மேலாக அலைவரிசைகளை வைத்திருக் கின்றன. முதன்மை அலைவரிசை ஒன்று. அது தவிர்த்து திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், குழந்தைகள், செய்தி என தனித்தனி அலைவரிசைகள் இருக்கின்றன. பட்டியல். இப்போது இருக்கும் சூழலில் மொழி மாற்றுத் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்தால் அதற்கென்று தனி அலைவரிசையை ஒவ்வொரு நிறுவனமும் தொடங்கினாலும் வியப்பிற்கு ஒன்றுமில்லை. சரி, இத்தனையும் தனித்தனியாகக் கிடைத்தால் முதன்மை அலை வரிசைக்கு என்ன வேலை என்று பார்த்தால், இது எல்லாவற்றையும் அதில் தொகுத்துத் தருவது தான்.

Friday, January 21, 2011

துக்ளக் பத்திரிகை இனி சமஸ்கிருதத்தில் நடத்தப்படுமா?? ஒரு கேள்வி???

துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி மீண்டும் தனது அழுத்தமான பார்ப்பனர் அடையாளத்தை காட்டிக் கொண்டுவிட்டார். "கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள் தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஆங்கில மொழி இப்படி மாநாடு நடத்தியதாலா வளர்ந்தது? என்று துக்ளக் ஆசிரியர் சோ அவருக்கே உரிய வயிற்றெரிச்சலோடு அவரது பத்திரிகையின் 42 வது ஆண்டு விழாவில் பேசியிருக்கிறார்.

அவர் நடத்திய அந்த ஆண்டு விழாவில் பேசியவர்கள் அனைவரும் ‘சோ’ தைரியசாலி
விலைக்கு வாங்க முடியாதவர், என்ற ரீதியில் அவரை வானளாவப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துக் கேட்டுக் கொண்டுதானிருந்தாரே தவிர - "அய்யோ வேண்டாம்; போதும் புகழ்ந்தது" என்று தடுத்து விடவில்லை அவர்!
இப்படிப்பட்ட புகழுரைகளை பாராட்டு களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் விழா எடுத்து அதிலே பேசுவோர் தனக்கு வழங்கும் பாராட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பவர்! அப்படிப் பாராட்டுமளவிற்கு இந்த மகானுபவர் என்ன சாதனை நிகழ்த்திக் காட்டி விட்டார்? திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்வது,புராண, இதிகாசங்களிலுள்ள
ஹிந்துத்துவா மூடத்தனங்களைப் பரப்புவது,ஊழல் எதிர்ப்பு என்ற பேரால் ஜெயலலிதாவுக்கு தங்க முலாம் பூசுவது போன்ற சமூக விரோத, மக்கள் விரோத, பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரான கழிசடைக் கருத்துக்களைப் பரப்புவது என்பதைத் தவிர வேறு என்ன சாதித்துவிட்டார்?

சாதி வெறியரான அவர் தனது சுயசாதியினரின் அபிமானத்துக்குரிய சமஸ்கிருதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமி சிலைகளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும், தமிழ் புரியாது என்பார். அதேசமயம் தேவாரம் பாடிய மூவரிலிருந்து 63 நாயன்மார்களின் வரலாற்றை வாரா வாரம் எழுதுவார்! அது எல்லாம் தமிழ்ப் பாடல்தானே? இதையெல்லாம் எழுதி எழுதி அல்லையன்ஸ் பிரசுரம் மூலம் காசு சம்பாதித்து வயிறு கழுவும் பக்தி வியாபாரி சோ. தமிழில் அர்ச்சனை செய்தால் அது சாமிக்குப் புரியாது. சாமிக்கு ‘வைபரேஷன்’ தான் முக்கியம். அந்த அதிர்வுகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று வக்கணை பேசுவார். காரணம் என்ன? அவரது சுயசாதியினருக்கே பொதுவான தமிழ் விரோதம் சமஸ்கிருத அபிமானம்தான்! உலகத் தமிழ் மாநாட்டினால் ஒன்றும் பயனில்லை என்கிறார்; அதனால் தமிழ் வளராது என்கிறார்.
‘சோ’வின் சொந்த ஜாதிக்காரராகிய சங்கராச்சாரியார் சமஸ்கிருத வளர்ச்சிக்காக சதஸ்கள் நடத்தினால் அதன் மூலம் சமஸ்கிருதம் வளரும் என்று மட்டும் நம்புகிறாரே எப்படி?

தமிழ்நாட்டு அரசியலை வெறும் அரட்டைக் கச்சேரியாக மாற்றுவதற்காகவே பத்திரிகை நடத்தும் சோ ஆண்டுதோறும் தன்னைப் புகழ மண்டபக் கூட்டங்கள் நடத்தும் சோ கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துவது தம்மைப் புகழ பாராட்டத்தான் என்கிறாரே அதை என்னவென்று வர்ணிப்பது? சங்கராச்சாரியார் உரைகளை எல்லாம், கட்டுரைகளை எல்லாம் ‘தெய்வத்தின் குரல்’ என்று புகழும் ‘சோ’க்கள் இப்படியெல்லாம் பேசுவது எந்தப் புத்தியினால்? பெரியார் தந்த புத்தியை உபயோகித்துப் பார்த்தால் அது எந்தப் புத்தி என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல பளிச்சென்று விளங்கும்!

தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும்.

இந்த துக்ளக் ஆசிரியர் ஒரு இரட்டை நாக்கு ஆசாமி, தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்துவது பார்பன ஹிந்துத்துவா மதவெறியை தூக்கிபிடிப்பது, செம்மொழியாம் நம் தாய்த்தமிழையும், தமிழர் தம் பண்பாட்டையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டுவதும் தான் இவரது வேலை. இந்த குள்ளநரி மொட்டைப் பாப்பான் தமிழை நீசபாசை என்று இழிசொல் பேசும் காஞ்சிக் கொலைகார காமகேடி சங்கராச்சாரியின் ஊதுகுழல். இவருக்கு தில்லு இருந்தால் செத்துப்போன ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்த வேண்டியது தானே இந்த தமிழின துரோகி! இவர் போன்ற துரோகிகளின் பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகவே வேகாது. தமிழர்கள் கவரிமாங்களை போன்றவர்கள், மானம் இழப்பின் உயிர் துறப்பர். இந்த பிரமான வந்தேறி பார்பனர்கள் போல் இல்லை காசுக்காக வேண்டி மானத்தை விற்பவர்கள் இல்லை. ஈழ தமிழர் போராட்டத்தை எதிர்க்கும் இந்த சோ, ஜெயலலிதா,சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுக்கு தமிழர்கள் நல்ல படம் புகட்டுவார்கள்.

நன்றி: சமூக உறவுகள் சாந்தி மற்றும் பாபு.

Thursday, January 20, 2011

துனீசிய மக்கள் எழுச்சியும் பலஸ்தீனிய விடுதலை அமைப்புகளின் நிலைப்பாடு


 
OurUmmah:இஹ்வானுல் முஸ்லிமீன்- ஆட்சிக்கு வருவதை தடுக்குமுகமாக மக்களுக்கு எதிராக மரணம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைக்கு அனுமதி வழக்கினார்‘-

துனீசியாவில் இடம்பெற்றுள்ள கிளச்சியால் இஸ்ரேலுடன் சந்தேகத்துக்கிடமான உறவை -”suspicious ties”- கொண்ட துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி துனீசியாவில் இருந்து ஓடித்தப்பி சவூதி அரேபியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் இந்த மக்கள் எழுச்சியை பாலஸ்தீன போராளிகள் அமைப்புகள் தமது ஆதரவினை தெரிவித்துள்ளன.
காஸா வெளிநாட்டு அமைச்சர் பாதி ஹம்மாத் கருத்துரைக்கையில் நாங்கள் துனீசியா மக்கள் தாம் தலைவர்களை தெரிவுசெய்யும் விடையத்தில் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம், அது எவ்வளது தியாகங்களை வேண்டினாலும் அது ஒரு பொருட்டல்ல என்று தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க
ஹாமாஸ் பேச்சாளர் சமாய் அபு ஜுஹ்ரி கருத்துரைக்கையில் தனது இயக்கம் துனீசிய மக்களின் விருப்பபு மற்றும் தேர்வு -will and choice- -(Free will)- ஆகியவற்றை மதிப்பதாகவும் ஹமாஸ் அவர்களுக்கு பக்க துணையாக இருக்கும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் பேச்சாளர் தாவூத் சிஹாப் AFP செய்தி நிறுவனத்துக்கு கருத்துரைக்கையில் முன்னால் துனீசிய ஜனாதிபதி சந்தேகத்துக்கிடமான உறவை -”suspicious ties”- இஸ்ரேலுடன் கொண்டவர் என்று குற்றம் சாட்டியுள்ளது.
அதேநேரம் PLO அமைப்பின் பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி – -DFLP- துனீசிய மக்கள் இஸ்லாமிய அரசியல் அலை-”waves of political Islam”- சிறந்த வெற்றியை -பயங்கரவாத, தீவிரவாத சகதிக்குள் திருப்பிவிடும் என்று எச்சரித்துள்ளது.
காஸாவை ஆளும் ஹமாஸை தாக்குமுகமாக பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி துனீசிய படைகள் அரசியல் இஸ்லாம் நோக்கிய பாதையையும் துனீசியவில் காஸாவின் அனுபவங்களை உருவாக்கும் தவறான வழிகாட்டல்களையும் துண்டிக்கவேண்டும் என்று தனது -இஸ்லாமிய விரோத போக்கை காட்டியுள்ளது -தெரிவித்துள்ளது.
23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சியில் இருந்த மேற்குலகை எஜமானாக விசுவாசித்த ஜைனுல் ஆபிதீன் பின் அலி வெற்றிகரமாக மக்களினால் விரட்டியடிக்கப்பட்டார். இவரின்  UNESCO வுக்கான துனீசிய தூதுவர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி தெரிவித்ததாக கூறியுள்ள தகவலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்- இஹ்வானுல் முஸ்லிமீன்- ஆட்சிக்கு வருவதை தடுக்குமுகமாக மக்களுக்கு எதிராக மரணம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைக்கு அனுமதி வழக்கினால் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சர்வதேச இஸ்லாமிய அமைப்பான இஹ்வானுல் முஸ்லிமீன் அரபு , இஸ்லாமிய அமைப்புகளை துனீசிய மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக இருக்குமாறு வேண்டியுள்ளதுடன் துனீசிய எழுச்சிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது

