Thursday, December 15, 2011

அமெரிக்க உளவு விமானம் தவறி விழ வில்லை தரை இறக்கினோம் :Video



அமெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலானநுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை மறைமுகமாக அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. தரையிறக்கும் கட்சிகளை ஈரான் வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி இப்படி கூறுகிறார் எமது US RQ-170 உளவு விமானம், ஈரானில் விழுந்து விட்டது. அதை, ஈரானியர்கள் கைப்பற்றியுள்ளனர். அந்த விமானத்தை எம்மிடம் திருப்பித் தரவேண்டும் என்று தெரிவிக்கிறார்.
அதேபோன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹலாரி கிளின்டன், இது குறித்து கூறுகையில், “ஈரான் சிறை பிடித்துள்ள, அமெரிக்க விமானத்தை திருப்பித் தருமாறு பலமுறை, ஈரான் நாட்டிடம் கோரி உள்ளோம். ஈரான் நாட்டின் தற்போதைய நடத்தை, அனைவருக்கும் தெரியும். எனவே, அந்நாட்டிடம், நாங்கள் இதற்கு மேல் எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். சேற்றில் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையாம் !!