Wednesday, August 10, 2011

அமெரிக்க ஹெலிகொப்டர் வீழ்ந்தது 31 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகொப்டர் வீழ்ந்ததில் 31 அமெரிக்க விசேட சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் ஒன்று நடாத்திவிட்டு திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆப்கான் தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் ஹெலிகொப்டர் வீழ்ந்தமைகான காரணம் அமெரிக்க, ஆப்கான் தரப்பால் தெரிவிக்காவிட்டாலும், தாலிபான் அமைப்பு தாம் அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.
இதில் 31 அமெரிக்க சிப்பாய்களும் 7 ஆப்கானிஸ்தான் கர்சாயின் சிப்பாய்களும் கொல்லபட்டுள்ளனர். 2001 ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதல் ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் இழந்ததில்  இந்த ஹெலிகொப்டர் இழப்பு பெரிய இழப்பாக்க கருதப்படுகின்றது. அதேவேளை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசின்’ (பொம்மை) ஜனாதிபதி ஹமீத் கர்சாய் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அமெரிக்க படைகளுக்கும் உயிர் இழந்த படையினரின் குடும்பத்தினருக்கும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ISI-யுடன் தொடர்பா?

அமெரிக்க கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ISI ஏஜண்ட் என அமெரிக்காவில் FBI கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கஷ்மீர் சுதந்திரத்திற்காக பாடுபட ISI அளித்த பணத்துடன் கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படும் டாக்டர்.குலாம் நபி ஃபாய் உடன் கஷ்மீர் தொடர்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில் சுப்ரமணியம் சுவாமி கலந்துக்கொண்டுள்ளார்.

2003-ஆம் ஆண்டு வாஷிங்டனில் அமெரிக்க செனட் கட்டிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய சுப்ரமணிய சுவாமி கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்தினார். குலாம் நபி ஃபாயியின் தலைமையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கஷ்மீர் அமெரிக்க கவுன்சில்தான் கருத்தரங்கை ஏற்பாடுச்செய்தது. ஆனால் ISI ஏஜண்ட் என தெரியாமல் கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக சமாளிக்கிறார் கோமாளி சுவாமி. இந்நிகழ்ச்சியைக் குறித்து இந்திய தூதரகத்தில் விசாரணைச் செய்தபோது இந்தியாவிற்கு எதிரான அமைப்பு என பதில் கிடைத்ததாகவும், ஆனால் ISI தொடர்பு கிடையாது என தெரிவித்ததாகவும் சுவாமி கூறுகிறார்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் வகையில் அரசியல் புகலிடம் இல்லாமல் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்துள்ள சுப்ரமணியம் சுவாமி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தை கிளப்பிய வேளையில் ISI நடத்திய நிகழ்ச்சியில்  கலந்துக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

சுப்ரமணியம் சுவாமி முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான கட்டுரையில், சில ஆண்டுகளில் தாலிபான் பாகிஸ்தானை தனது ஆளுகைக்கு கொண்டுவருமாம். பின்னர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம்கள் முயல்வார்கள் என எழுதியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சட்டத்தையும், சட்டத்தையும் மீறி ஹிந்துக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைய முன்வர வேண்டுமாம். முஸ்லிம்களின் நோக்கம் ஹிந்துக்களை கொல்வதும், கோயில்களை தகர்ப்பதும்தான். இந்தியா ஹிந்து நாடு என அங்கீகரிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்- என தொடர்கிறது அரசியல் அனாதையாகி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் அனுதாபத்தை பெற துடிக்கும் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரை.

இக்கட்டுரையின் பெயரில் சுப்ரமணிய சுவாமியின் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தது

பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்

 10 Aug 2011 indexpic2  மும்பை:தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க பாலிக்ராஃப் டெஸ்ட்(பலமுனை வரைவி சோதனை), ப்ரெயின் மேப்பிங் உள்ளிட்ட உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒன்பது பேர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களை விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என என்.ஐ.ஏ கடந்த வாரம் மோக்கா சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.  மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸிடமிருந்து இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பங்கினைக் குறித்து அறிய விஞ்ஞான ரீதியிலான சோதனை தேவை என என்.ஐ.ஏவின் வழக்கறிஞர் ரோஹினி ஸாலியன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஞ்ஞானரீதியிலான பரிசோதனைக்கு தயார் என குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் சார்பாக அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவித்தார். தங்களது நிரபராதி தன்மையை தெளிவாக்கிய பிறகும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச்செய்ய மறுப்பு தெரிவிக்கும் அதிகாரிகளின் நிலைபாட்டிற்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்துவருகிறது.