சாட் ஹரீரியில் அரசாங்கம் கவுண்டது: லெபனானில் உள்நாட்டு கலகம் தோன்றும் அறிகுறியா ?

OurUmmah: கடந்த கிழமை ஹிஸ்புல்லாஹ் இயக்கம் தான் லெபனான் தேசிய அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விளக்கி கொண்டமையால் சாட் ஹரீரியின்- Saad Hariri -தேசிய அரசாங்கம் வீழ்த்தப்பட்டுள்ளது ஹசன் நஸ்ருல்லாஹ் தலைமையிலான ஹிஸ்புல்லாஹ் இயக்கம் பிரதமரான சாட் ஹரீரியுடன் ஏற்பட்ட முறுகலை தொடர்ந்து தனது 10 அமைச்சர்களை அரசாங்கத்திலிருந்து விளக்கி கொண்டது இதை தொடர்ந்து மேற்குலகம் சார்பான ஹரீரியின் தலைமையிலான அரசு கடந்த வாரம் வீழ்த்தப்பட்டுள்ளது
லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான மலைகளை கொண்டுள்ள ஒரு சிறிய நாடு.  நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் சிரியாவும், தெற்கு எல்லையில் இஸ்ரேலும் இருக்கிறது இந்த நாடு முஸ்லிம்களை 60 வீதமாகவும் கிறிஸ்தவர்களை 39 வீதமாகவும் ஏனையவர்களை 1 வீதமாகவும் கொண்டுள்ளது இதன் ஜனாதிபதியாக ஒரு கிறிஸ்தவரும் பிரதமராக ஒரு முஸ்லிமும் இருப்பது கடந்த சில காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது விரிவாக பார்க்க
முன்னால் பிரதமாரான சாட் ஹரீரியின் தந்தை ஹரீரி கடந்த 2005 ஆம் ஆண்டு கார் குண்டு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் இந்த கொலை அமெரிக்க இஸ்ரேல் கூட்டு படுகொலை என்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் தெரிவித்து வருகின்றது இந்த கொலை தொடர்பாக சாட் ஹரீரி ஐநா  தலைமையிலான விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது ஹிஸ்புல்லாஹ் இயக்கம் உள்நாட்டு விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு மட்டும் ஆதரவை தெரிவித்து பிரதமரான சாட் ஹரீரி பதவி துறக்கவேண்டும் என்று நிபந்தனையிட்டு அரசில் இருந்து வெளியேறி அரசை வீழ்த்தியுள்ளது.
இதனால் தற்போது லெபனானில் உள்நாட்டு கலகம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுட்டிகாட்டப்டுகின்றது கட்டார் , சவூதி போன்ற நாடுகள் மேற்கொண்ட சமாதன முயச்சிகள் எதுவும் பயன்தரவில்லை ஹிஸ்புல்லாஹ் இயக்கம் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்படும் அரசாங்கத்தில் சாட் ஹரீரி உள்ளடக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது
M.ரிஸ்னி முஹம்மட்

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!

முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!

by Dr. Paul Craig Roberts
முஸ்லிம்களோ ஜனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன ‘இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்’ மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் ‘பாரசீக வளைகுடா’ என்கிறார்கள், அரேபியர் ‘அராபிய வளைகுடா’ என்கிறார்கள். இதுதான் பிரச்சினை!

இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற முடியாதிருப்பதற்குக் காரணமும் முஸ்லிம்களுக்கிடையே காணப்படும் பிரிவினைதான். மேலும், அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்திருப்பதும், அனேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கைப் பாவைகளை ஆட்சியில் அமர்த்தி அடக்கியாண்டுகொண்டு வருவதும் இதே பிரிவினையின் விளைவுதான்.


அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்ட எகிப்து, இஸ்ரவேலர்களின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்குத் துணைபோகிறது. இதைத் தட்டிக் கேட்கக்கூடாது என்பதற்காக எகிப்திய எதிர்க்கட்சியினரின் வாய்களை அமெரிக்க டாலர் கொண்டு அடைத்துவிட்டிருக்கிறார் ஹோஸ்னி முபாரக். இதற்கென்று இவர் பெறும் கைக்கூலி வருடத்திற்கு 150 கோடி டாலர்!
முஸ்லிம்கள் தம் சகோதரர்களையே காட்டிக்கொடுப்பதாக நாம் சொல்வதை நம்பாதவர்கள், ஈரானில்; ‘ஜனநாயகத்துக்கான நிறுவனம்’ என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்பின் தலைவர் கென்னத் டிம்பர்மேன் என்ற யூதர் சொல்வதைக் கேளுங்கள். ‘இந்த அமைப்பைத் ‘தன்னார்வுத் தொண்டு (நடுநிலை) நிறுவனம்’ என்று காட்டிக்கொண்டாலும், இதற்குச் செலவு செய்த பணம் 1995 இல் அமெரிக்க அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதுதான்’. (கூலி கொடுப்பவனுக்கு விசுவாசமாகத்தானே வேலை செய்வார்கள்!)

இப்போது நாம் சொல்வது என்ன என்பதை உணர்ந்திருப்பீர்கள். அமெரிக்காதான் மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் தமது கைப் பாவைகளைத் தலைவர்களாக நிறுத்திக்கொண்டு வருகிறது என்பது உண்மை.

அமெரிக்கா, கடந்த 10 வருடங்களாக, உக்ரைன், செர்பியா போன்ற நாடுகளிலெல்லாம் தமது அடியாட்களை நிறுவி, கிளர்ச்சி செய்வதற்குத் தயாராக்கி வருகிறது. இதற்குச் செலவான பெருந்தொகையில் ஒருபகுதி, ஈரானின் மூசாவிக் குழுவின் கைக்கும் எட்டியிருக்க வேண்டும். ஏனெனில், ஈரானுக்கு வெளியேயுள்ள தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களுடன் மூசாவிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால், அவற்றின் மூலம்தான் இந்த டாலர்கள் கைமாறியிருக்க வேண்டும். “அஹமதின்னஜாத்” புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறிக் கலவரம் செய்வதற்கு மூசாவி செலவு செய்ததும் இதே அமெரிக்க டாலர்கள்தான்.

முன்பும், 40 கோடி டாலர்கள் செலவு செய்து ஈரானியர்களையே கிளர்ச்சி செய்யத் தூண்டிவிட்டதும் ஜோர்ஜ் புஸ்ஸின் அமெரிக்க அரசாங்கம்தான். யூதர்களின் பத்திரிகையான ‘வாஸிங்டன் போஸ்ட்’ 2007 இல் இச்செய்தியை வெளியிட்டதைப் பலரும் படித்திருப்பீர்கள். இதிலிருந்தும் அமெரிக்கா ஒரு பயங்கரவாதி என்பது உறுதியாகிறது.
மேலும், அண்மையில், பலூச் பிரிவினைவாதக் கும்பலின் தலைவன் அப்துல் மாலிக் ரிகி என்பவனை ஈரானியர்கள் கைது செய்திருந்தார்கள். ஈரானிய இஸ்லாயக் குடியரசுக் கெதிராக கிளர்ச்சி செய்வதற்காக கணக்கற்ற ஆயுதங்களும் பணமும் தருவதாக அமெரிக்க அரசாங்கம் உறுதி அளித்திருந்ததை அவன் ஏற்றுக்கொண்டான்.

