Tuesday, December 28, 2010

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி
இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த போர்ச் சித்திரத்தை ஈராக் ஆவணங்கள் கொடுக்கின்றன.
By Jerry White 

அக்டோபர் 22ம் திகதி, தவறுகளை வெளிப்படுத்தும் வலைத்தள அமைப்பாக விக்கிலீக்ஸ் கிட்டத்தட்ட 400,000 அமெரிக்க இராணுவ உள்ளறிக்கைகளை வெளியிட்டது. இவை ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி கண்டனத்திற்கு ஆளாகின்ற சான்றுகளை அளிக்கின்றன.

வரலாற்றிலேயே இராணுவ இரகசியத் தகவல்களின் மிகப் பெரிய கசிவானஈராக்கியப் போர்க் குறிப்புக்கள்உள்ளடக்கியுள்ள SIGACT அல்லது முக்கியமான நடவடிக்கை அறிக்கைகள் அமெரிக்க இராணுவத்தினர் ஜனவரி 2004 ல் இருந்து டிசம்பர் 2009 வரை பதிவு செய்தவற்றைக் கொண்டுள்ளன. இவை ஈராக்கியப் போர்க் களத்தில் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் பார்த்து, கேட்ட விரிவான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன, அமெரிக்க அரசாங்கம் மட்டுமே இதுவரை அறிந்திருந்த இரகசிய வரலாறு பற்றி உண்மையான பார்வை இப்பொழுது முதல் முதலாகக் கிடைக்கிறது.என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆவணங்களில் வெளிப்பட்டுள்ள முக்கிய தகவல்களில் இதுவரை வெளியிடப்படாத 15,000 சாதாரணக் குடிமக்கள் இறப்புக்கள் மற்றும் அமெரிக்க துருப்புக்கள் இராணுவச் சோதனை சாவடிகளில் குறைந்தது 834 பேர்களில் 30 குழந்தைகள் உட்பட 681 பொதுமக்களை கொன்றதும் அடங்கும். இந்த ஆவணங்கள் ஈராக்கிய கையாட்களின் படையும் பொலிசும் கைதிகளைச் சித்திரவதை செய்ததில் அமெரிக்க உடந்தை பற்றியும் விவரிக்கின்றன. பார்க்கவும்: “The WikiLeaks documents and the rape of Iraq ”)


இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதற்கு மற்றும் முன்பு ஆப்கானியப் போர் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஈராக்கிய பொதுமக்களை அமெரிக்க Apache ஹெலிகாப்டர் குழு 2007ல் கொன்றதன் ஒளிப்பதிவு காட்சி ஆகியவற்றை வெளியிட்டதற்கும் விக்கிலீக்கஸ் மற்றும் அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயும் அமெரிக்க இராணுவம், ஒபாமா நிர்வாகம் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் தலைமையிலான செய்தி ஊடகத்தால் கடும் தாக்குதலுக்கு உட்பட்டனர். வலதுசாரிச் செய்தியாளர் Jonah Goldberg, சிக்காகோ ட்ரிப்யூனில் கடந்த வார இறுதியில் அசாங்கே இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறார்என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

கடந்த வாரம் உலக சோசலிச வலைத் தளம் விக்கிலீக்ஸின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஈராக்கியப் போர்க் குறிப்புக்கள் வெளியீடு அவற்றிற்கு அமெரிக்க அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் விடையிறுப்பு பற்றி உரையாடியது.

ஒரு சுயாதீன ஐஸ்லாந்து செய்தியாளரான ஹ்ரப்ன்சன் முதலில் விக்கிலீக்ஸுடன் 2009ல் தொடர்பு கொண்டிருந்தார். அப்பொழுது வலைத் தளம் பல குற்றத்திற்குட்படக்கூடிய ஆவணங்களை வெளியிட்டது. அவை நாட்டின் முக்கிய நிதிய அமைப்புக்களில் ஒன்றான Kaupthing Bank சரிவிற்கு வகைசெய்த நிகழ்வுகளைப் பற்றி இருந்தன.
விக்கிலீக்ஸில் சேர்ந்த பின்னர் ஹ்ர்ப்ன்சன் Apache ஹெலிகாப்டர் தாக்குதல் பற்றிய உண்மை அறியும் விசாரணையில் சேர்ந்தார். அத்தாக்குதல் பாக்தாத்தில் இரு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களைக் கொன்றிருந்தது. வீடியோ வெளியிடப்படுவதற்கு முன்பு இன்னும் அதிக தகவல்களைச் சேகரிக்க நான் ஒரு புகைப்படக்காரருடன் பாக்தாத்திற்குச் சென்றிருந்தேன். சிறிய வாகனத்திற்கு என்ன நடந்தது என்று நாங்கள் கண்டுபிடிக்க முடிந்ததுடன், இரண்டு குழந்தைகள் இருந்த அந்த வாகனம் எவ்வாறு துண்டுகளாகச் சிதறியது மற்றும் அதில் தங்கள் தகப்பனாரை இழந்த அத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் பேட்டி காணமுடிந்தது. 


