மும்பை,செப்.4:மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துதுவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நேற்று மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நாசிக்கில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்று வந்தார்.
இந்நிலையில் இவ் வழக்கை மீண்டும் மொக்கா சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் மும்பை சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். ஆனால் பிரக்யாசிங் தன்னை நாசிக் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார். மொக்கா கோர்ட் சிறப்பு நீதிபதி இக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்
0 comments:
Post a Comment