அவனைத் துன்புறுத்தி உண்மைகளை வரவழைத்திருக்க வேண்டும். இதுதான் அமெரிக்கப் பாணி! ‘முதன்மை நாடு’, ‘மலையில் ஒளிரும் நகரம்’ , ‘உலகின் ஓளி’ என்றெல்லாம் தம்மைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவுக்கே முடியுமென்றால், ‘அற்பமான’ ஈரான் ஏன் துன்புறுத்தி உண்மையை வரவழைத்திருக்க முடியாது? ஈரானிய சிறையில் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறான் அந்த றிகியின் தம்பி ஒருவன். கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்காநேரடியாகப் பணம் கொடுத்ததாகவும், எங்கெல்லாம் குண்டு வைக்கவேண்டுமென்று குறிப்பிட்டுக் கட்டளை பிறப்பித்திருந்ததாகவும் அவன் ஒப்புக்கொண்டான்.

தன்னலம் மட்டுமே ஒரே நோக்கம் என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காதொடுத்திருக்கும் யுத்தத்திற்கு ‘நிலையான சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்று பெயரிட்டிருப்பது ‘பொருத்த’மாய் இருக்கிறதில்லையா? 2001 அக்.7 இலிருந்து அமெரிக்காவினதும் ‘நேட்டோ’வினதும் கைப்பாவைகள், பெண்கள்-பிள்ளைகள்-கிராமத்திலுள்ள முதியோர்கள் போன்ற பெருந் திரளான மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள். அதற்கு வசதியாக, ஹமித் கர்சாயியை ஆப்கானின் தலைவனாக நிறுவியிருக்கிறது அமெரிக்கா.

தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கர்சாயி செய்யும் ஊழல்களுக்குத் தேவையான பணத்தை வாஸிங்டன் வாரியிறைக்கிறது. கர்சாயி செய்யும் ஊழல்களும் நாட்டு மக்களுக்கு அவன் செய்யும் துரோகமும்தான், வாஸிங்டனின் அடக்கு முறையிலிருந்து தம் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் தாலிபான்களுக்கு பெரும் உந்துதலாயிருக்கிறது. கர்சாயி என்ற அடியாள் இல்லாதிருந்தால் அமெரிக்கர் எப்போதோ துரத்தியடிக்கப்பட்டிருப்பார்கள். சுயநலவாத அமெரிக்கா கொடுக்கும் பணத்தை ஆப்கானின் மற்றுமொரு பகுதியினருக்குக் கொடுத்து, ஆப்கானிகளைக்கொண்டே ஆப்கானிகளைக் கொல்ல வைப்பதினால்தான் இந்தக் கொடிய யுத்தம் 9 ஆண்டுகளாகத் தொடந்து கொண்டிக்கிறது.

‘பெண்ணுரிமை’, ‘சுதந்திரம்’ என்றெல்லாம் பீற்றிக்கொண்டு, அமெரிக்காவிற்குக் கொடி பிடித்துத்திரியும் கோழைகள், நாம் இங்கு குறிப்பிடும் கருத்துக்களை அர்த்தமற்ற குப்பை என்று வர்ணிக்கக் கூடும். மேலும், பெண்ணுரிமையைப் பாதுகாக்க வென்றும், குடும்பக்கட்டுப்பாட்டை அனுமதித்துப் பெண்களின் நலத்தையும் வாழ்வையும் முன்னேற்றுவதற்கென்றும், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி நாட்டைப் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கென்றும்தான் அமெரிக்கா பாடுபடுகிறதென்று இவர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்யவும் கூடும். ஓவ்வொரு கிராமமாக, நகரமாக அழித்தேனும் இதைச் செய்து முடிப்பார்களாம். ‘நாங்கள் எல்லோருக்கும் அவசியம் தேவைப்படுபவர்கள். இங்கு வந்திருப்பதே ஆப்கான் மக்களுக்கு உதவி செய்வதற்காகத்தான். உலகப்படத்திலே ஆப்கானிஸ்தான் எங்கிருக்கிறதென்பதுகூட அநேகமான எமது அமெரிக்க மக்களுக்குத்தெரியாது. இருந்தும், நாங்கள் ஆப்கானியர்மீது அதீத அன்பு செலுத்துகிறோம்’- என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்!

இந்தக் கோழைகள் எதிலிருந்தோ ஆப்கானிஸ்தானைக் காப்பாற்றப்போவதாக மார்தட்டிக் கொள்ளும் அதே வேளை, வெள்ளை மாளிகையும் காங்கிரசும் சேர்ந்துகொண்டு அமெரிக்கரின் வயிற்றிலடித்து, அவர்களின் ‘மெடிகெயார்’ இலிருந்து 500 பில்லியன் டாலர்களைத் ‘திருடி’த் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. பணம் படைத்தவர்கள் மேலும் செல்வம் குவிக்கு முகமாக அமெரிக்காவுக்கு வெளியே வேலை வாய்ப்புக்களை வழங்கிவிட்டதினால், வேலையற்ற அமெரிக்கர்களுக்கான கொடுப்பனவுகள் வற்றிப்போயின. கடந்த பெப். 26 அன்று அமெரிக்க செனட்டினால் கொடுப்பனவுத் தொகையை ஒதுக்க முடியாது போய்விட்டது. வரவுசெலவுத்திட்டத்தில் 10 பில்லியன் துண்டு விழும் என்பதைக் காட்டி, இந்தக் கொடுப்பனவுத் தொகையை வெட்டிவிட்டார் ஜிம் பன்னிங் என்ற செனட்டர்.

பெருந்தொகையினரான அமெரிக்கர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அபகரிக்கும் முதலீட்டு வங்கிகளுக்கு வழங்கும் தொகையையும் முஸ்லிம் நாடுகளில் யுத்தம் செய்வதற்கென்று செலவிடப்படும் கோடானு கோடி டாலர்களுக்கு தொகையிடப்படாத, வெற்றுக் காசோலைகள் செல்வதை மட்டும் இந்த, அரச வருமானத்துறைக்குப் பொறுப்பான பன்னிங் என்பவர் கண்டுகொள்வதில்லை!

ஏற்கனவே ‘வால் ஸ்ட்ரீட்’ முதலீட்டு வங்கிகளிடம் தமது ஓய்வூதியத்தை இழந்தும் அமெரிக்காவுக்கு வெளியே வழங்கப்பட்டுவிட்டதனால் வேலை வாய்ப்புக்களை இழந்தும் தனித்தனியாக, ஒருங்கிணையாமல் வாழும் அமெரிக்கர்களின் பெயர்களில் இந்தப்பாரிய தொகைகளை எழுதிவிடுகிறார் பன்னிங்.

தமது மக்களையே ஏமாற்றும் அமெரிக்காவை யார்தான் நம்புவார்கள்? ஆப்கானிஸ்தானுக்கு முன்னேற்றமாம்! அங்குள்ள பெண்களுக்கு விடுதலையாம்! தமது செல்வத்தைச் செலவு செய்து, இரத்தம் சிந்திப் பாடுபட்டு அரைவாசி உலகிற்கு அப்பால் வாழும் ஆப்கானியர்களுக்கு உதவுவார்களாம்! எந்த மடையன் நம்புவான்?

பாகிஸ்தான் தனது மக்கள் மீதே போர் தொடுத்து, பலரைக்கொன்றும் இன்னும் பலரை, உடைமைகளை விட்டுவிட்டு ஓடச்செய்தும் விடுவது அமெரிக்காவின் கட்டளையினால்தான். இதனால் அதிகரிக்கும் இராணுவச் செலவினால் வரவுசெலவுத்திட்டத்தில் துண்டு விழுவதை ஈடு செய்ய முடியாதிருக்கிறது. மக்களின்மீது மேலும் வரிகளை விதிக்கும்படி அமெரிக்க கருவூலத்தின் (Treasury) துணைச்செயலர் நீல் வாலின், பாகிஸ்தான் அரசை வற்புறுத்துகிறார். அமெரிக்காவின் கைப்பாவை ஆசிப் அலி சர்தாரி அதனை நிறைவேற்றியும் வருகிறார். எல்லா நுகர் பொருட்கள்மீதும் சேவைகளின்மீதும் கடுமையான வரி விதித்துவிட்டிருக்கிறார். இவ்வாறு, தம்மீதான போருக்குத் தாமே பணம் செலவு செய்யும் துர்ப்பாக்கியம் பாகிஸ்தானிய மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

