அமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலானமுஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” . போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை அம்பலமாகியுள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது என்று wired.com என்ற இணையத்தளம் தான் கைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதேபோன்று யுத்தம் நிரந்தரமானது என்றும் சமாதானம் தற்காலிகமானது என்று இஸ்லாம் கூறுவதாகவும் முஸ்லிம்கள் அதை விசுவாசிப்பதாகவும் “War is the rule and peace is only temporary” குறிபிடுகின்றது. மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் , யூதர்களைவிடவும் வன்முறை நிறைந்தவர்கள். இவை போன்ற முஸ்லிம்களை மிகவும் மோசமான விரோதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பயிற்சியைத்தான் அமெரிக்க FBI தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றமை அம்பலமாகியுள்ளது.
இஸ்லாமிய நடைமுறையான நன்கொடை வழங்குதல் யுத்ததிற்கு பணம் சேகரிக்கும் நடைமுறைதான் என்றும் அந்த பயிற்சி கோவை குறிபிடுகின்றது .
அமெரிக்காவில் முஸ்லிம்கள் பல ஒடுக்கு முறைகளை சந்திக்கின்றனர், பலர் போலியான குற்றசாட்டின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அமெரிக்காவின் உள்நாட்டு உளவு பிரிவான FBI க்கு தகவல் வழங்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர் , மறுப்பவர்கள் போலியான குற்றசாட்டுக்களில் வதை முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில் மஸ்ஜித்துகள் பல அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றது , இரகசிய கமராக்கள் பொருத்தப்பட்டு அவை கண்காகிக்கபடுகின்றது. மஸ்ஜிதுகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றது இன்னும் மஸ்ஜிதுகள் முற்றாக எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் கடத்தல், கைது, விசாரணை ,சித்திரவதை, கொலை போன்ற அமெரிக்க அரச பயங்கரவாத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் இவற்றை அமெரிக்காவின் மனித உரிமைக்கான அமைப்புகள் கூட பெரிதாக கண்டுகொள்ளவதில்லை. அமெரிக்காவில் பல மஸ்ஜிதுகள் எரிக்கப்பட்டுள்ளன. பல மஸ்ஜித் இமாம்கள் கைதாகி சிறைகளில் வதையுருகின்றனர். சில இமாமகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் வரிசையில்
கடந்த 2009 அக்டோபர் 28ஆம் திகதி அமெரிக்க உள்நாட்டு உளவு துறையான FBI யினால் லுக்மான் அமீன் அப்துல்லாஹ் என்ற டெட்ராயிடில் நகர மஸ்ஜித் இமாம் 21 தடவைகள் சுடப்பட்டு கொல்லபட்டார் என்பது சிறந்த உதாரணம். அரசுக்கெதிராக தாக்குதல் நடத்த மக்களை தூண்டிவிடுகிறார் என்ற போலியான குற்ற சாட்டு இவர்மீது சுமத்த பட்டிருந்தது. இவர் தேவையற்ற முறையில் சுட்டுகொள்ளபட்டார் என்பது பின்னர் வெளியாகியது.
இதேபோன்று அமெரிக்க இராணுவ புலனாய்வு இயந்திரங்களினால் வதைக்கபட்ட டாக்டர் ஆபியாவை அமெரிக்க நீதித்துறை 86 வருடங்கள் சிறையில் தள்ளியது இவரின் எந்தவொரு விடையத்திலும் கூட சர்வதேச அளவில் புகழ் பெற்ற அமெரிக்கவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பான அமஷ்டி இன்டர்நேஷனல் கூட வாயை திறக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.
அதேபோன்று தாரிக் மேஹன்னா என்ற டாக்டர் இவர் 28 வயது நிரம்பிய இளம் முஸ்லிம் அமெரிக்க டாக்டர் இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் உயர்கல்வி கற்று Phd பட்டம் பெற்ற ஒரு புத்திஜீவி இவரின் இஸ்லாமிய துடிப்பு , சமூக சேவை , மாற்று மத சமூகங்கள் மத்தியில் இவரின் சமாதான செயல்பாடுகள் போன்றவற்றால் மிகவும் அறியப்பட்டவர் இவரிடம் இருந்த சமூக தொடர்பாடல், முஸ்லிம் சமுகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு, முஸ்லிம் வாலிபர்களுடன் இவருக்கு இருந்த உறவு என்பன அமெரிக்காவின் கழுகு கண்களான FBI உளவு துறைக்கு தேவைபட்டது.
பல தடவைகள் தாரிக்கை அணுகிய FBI தமக்கு தகவல் வழங்கும் ஒருவனாக வேலை செய்யுமாறு கேட்டது முஸ்லிம் சமுகத்தின் இருக்கும் இஸ்லாமிய துடிப்புள்ள வாலிபர்கள் பற்றி தமக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டது அதற்கு தாரிர் திடமாக மறுத்துவிட்டார். இதன் காரணமாக இவரை கடந்த 2008 ஆம் ஆண்டு சிறையில் தள்ளியது இவர் நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 696 நாட்கள் என்பது குறிபிடத்தக்கது.
இவ்வாறான ஆயிரக்கணக்கான சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்த வண்ணமுள்ளது. மேலே சொன்னவை சில உதாரணங்கள் மட்டும்தான். இதற்கான பிரதான காரணம்தான் தற்போது வெளியாகியுள்ள FBI பயிற்சி முறை அமெரிக்க அரச பாதுகாப்பு தரப்பு அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதிகளின் அனுதாபிகள் என்றும் போதிக்கின்றமை.
இந்த கீழ்த்தரமான பயிற்சி முறை அமெரிக்க பொது மக்களையும் முஸ்லிம்கள் மீது தூண்டிவிட காரணமாக அமைகின்றது என்பதை ஊகிக்க முடியும் , அமெரிக்க அரசாங்கம் அரச முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாத்தை ஊட்டி வளர்கின்றது என்பதுதான் தற்போது வெளியாகியுள்ள தகவல் சொல்லும் செய்தி. இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அமெரிக்காவின் உண்மை முகம் தெரிந்த சிலருக்கு இதுவொன்றும் புதிய செய்தியல்ல.
நன்றி
OurUmmah:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோதரரே
ம்ம் சத்தியம் வேல்லட்டும்
@ஹைதர் அலி
ReplyDeleteநன்றி சகோ.