6 வாரங்களில் முடிந்துவிடும் என்று கூறப்பட்ட ஈராக்கிய ‘குறுகியகால’ யுத்தம், 7 வருடங்களைக் கடந்தும் ஓய்ந்தபாடில்லை. மேலும், ஈராக்கிய மக்கள் கொல்லப்படுவதும் அங்கவீனர்களாக ஆக்கப்படுவதும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டுமிருக்கிறது. ஈராக்கியர் அமெரிக்காவை வெறுப்பதை விட தமக்குள்ளேயுள்ள ஏனைய குழுக்களை வெறுப்பதையே பெரிதாகக் கருதுகிறார்கள். இதனால்தான் போர் ஒரு முடிவுக்கு வராமலிருக்கிறது. ஈராக்கில் நடக்கும் அதிகமான வன்முறை (யுத்தம்) ஸியா, சுன்னாக்களுக்கிடையேதான் நடக்கிறது. ஓரு சாரார் மறுசாராரை அழிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

தாம் சிறுபான்மையினராயிருந்தும், சதாமின் தலைமையின்கீழ் முழு ஈராக்கையும் ஆண்டுவந்தவர்கள் சுன்னா மக்கள். எனவே, சுன்னா மக்களைப் பழிவாங்க நல்லதொரு சந்தர்ப்பமாகவே அமெரிக்க ஆக்கிரமிப்பை கருதுகிறார்கள் பெரும் பகுதி ஸியாக்கள். முழுச்சனத்தொகையில் 20 வீதமான சுன்னா மக்கள், தமது பலத்தின் பெரும் பகுதியை ஸியாக்களுக்கு ஈடு கொடுப்பதிலேயே செலவு செய்கிறார்கள். இருப்பினும் இடைக்கிடை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அமெரிக்கர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தவும் தவறவில்லை.
இருப்பினும், கைக்ககூலியின் சக்தியை அறிந்த அமெரிக்கர், சுமார் 80,000 சுன்னா மக்களை வளைத்துத் தமது படையில் சேர்த்துக் கொண்டு தமக்கு ஏற்படும் அழிவைக்கட்டுப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா ஈராக் யுத்தத்தை வென்ற விதம் இதுதான். ஈராக்கியர், தமது சுதந்திரத்தை அமெரிக்க டாலருக்கு விற்று விட்டிருக்கிறார்கள்!

மிகச்சில ஆயிரங்களேயான சுன்னா மக்கள், அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை வெற்றி கரமாகத் தடுத்திருந்ததைப் பார்க்கும்போது, ஸியாக்களும் இவர்களுடன் சேர்ந்து இருந்திருந்தால், அமெரிக்காவை எப்போதோ அடித்து விரட்டியிருக்கலாம் என்பது புலனாகிறது. ஆனால், ஸியாக்களோ, சதாம் ஆட்சியில் தம்மை அடக்கியாண்டசுன்னாக்கள்மீது வஞ்சம் தீர்க்கவே கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதால், இது ஒருபோதும் நடக்காது.

10 இலட்சம் பேர் மடிந்துவிட்டிருப்பதும் 40 இலட்சம்பேர் உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்திருப்பதும், ஏராளமான புத்தி ஜீவிகள் நாட்டை விட்டு ஓடிவிட்டிருப்பதும், இவற்றினால் ஈராக் முற்றிலும் அழிந்து போயிருப்பதும், முஸ்லிம்கள் தமக்குள்ளேயே வஞ்சம் தீர்க்த்துக்கொண்டிருக்கும் கெட்ட கொள்கையினால்தான். தம்மை அடிமைப்படுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை வெறுப்பதைவிட, தம்மைத்தாமே வெறுத்துக்கொண்டும் தம்மைக்கண்டு தாமே பயந்துகொண்டும் இருக்கும்வரை முஸ்லிம்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்!

by Dr. Paul Craig Roberts
கட்டுரையாளர், டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ் அவர்கள், அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகையின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர்.

எடுத்தது : 
தமிழாக்கம்: அபூ ரிஃப்அத் for www.islamkalvi.com

ஒரு பயங்கரவாதியிடமிருந்து இன்னுமொரு பயங்கரவாதிக்கு !!

 
ourUmmah:கடந்த வியாழகிழமை கிழமை- 13.01.2011- உலக மனித ஒற்றுமைக்கு அச்சுறுதகாக இருந்து வரும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாடின் தலைவரான மெய்ர் டொகான் Meir Dagan- அந்த உளவு அமைப்பிலிருந்து ஓய்வு பெறப்போகும் நிலையில் அவரை இஸ்ரேல் அரசு கவ்ரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது
இதன்போது மொசாடின் தலைவரான மெய்ர் டொகானுக்கு முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி புஷ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தை முன்னால் பிரதமர் எஹுத் ஒல்மேர்ட் சத்தமாக அனைவருக்கும் வாசித்து காட்டியுள்ளார் அதில் நீங்கள் செய்த வற்றுக்கு நன்றி உங்களுடன் நான் செயல்பட்டதை எண்ணி பெருமை கொள்கின்றேன் “I thank you for what you’ve done,” Bush wrote. “It was an honor to work with you.” என்று எழுதப்பட்டது மட்டும் ஊடகங்களுக்கு வெளியிட்டப்பட்டுள்ளது அந்த மடலுடன் ஒரு நூலும் அனுப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன விரிவாக
அந்த நிகழ்வில் உரையாற்றிய மெய்ர் டொகான் நான் எது சிறந்ததே அதை செய்துள்ளேன் இந்த பொறுப்பு மிகவும் கடினமானதும் , சவால்கள் நிறைந்ததுமாகும் புதிய இதன் தலைவராக பதவியேற்க போகும் தமிர் பர்டோ -Tamir (Pardo) இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் அவர் வெற்றி பெற எனது உள்ளத்தால் வாழ்த்துகின்றேன்
இஸ்ரேல் நாட்டுக்கு எனது சேவை 43 வருடங்களை பூர்த்தி செய்கின்றது நான் 8 ஆண்டுகள் மொசாத் தலைவராக சேவை செய்துள்ளேன் நான் மூன்று பிரதம மந்திரிகளுக்கு கீழ் செயல்பட்டுள்ளேன் என்னை பிரதமர் ஏறியல் ஷரோன் மொசாட்டின் தலைவராக நியமித்தார் அதன் பின்னர் வந்த பிரதமர் எஹுத் ஒல்மேர்ட் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹு ஆகியோரின் நிர்வாகத்திலும் கடமையற்றியுள்ளேன்
நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் நீங்களும் இஸ்ரேலிய அரசும் எம்மை பாதுகாப்பும் , மகிழ்ச்சியும் உள்ள சுவர்கத்துக்கு அழைத்து செல்வீர்கள் என்று நம்புகின்றேன் என்றும் உலகில் பரத்து வாழும் புலம்பெயர் யூதர்களுடன் சிறந்த உறவை பேணுவீர்கள் என்றும் நன்புவதாகவும் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து தனது உளவுத்துறை உறுபினர்களை நோக்கி கருத்துரைத்துள்ள மெய்ர் டொகான் நாங்கள் மிகவும் அற்புதமான ஒப்பற்ற ஆண்களையும் பெண்களையும் கொண்ட அமைப்பு துணிவும், செயல்திறனும் இலக்கு பற்றிய உணர்வும் கொண்டவர்கள் பற்றி பேசுகின்றோம் அவர்கள் பாராட்டுகளையோ , பரிசுகளையோ துணை புரியும் அணியினரோ இன்றி இரவு பகலாக செயல்படுகின்றவர்கள் அவர்கள் யுத்த விமானங்களினதும் இராணுவத்தினதும் உதவிகள் இன்றை செயல்படுகின்றவர்கள் இன்னும் பெரும்பாலான சந்தர்பங்களில் அவர்கள் ஆபத்தின்போது மீட்சிக்கான எந்த வழியும் இன்றி செயல்படுபவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் உரையாற்றிய ஆக்கிரமிப்பு நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹு நான் உங்களுக்கு என் நன்றிகளை தெரிவிக்கின்றேன் இங்கு நீங்கள் ஈடுபட்ட நடவடிக்கைகள் பற்றி பேசமுடியாது !! ஆனால் நான் உங்களுக்கு நன்றி சொல்கின்றேன் அடையமுடியாத பல விடையங்களை நீங்கள் செய்தீர்கள் அனைவரின் சார்பிலும் நான் அதற்கு நன்றி சொல்கின்றேன்,
மேலும் அங்கு உரையாற்றிய நேதன்யஹு ஒரு வருடத்துக்கு முன்னர் நான் உங்கள் அலுவலகம் வந்தபோது ஒரு முதிய யூத மனிதர் நாசி படை முன் மண்டியிட்டு இருப்பதாய் காட்டும் படம் ஒன்றை பார்த்து உங்களிடம் இது யார் என்றேன் அதற்கு நீங்கள் இதுதான் உங்கள் அப்பா அவரை நாசி படைகள் கொன்றுவிட்டது என்றீர்கள் அந்த சம்மபவம் அன்று உங்களை பற்றியும் உங்களில் ஆழமான ஈடுபாட்டை பற்றியும் எனக்கு காட்டியதுடன் எவரும் எப் போதும் யூத மக்களை அழிக்கும் அச்சுறுத்தலுடன் செயல்படமுடியாது என்பதையும் எனக்கு உணர்த்தியது என்றார்,
புதியவராக பொறுப்பேற்கும் தமிர் பர்டோ துணை மொசாத் தலைவராக இதற்கு முன்னர் பொறுப்பு வகித்தவர் என்றும் மிகவும் கடும்போக்கு கொண்டவரென்றும் பார்பதற்கு சாதுவான பயங்கரவாதி என்றும் தெரிவிக்கபடுகின்றது

நன்றி:avar ummah 

துனீசியா, லெபனான் விவகாரத்தில் தலையிடாதீர் - நிஜாத் எச்சரிக்கை

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அமெரிக்கா, இஸ்ரேல், சில மேற்கத்திய நாடுகள் ஆகியன துனீசியா மற்றும் லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனோரீதியிலான போர்மூலம் துனீசியா மக்களின் உரிமைகளை பறிக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக அஹ்மத் நிஜாத் குறிப்பிட்டார்.

புதன்கிழமை அன்று மத்திய ஈரான் நகரமான யஸ்தில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினார் அவர்.

துனீசியாவில் 26 வயது காய்கறி வியாபாரியான இளைஞர் ஒருவரின் தற்கொலை மூலம் உருவான மக்கள் புரட்சி அந்நாட்டு அதிபரை நாட்டை விட்டு ஓடவைத்தது. தொடர்ந்து அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அஹ்மத் நிஜாத் இதனைக் குறித்து தெரிவிக்கையில், துனீசிய அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு தலையீடுக் குறித்து மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். மக்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். துனீசிய மக்கள் ஒரு இஸ்லாமிய அரசைத்தான் விரும்புகிறார்கள்.

அஹ்மத் நிஜாத் தனது உரையில் லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலை வழக்கை விசாரிக்கும் ஐ.நா தீர்ப்பாயத்தை கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகள் லெபனானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தவேண்டும். இது மிகவும் மோசமான சூழ்நிலை என அவர் குறிப்பிட்டார்.

ஈரான் கடந்த 32 வருடங்களில் பெற்ற வெற்றிகளை குறிப்பிட்ட நிஜாத், ஈரான் தற்பொழுது உலக நாடுகளிடையே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. அதன் எதிரிகள் மண்டியிடுகின்றனர் என குறிப்பிட்டார்.

செய்தி:PRESSTV

Wednesday, January 19, 2011

அஸிமானந்தா மனமாற்றத்திற்கு காரணமான கலீம் ஜாமீனில் விடுதலை

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு போலீசாரால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கலீமும் ஒருவர்.

மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.

இதனைத் தொடர்ந்து இக்குண்டுவெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளி அஸிமானந்தா கடந்த வருடம் நவம்பர் மாதம் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அஸிமானந்தா ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

எதிர்பாராத விதமாக அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இதே வழக்கில் கைதுச் செய்யப்பட்ட அப்துல் கலீம், அஸிமானந்தாவுக்கு சேவைபுரிய நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்துல் கலீமின் நன்னடத்தை மற்றும் போலி வழக்கில் அவர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை அறிந்துக்கொண்ட அஸிமானந்தா மனம் மாறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்புகளில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) அப்துல் கலீமுக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகையை ஈடாக வைத்து அப்துல் கலீமுக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல்கலீம் மருத்துவக்கல்லூரி மாணவராவார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களாக அவர் தனது படிப்பை தொடர முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் கலீம் போலீசாரால் ஒரு ரகசியமான பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து விடுதலையான அப்துல்கலீம் மீண்டும் செல்ஃபோனை சிறையிலிருந்த ஷேக் அப்துல் காதர் என்பவருக்கு அளித்ததாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த அப்துல் கலீம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "நான் பல மாதங்களாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை என்னுடன் சிறையிலிருந்த ஒருவர் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார். உடனே அவர் என்னை சந்தித்து பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர்தான் அவரைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். அஸிமானந்தா வேறு பெரிய நபர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என நான் கருதுகிறேன். நான் அவரிடம், என்னை போலீசார் கைதுச் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியது மற்றும் இரண்டுமுறை நார்கோடிக் அனாலிசிஸ்(உண்மைக் கண்டறியும் சோதனை) சோதனைக்கு உட்படுத்தியது ஆகியவற்றைத் தெரிவித்தேன். மேலும் நான் அவருக்கு தண்ணீர் பிடித்துக் கொடுப்பது உள்பட சில சேவைகளை புரிந்தேன். மேலும் அவர் சொல்வதை அமைதியாக கேட்டேன். இவையெல்லாம் அவருடைய மனதை தொட்டது. இதனால் அவருக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

Tuesday, January 18, 2011

கேரளாவில் மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்

சமுதாய நல்லிணக்கம் அதிகரிப்பதற்காக கத்தரை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த வர்த்தகரான சி.கே.மேனன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மஸ்ஜித் ஒன்றை கட்டவிருக்கிறார்.

1200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஹிந்து மதத்தைச் சார்ந்த நபர் கேரளாவில் முஸ்லிம்கள் இறைவனுக்கு வணக்கங்களை நிறைவேற்றும் மஸ்ஜிதை கட்டவிருக்கிறார் என சி.கே.மேனன் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்

சமூக தளங்களை தாக்கி வரும் கூப்பேஸ் வைரஸ் - ஜாக்கிரதை


பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் ஹாய் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.

இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும்.

இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.

ஏற்கனவே இந்த வைரஸ் புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் மேலே சொன்ன நடவடிக்கை களினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த கூப் பேஸ் வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் ரெஜிஸ்ட்ரியிலிருந்து நீக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸை அப்டேட் செய்து கம்ப்யூட்டரை முழுமையாகச் சோதனை செய்திடவும்.
 
nandri: கனி தமிழ் 

உலகின் 100 ஆபத்தான இணையத்தளங்கள் !!!

நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மி மோசமான வைரஸ்களை பரப்பு‌ம் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

இந்த பெயர்களில் உள்ள இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும் எச்சரித்துள்ளது.

அச்சிடமுடியாத அசிங்கமான பெயர்களைக் கொண்ட இந்த இணையதளங்கள் முழுக்க முழுக்க ஆபாச படங்களை தன்னிலே கொண்டுள்ளது, மேலும் காமம் பற்றிய ஆபாச பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மற்ற இணையதளங்கள் ஐஸ் ஸ்கேட்டிங், மான் வேட்டை, சமையல், சட்டச் சேவைகள் என்ற பெயர்களில் நடத்தப்படுகிறது.

இந்த இணையதளங்களை நாம் திறந்தாலே போதுமானது, ஹேக்கர்கள் கீ ஸ்ட்ரோக் லாகிங் மென்பொருளை வைத்து எந்த ஒரு கணினியிலிருந்தும் நம் சொந்த விவரங்களை திரட்டி விடுவர்.

சைமன்டெக் வெளியிட்டுள்ள இது போன்ற ஆபத்தான இணையதளங்களின் ஒரு சிலவற்றின் பெயர்கள் வருமாறு:

Sample of Dirtiest Web Sites:

* 17ebook.com
* aladel.net
* bpwhamburgorchardpark.org
* clicnews.com
* dfwdiesel.net
* divineenterprises.net
* fantasticfilms.ru

* gardensrestaurantandcatering.com
* ginedis.com
* gncr.org
* hdvideoforums.org
* hihanin.com
* kingfamilyphotoalbum.com
* likaraoke.com
* mactep.org

* magic4you.nu
* marbling.pe.kr
* nacjalneg.info
* pronline.ru
* purplehoodie.com
* qsng.cn

* seksburada.net
* sportsmansclub.net
* stock888.cn
* tathli.com
* teamclouds.com
* texaswhitetailfever.com
* wadefamilytree.org
* xnescat.info
* yt118.com

இவற்றை பற்றிய மேலும் அறிந்த்துகொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

நன்றி:  ஹனிதமிழ் ,கார்த்திக்

எல்லோரையும் எரித்துக் கொல்லுங்கள்" வெறிப்பிடித்த கூட்டம் கத்தியது.


புதுடெல்லி,ஜன.17:ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரசாரகரும், பயங்கரவாதியுமான சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்தான் என்ற உண்மை வெளியானபோது நாம் கவனிக்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ். இயக்க பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தை. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முக்கிய உறுபினர் சுனில் ஜோஷியை கொலைச் செய்யப்பட்டதற்கு பிறகு மத்திய பிரதேச மாநிலம் தேவாஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுதர்கேதாவில் உள்ள முஸ்லிம் வீடுகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் வீடுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து இரண்டு பேரை தீவைத்துக் கொளுத்திக் கொலைச் செய்துள்ளனர்.

ஷெராஜ் பீவியின் கணவர் 65 வயதான ரஷீதும், 27 வயதான மகன் ஜலீலும் கொலைச் செய்யப்பட்டவர்களாவர். இதர மகன்களான ராஷிஷிற்கும், அஷ்பாக்கிற்கும் குண்டடிப்பட்ட போதும் அவர்கள் மரணிக்கவில்லை. இவரது மகள் உடல் பாதி வெந்துபோன நிலையில் உயிர் தப்பியுள்ளார். ஜோஷியை கொலைச் செய்ததற்கு பிறகு அதனை காரணங்காட்டி முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்கி உள்ளனர். 2007 டிசம்பர் 29ஆம் தேதி ஜோஷி கொலைச் செய்யப்பட்ட அடுத்த நாளில் சுதர்கேதாவில் தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட ஹிந்து வெறியர்கள் கோபத்துடன் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை தூக்கிக்கொண்டு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். "எல்லோரையும் எரித்துக் கொல்லுங்கள்" என வெறிப்பிடித்த கூட்டம் கத்தியதாக ஷெராஜ்பீ நினைவுக் கூறுகிறார்.

"எனது வீட்டை சுற்றிவளைத்த ஹிந்துத்துவ வெறியர்களிடம், ஏன் எங்களை நீங்கள் தாக்குகின்றீர்கள்? என நான் கேட்டேன். பதில் கூறாத அவர்கள் எவரும் வீட்டிலிருந்து வெளியேறி விடாதவாறு வீட்டின் வெளியே கதவுகளை மூடினர்." ஹிந்துத்துவ வெறியர்களின் கூட்டத்தை வழிநடத்தியவாறு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வருவதை ரஷீத் வீட்டிற்கு வெளியேயிருந்து பார்த்துள்ளார்.

ஹிந்துத்துவ வெறியர்களில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜலீலை வெளியே இழுத்துச்சென்று தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதனை தடுப்பதற்கு சென்ற அஷ்பாக்கையும், ராஷிஷையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் ரஷீதின் இளைய சகோதரி ஐந்து வயது அஸ்மாவிற்கு உடலில் காயமேற்பட்டது. 90 சதவீதம் உடல் கருகிய ஜலீல் பதினொன்று தினங்களாக எம்.ஒய் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கடும் வேதனையை அனுபவித்து மரணித்துள்ளார்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்டு மறுதினம் ஹிந்துத்துவ அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன. முழு அடைப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த அக்கிரமத்தை நிகழ்த்தியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். ஜோஷியைக் கொலைச் செய்தது 'சிமி' அமைப்புதான் என போலீஸ் அறிவித்துள்ளது. இது ஹிந்துத்துவ வெறியர்களுக்கு மேலும் வெறியைத் தூண்டியுள்ளது. தாக்குதல்களுக்கெதிராக முஸ்லிம்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு பதிவுச் செய்தபோதும் போலீசாரும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் இணைந்து வழக்கை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

பான்வர்சிங், மஹிபால் சிங், ஓம்பிரகாஷ், ஜஸ்வந்த்சிங், ராஜ்பால் சிங் ஆகியோர்தான் தாக்குதலை நடத்தி முஸ்லிம்களைக் கொலைச் செய்த குற்றவாளிகள். வழக்கை வாபஸ் பெறாமல் உறுதியாக இருந்ததால் குற்றவாளிகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி தேவாஸ் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. வழக்கு தற்பொழுது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. குற்றவாளிகளின் அச்சுறுத்தலால ஷெராஜ்பீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதிமன்றத்திற்கு செல்லக்கூட முடியவில்லை.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

யுத்தம் மரணம் கச்சாமி' 'ரத்தம் மரணம் கச்சாமி!!!

சாமியார்கள் பிரேமானந்தா, நித்யானந்தா கூடவே சங்கரமடத்து ஜெயேந்திரனும் காமக்களியாட்டம் போட்டு உள்ளே போனபொழுது காவிகளிலும் பாவிகள் இருக்கின்றனரா? என மக்கள் வியந்து போயினர்.'சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்' என்ற பெயரிட்டே ஒருவர் நாட்டு மக்களின் பணத்தையெல்லாம் வாரிசுருட்டியதும் தற்போது சிறையில் அவர் ஓய்வெடுப்பதும் நமக்கு தெரிந்த சேதிதான்.

சன் தொலைக்காட்சி நித்யானாந்தாவின் லீலைகளை தொடர்ந்து ஒளிபரப்பிய பொழுது 'கர்மம் கர்மம்' என காரி உமிழ்ந்தவர்களும் உண்டு. 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற சுலோகத்தை கேட்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் 'யுத்தம் மரணம் கச்சாமிதான்' சாமியார்களின் வேலையோ என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரக்யாசிங் தாக்கூரும், அஸிமானந்தாவும் குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான பொழுது எழுந்த சந்தேகம் இது! இவ்வளவு காலமும் இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்களின் பழி பாவங்களையெல்லாம் சுமந்தது முஸ்லிம் சமுதாயமாகும். முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளேயும் பாசிசத்தின் வாடையை முகர்ந்துபோன சில புல்லுருவிகளும், அறிஞர்களின் போர்வையில் நாவண்மையை வெளிப்படுத்தும் சகலகலா வல்லுநர்களும் தமது சொந்த சமூக மக்களையே தீவிரவாதிகள் எனக்கூறி தங்களுக்கு ஏற்பட்ட அரிப்பை தீர்த்துக்கொண்டனர்.

ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறைக்குள்ளே வாடும்பொழுது முஸ்லிம் சமுதாயம் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற அதிகார-ஊடக வர்க்கத்தின் சாட்டையடிகளை நெஞ்சில் சுமக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. ரிக்க்ஷாவை இழுத்தும், மூடைகளை சுமந்தும் வாழ்க்கையை ஓட்டியவர்கள் கல்வியறிவை பெற்றவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் படித்த இளைஞர்களும் தீவிரவாதிகளாக்கப்பட்டனர். வகுப்புவாத வெறியிலும், மேல்தட்டு மேதாவித்தனத்திலும் ஊறிப்போன போலீசும், உளவுத்துறையும், ஊடகங்களும் ஒரே ரீதியிலான பொய்க் கதைகளை பரப்பிவந்தனர்.

கடந்த காலங்களில் மேல்ஜாதி வர்க்கத்தினருக்கும், மேல்தட்டு தரகு முதலாளிகளுக்கும் அடிமை சேவகம் புரிந்தவர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பொழுது இவர்களுக்கெல்லாம் சமூகத்தில் அந்தஸ்தையும், கண்ணியத்தையும் அளித்தால் நமது நிலை என்னவாகும்? என யோசித்த தீவிரவாத சிந்தனை கொண்ட ஹெட்கோவரும், கோல்வால்கரும் போன்ற மேல்ஜாதி திமிர்பிடித்த மேதாவிகள் ஆர்.எஸ்.எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கி கலவரங்கள், இனப்படுகொலைகள், குண்டுவெடிப்புகள் வாயிலாக முஸ்லிம் சமூகத்தை பூண்டோடு அழிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கினர்.

கொடூரமாக கொல்லப்படும் முஸ்லிம்கள் மீது எவருக்கும் பரிதாபம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களையே பலிகடாவாக்கி தீவிரவாத முத்திரைக்குத்தி சிறைக் கொட்டகைகளில் அடைத்தனர். அதிகார வர்க்கத்திலும், ஊடகத்திலும், இன்னும் பிற துறைகளிலும் ஊடுருவிய பாசிச வெறி இதற்கு பெரிதும் துணைபுரிந்தது. முந்தைய காலங்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பாவத்தை முஸ்லிம்கள் மீது சுமத்தினர். பலதார மணம், தலாக் போன்றவையெல்லாம் பெருங்குற்றங்கள் எனக்கூறி சமூக விரோதிகளாக முஸ்லிம்கள் சித்தரிக்கப்பட்டனர்.

இந்தியாவின் அதிகார மையங்களிலும், வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரே ஆறுதலாக மாறியது வளைகுடா நாடுகளே. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும், பெற்றோரின் கடன் சுமையை அடைப்பதற்காகவும், சகோதரிகளின் திருமணங்களை நடத்துவதற்காகவும் வளைகுடா நாடுகளின் பாலைவன மண்ணில் இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து அனுப்பிய காசுகளால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிலரின் வாழ்க்கை மேம்படத் துவங்கியது. இதனைக் கண்ணுற்ற பாசிச சக்திகள் சும்மா இருப்பார்களா? உடனே ஹவாலா, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்ற கட்டுக் கதைகளை கிளப்பி விட்டார்கள்.

தாடி வைப்பதும், ஹிஜாப் அணிவதும் கூட தீவிரவாதமாக சித்தரித்தது இந்தியாவின் உச்சநீதிமன்றம். ஆதாரமில்லாவிட்டாலும் பொதுமனசாட்சி எனக்கூறி முஸ்லிம் அதுவும் கஷ்மீரி முஸ்லிம் என்பதற்காக பாராளுமன்றத் தாக்குதலில் சிக்கவைக்கப்பட்ட அப்ஸல் குருவுக்கு தூக்குத் தண்டனையை உறுதிச்செய்தது அதே உச்சநீதிமன்றத்தின் ஹிந்துத்துவ மனசாட்சிதான். நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவ்விடங்களில் குர்ஆன் வசனங்கள், அரபு அல்லது உருது மொழியிலான கவிதைகள் என எழுதப்பட்ட காகிதங்களை விட்டெறிந்துவிட்டு பழியை லாவகாமாக முஸ்லிம்கள் மீதே சுமத்திவந்தனர்.

சொந்த சமுதாய முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் மஸ்ஜிதுகளிலும் குண்டுவைக்கும் மா பாதகர்கள் என்ற பெரும்பழியும் முஸ்லிம்கள் சுமக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை பயன்படுத்திக்கொண்டு அஜ்மீரில் குண்டுவைத்தவர்கள் தர்காவை விரும்பாதவர்கள் எனக் கட்டுக்கதையை பரப்பிவிட்டனர். அரவை இயந்திரத்தின் வயர்களும், பேட்டரிகளும் சி.டிக்களும் பெரும் ஆயுதங்கள் என அறிமுகப்படுத்தப்பட்டன.

மொபைல் ஃபோனில் அரபு மொழியைப் பார்த்துவிட்டு அல்காயிதா தீவிரவாதிகள் என தொழில்நுட்பம் தெரியாமல் கதையளந்தனர். வீட்டிலிருந்த பெண்களையும் தீவிரவாதிகள் என சித்தரித்தனர். பர்தாவுக்குள் குண்டுவைத்துக் கொண்டு தற்கொலைப் படையாக திரிவதாக பொய்க் கதைகளை பரப்பினர். இதையெல்லாம் இந்தியாவில் பெரும்பாலோர் நம்பவும் செய்தனர்.'அரசன் அன்றே கொல்வான் கடவுள் நின்றுக் கொல்வார்' என்ற பழமொழிக்கேற்ப உண்மை ஒரு நாள் வெளிப்பட்டது. ஹேமந்த் கர்காரே என்ற நடுநிலையான அதிகாரியின் மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.

கர்காரேயால் தங்களது திட்டங்கள் தவிடுபொடியாகிவிடும் எனக் கருதிய பாசிச கும்பல் அவருக்கு மிரட்டல் விடுத்தது. கடைசியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் கர்காரே. அவரது கொலைக்கு யார் காரணம் என்பது நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானதாகும். இடையில் தொய்வடைந்த விசாரணை ராஜஸ்தான் ஏ.டி.எஸ், என்.ஐ.ஏ, சி.பி.ஐ ஆகிய புலனாய்வு ஏஜன்சிகளால் சூடு பிடித்தது. ஏற்கனவே கைதுச் செய்யப்பட்ட காவி உடை தரித்த பிரக்யாசிங் என்ற சுவாமினியுடன் அஸிமானந்தா என்ற ஒரு சுவாமிஜியும் தற்பொழுது மாட்டிக்கொண்டார்.

சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு தகுதியுடைய இவர்களுக்கு சிறைச்சாலைகளில் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டன. கொலை வழக்கில் உள்ளே சென்ற காமக்கோடிக்கு காலைக் கடன்களை நிறைவேற்ற வாழை இலையை தேடி காவல்துறை அலைந்ததை பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். சுவாமிகள் என்ற பெயரில் மக்களை அண்டிப் பிழைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு சிறை வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள் கசக்க ஆரம்பித்தன. இதனால், அதிகாரிகளுடன் தங்களுக்கு வசதி வாய்ப்புகளைக்கோரி மோதலில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிந்துத்துவ பயங்கரவாதி அஸிமானந்தாவுக்கு சேவகம் புரிவதற்கு சிறை அதிகாரிகளால் அப்துல் கலீம் என்ற முஸ்லிம் சிறைவாசி நியமிக்கப்பட்டார். சுவாமிஜிக்கு பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொடுத்தல், காவி ஆடைகளை துவைத்துக் கொடுத்தல் என அவருக்கு தேவையான வேலைகளை செய்துக்கொடுக்க அப்துல் கலீமுக்கு எவ்வித தயக்கமும் ஏற்படவில்லை. சாதாரணமாக கைதிகள் அனைவரும் வரிசையில் நின்று உணவைப் பெற்று செல்லும்போது அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்காக வரிசையில் நின்று உணவைப் பெற்றுக் கொடுத்தார். தான் ஏற்றுக்கொண்ட மார்க்கம் எந்த மதத்தைச் சார்ந்த மனிதர்களுக்கும் சேவை புரிவதை தடுக்கவில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்ட அப்துல் கலீம் அஸிமானந்தாவுக்கு தொடர்ந்து சேவை புரிந்துவந்தார்.

இந்திய சமூகம் குண்டுவெடிப்புகளின் உண்மை நிலையை அறிவதற்குரிய வாய்ப்பாக அஸிமானந்தாவையும், அப்துல் கலீமையும் இறைவன் உரையாட வைத்தான். தான் நடத்திய குண்டு வெடிப்புகளில் ஒன்றான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் குற்றத்தை சுமந்துக் கொண்டு சிறைக் கொட்டகையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் அப்துல் கலீம் என்பதை அஸிமானந்தா புரிந்துக்கொண்டார். இந்தியாவில் பாசிச சக்திகளை உரமூட்டி வளர்ப்பதில் மன மகிழ்ச்சியடையும் இந்தியக் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களுக்கு துதிபாடும் சமுதாய துரோகிகளுக்கும் ஏற்படாத மனமாற்றத்தை இறைவன் அஸிமான்ந்தாவுக்கு அளித்தான் என்றே கூறலாம்.

இந்திய ஆட்சியாளர்களுக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, போலீசுக்கோ, ஊடகங்களுக்கோ இத்தகைய மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. குண்டு வெடிப்புகளை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கு காரணம் அஸிமானந்தா என்பதை அறிந்த பிறகும் அப்துல் கலீம் அவரிடம் எவ்வித கோபமும் கொள்ளவில்லை. அவருக்கு தொடர்ந்து சேவை புரிந்தே வந்தார் (இதனை இதுவரை உலகம் காணாத மிகப்பெரிய மத நல்லிணக்கம் எனக்கூறி முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் புளங்காகிதம் அடையலாம்.

ஒன்றரை வருடங்களாக சிறையில் வாடும் அப்துல் கலீமுக்கு வயதான பெற்றோர்களும், இளம் வயது மனைவியும், சிறு குழந்தையும் உண்டு. அப்துல் கலீம் சிறையில் வாடும்பொழுது வெளியே அவருடைய குடும்பம் கவனிப்பாரின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்துல் கலீமைப் போலவே மலேகான் குண்டுவெடிப்பில் கைதுச் செய்யப்பட்ட 32 அப்பாவி முஸ்லிம்களும் பல ஆண்டுகளாக சிறைக் கொட்டகையில் தங்கள் வாழ்க்கையை கழித்துவரும் அவலமும் நீடிக்கத்தான் செய்கிறது.

இன்று அப்துல் கலீமைப் போல் 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பொய்யாக தங்கள் மீது சுமத்தப்பட்ட தீவிரவாத வழக்குகளின் காரணமாக சிறைச்சாலைகளில் அநியாயமாக அடைக்கப்பட்டுள்ளனர். மொபைல் வியாபாரியான அப்துல் கலீம் 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஒன்றரை ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தபிறகும் மீண்டும் இதேக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சஞ்சல்குடா சிறையிலிருந்த பொழுதுதான் அச்சிறையில் அடைக்கப்பட்ட அஸிமானந்தாவுக்கு சேவை புரிய பணிக்கப்பட்டார் அப்துல் கலீம். 21 வயதான அப்துல் கலீமின் உயர்ந்த நற்குணம் அஸிமானந்தாவின் உள்ளத்தை உருகச் செய்தது என twocircles.net என்ற இணையதள பத்திரிகை கூறுகிறது.

தன்னுடன் வாழ்ந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஒழுக்க வாழ்வுடன் அப்துல் கலீமை ஒப்பீடுச்செய்த அஸிமானந்தாவுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. கடந்த 2010 டிசம்பர் 18-ஆம் தேதி அஸிமானந்தா புதுடெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் பொழுது அதனை தடுக்கத்தான் நீதிபதி முயன்றார். குற்றத்தை ஒப்புக்கொண்டால் மரணத்தண்டனை கிடைக்கும் என்பதையும் அஸிமானந்தாவுக்கு நினைவூட்ட நீதிபதி தயங்கவில்லை. இதில் இருந்து நீதி துறையில் எப்படி காவி பயங்கரவாதம் வூடுருவிட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைதுச் செய்யப்பட்டபோதும் அஸிமானந்தா கடந்த ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி ஹரித்துவாரில் தலைமறைவாக இருந்த பொழுது சி.பி.ஐ யால் கைது செய்யப்பட்டார். சுவாமி குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாரே என்ற கவலையில் ஆழ்ந்துள்ள நீதிமன்றங்களும், போலீசும், ஊடகங்களும் அப்துல் கலீம் போன்ற அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளைக் குறித்து தொடர்ந்து மெளன விரதத்தையே கடைபிடித்து வருகின்றன.

அப்துல் கலீமைப் போன்ற அப்பாவிகளும், களங்கமில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர்களும், நிரபராதிகளும்தான் இந்திய முஸ்லிம்களில் 95 சதவீதம் பேரும். அப்துல் கலீமைப் போன்ற மார்க்கப் பற்றுடைய, சேவை மனப்பான்மைக் கொண்ட, தேசத்தை மிக அதிகமாக நேசிக்கும், ஒருபோதும் தான் வாழும் தேசத்தை காட்டிக்கொடுக்க முயலாத இந்திய முஸ்லிம்களுக்கு பரிசாக இந்தியாவில் சிறைக் கொட்டகைகளை தயாராக்கி வைத்திருக்கிறோம் என்பதை இனிமேலாவது சிந்திப்பார்களா அரசும் அதிகாரவர்க்கங்களும்?

உண்மையான ஐ.எஸ்.ஐ ஏஜண்டுகளும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்று வரும் சுவாமிஜி, சுவாமியாரினிகளும் சுய விருப்பப்படி ஆட்டம் போடும்பொழுது அப்பாவி முஸ்லிம்களின் தலையில் ஐ.எஸ்.ஐ தொப்பியை அணிவிக்கின்றார்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கத்தினரும்.

மேற்குவங்காளத்தைச் சார்ந்த நபாகுமார் சர்க்கார் என்ற 59 வயது அஸிமானந்தாவின் 42 பக்கங்களைக் கொண்ட நீண்ட எவ்வித தூண்டுதலும் இல்லாமல் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இந்தியாவில் ஹிந்துக்களிலும், ஹிந்து புரோகிதர்களின் கூட்டத்திலும் பக்தியின் பெயரால் பயங்கரவாத செயல்களின் பாரம்பரியம் மறைந்திருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டு காட்டிய பிறகும் இந்தியாவில் ஹிந்துத் தீவிரவாதத்திற்கு எதிரான எதிர்ப்புகளின் சலனங்கள் கூட தென்படாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், தற்பொழுதும் போலீசும், ஊடகங்களும், என்.ஐ.ஏ போன்ற மத்திய புலனாய்வு ஏஜன்சிகளும் இருட்டில்தான் துளாவிக் கொண்டிருக்கின்றார்கள். கேரளாவில் நடந்த சில சம்பவங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அம்மாநிலத்தில் நடந்த கோழிக்கோடு குண்டுவெடிப்பு, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பு, களமசேரி பஸ் எரிப்பு, வாகமன் முகாம் போன்ற அரைத்த மாவையே திரும்பவும் அரைத்துக்கொண்டு சங்க்பரிவார பயங்கரவாதத்தை மூடிமறைக்க முயற்சிகள் நடக்கின்றன.

ஆனால், அம்மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் நாயர் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதியைக் குறித்து ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. 115 நபர்களின் உயிரைப் பறித்த வெடிக்குண்டு சம்பவங்கள் வெளிவரும்பொழுது எவரும் மரணிக்காத, எவருக்கும் காயத்தை ஏற்படுத்தாத சம்பவங்களில் ஊகங்களை பரப்பி பொதுமக்களை பீதிவயப்படுத்தும் தந்திரத்தை மேற்கொண்டுள்ளார்கள் அரசு-அதிகார-ஊடகத்துறை பாசிஸ்டுகள்.

ஒருவேளை, நாளை அஸிமானந்தா அப்ரூவராக மாறி விடுதலையாகலாம். இல்லையெனில், பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பைப்போல் நம்பிக்கையை காரணங்காட்டியோ அல்லது அப்ஸல் குருவைப்போல் ஹிந்து மனசாட்சியை பொது மனசாட்சியாக மாற்றியோ அஸிமானந்தாவை நீதிமன்றமே விடுவிக்கலாம். ஆனால், அப்பொழுதும் அப்துல் கலீம் உள்பட 1500க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வாடுவதைத்தான் இந்தியாவின் நீதிபீடங்கள் விரும்புகின்றனவா?

நன்றி :விமர்சகன்.sinthikkavum

இந்திய ராணுவமும் & முஸ்லிம்களும்: ஒரு சமூக பார்வை.

கடந்த ஆண்டு(2010) நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த முஸ்லிம்களின் விபரம்:
புதுடெல்லி,ஜன.17:இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதமாவர். ஆனால், இந்தியாவின் ராணுவத்தில் அவர்களின் எண்ணிக்கையோ வெறும் 3 சதவீதம்தான். கடந்த 2010 ஆம் ஆண்டு 187 ஜவான்கள் தங்கள் உயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 6.41 சதவீதம்பேர் முஸ்லிம்களாவர். அவ்வாறெனில் தங்களது சதவீதத்திற்கு அதிகமாகவே உயிர் தியாகம் புரிந்துள்ளனர் முஸ்லிம் ராணுவத்தினர். 12 முஸ்லிம்கள் தங்களது இன்னுயிரை தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர். அதில் 10 பேர்கள் தரைப் படையில் பணியாற்றியவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் கழிந்த பொழுதும் ராணுவத்தில் தேர்வுச் செய்யப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வரலாற்றாய்வாளர் டாக்டர் உமர் காலிதி அவர்கள் மிகுந்த ஆய்வுச் செய்து, ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்ட Khaki and Ethnic Violence(காக்கியும், இன வன்முறையும்) என்ற நூலில் இதுக்குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

ராணுவத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை எடுத்துரைத்தது இந்நூல். இது பாராளுமன்றத்தில் சூடான விவாதத்திற்கும் காரணமானது. 5 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்களின் பிற்போக்குத் தன்மையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட சச்சார் கமிஷன் அறிக்கை ராணுவத்திடம் முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு என கேள்வி எழுப்பிய பொழுது, மத ரீதியாக எந்த எண்ணிக்கையும் தரமாட்டோம் என ராணுவம் பதிலளித்தது.

ராணுவத்தில் ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான அறிக்கையும் இல்லை. 3 சதவீதம் என்பது பொதுவான ஊகமாகும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களில் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை 29 ஆயிரம் இருக்கலாம். ஆனால், இந்த எண்ணிக்கை ஜம்மு கஷ்மீர் காலட்படையில் இடம்பெற்றிருக்கும் 50 சதவீத முஸ்லிம்களை குறைத்தால் இன்னும் மிகக் குறைந்த சதவீதமாகும். இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ராணுவத்தில் அதிக அளவில் சிறுபான்மை மக்களை சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.
source:twocircles.net

Thursday, January 13, 2011

மேற்கத்திய நாடுகளுக்கான கடைசி வாய்ப்பு: ஈரான்

ஈரானின் அணுசக்தித் தொடர்பாக அடுத்தவாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெறும் பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கான கடைசி வாய்ப்பு என ஈரான் அறிவித்துள்ளது.

அணுசக்தித் துறையில் வலிமையடைவதற்கான பணிகள் ஈரானில் நடந்துவருகிறது என ஈரானின் அணுசக்தித்துறை தூதர் அலி அஸ்கர் சுல்த்தானி தெரிவித்தார்.

வருகிற 21,22 ஆகிய தேதிகளில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகியன பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றன. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இனி நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என அலி அஸ்கரை மேற்கோள்காட்டி இர்னா செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஈரானில் ஆராய்ச்சி ரியாக்டருக்கு தேவையான எரிப்பொருளை ஈரானே தயாரித்துள்ளது. ஈரானுக்கு வெளியே யுரேனியத்தை அனுப்புவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைக்காது என அலி அஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் ரியாக்டருக்கு தேவையான எரிபொருளுக்கு பதிலாக யுரேனியத்தை ஈரான் அளிக்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது ஈரான் சொந்தமாக எரிபொருளை தயாரிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய அதிகாரிகள் - மக்கள் கொந்தளிப்பு

ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகிலுள்ள ஜங்புராவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மஸ்ஜித் ஒன்றை டெல்லி வளர்ச்சி ஆணைய(டி.டி.எ) அதிகாரிகள் அநியாயமாக இடித்துத் தள்ளியுள்ளனர். இச்சம்பவத்தைக் கேள்விபட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த டி.டி.எ அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

டி.டி.எவின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.

சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க டி.டி.எ அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.

நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக டி.டி.எவின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம் அஹ்மத் புகாரி தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்குள் டி.டி.எ இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுதும் மோதல் சூழல் நிலவுகிறது.