நாங்கள் அக்குழந்தைகளின் விதவை தாயையும் சந்தித்தோம். அந்த வெளியீட்டைப் பற்றிய ஒரு விசாரணைப் பணியாகும் அது.
புதிதாக ஈராக் போர் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றிக் கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: அவற்றின் முழு நிலையில் அவை ஈராக்கியர்கள் என்ன அனுபவித்தார்கள் என்று அமெரிக்க இராணுவக் கண்ணோட்டத்தில் இருந்து கிடைக்கும் முழுக்காட்சியாகும். இந்தச் செய்தித் தகவல்கள் இதுவரை மறைக்கப்பட்டு இருந்தன. தவறான செயல்கள் நடந்தது என்பதற்குக் குறிப்புக்கள் உள்ளன, ஒருவேளை அவை போர்க்குற்றமாகக் கூட இருக்கலாம். 


இந்த ஆவணங்கள் பொதுப் பரிசீலனைக்கு வந்திருப்பது பொது மக்களுக்கு தகவலைப் பற்றிய பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. மேலும் குற்றச்சாட்டுக்கள் இதையொட்டி விசாரிக்கப்படலாம். இதை உயர்கல்வியாளர்கள் தான் மீண்டும் பகுப்பாய்வதற்கு வருவர்.
மிக கண்டனத்திற்குரிய தகவல்களில் ஒன்று எப்படி அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கிய இராணுவம் மற்றும் பொலிஸ் படையினர் ஈராக்கியர்களை சித்திரவதை செய்வதைக் குறுக்கிட்டு தடுக்கவில்லை என்பதாகும் என ஹ்ரப்ன்சன் கூறினார். அமெரிக்க சிப்பாய்கள் 2005ல் இருந்து 2009 வரை 1,300 பேருக்கு மேல் சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் கொடுத்துள்ளனர். இதில் அடி உதைகள், தீயினால் சுடுதல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல், இயற்கைக்கு மாறான பாலியல் சித்திரவதை, பாலியல் பலாத்காரம் மற்றும் காவலில் இருப்பவர்கள் கொலைசெய்யப்படுதல் ஆகியவை அடங்கும். அமெரிக்கத் துருப்புக்கள் கைதிகள் சித்திரவதை பற்றி விசாரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஏனெனில் இந்த சம்பவங்கள் அமெரிக்கத் துருப்புக்களுடன் தொடர்பற்றவை.

ஹ்ரப்ன்சன் கூறினார்: கடந்த சில நாட்களாக பலர் விடுக்கும் அறிக்கைகளுடன் நான் உடன்படுகிறேன். இவற்றுள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஆணையாளர் மற்றும் பிற சர்வதேச அமைப்புக்களும் உள்ளன. இத்தகவல்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும், பொறுப்பானவர்கள் விடையிறுக்க வேண்டும். எவர் பொறுப்பு என்று சில குற்றச்சாட்டுக்கள் பற்றி முடிவிற்கு வருவது முன்கூட்டிய செயலாகும். ஆனால் இது கட்டளைச் சங்கிலியின் உயர்மட்டம் வரை செல்ல வேண்டும்.

விக்கிலீக்ஸ் தான் அம்பலப்படுத்தியவை அமெரிக்க அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களை அத்தகைய நடைமுறைகளை நிறுத்த அழுத்தும் கொடுக்கும் என்று நம்புவதாகக் கூறினார். அரசாங்கங்களைப் பொறுப்பாக்குவது என்பது வருங்காலத்தில் தவறுகளைத் தடுக்கும் விளைவுகளை கொடுக்கக் கூடும். அதுதான் பொதுக் கோட்பாடு, எந்த நாட்டிலும் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்க வழி. இரகசியம் என்பது ஊழலுக்கு காரணமாவதுடன், ஒருவேளை தவறுகளைச் செய்யவும் உதவும்என்று அவர் WSWS இடம் கூறினார்.

உண்மையில் இந்த வெளியீடுகளானது அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து கண்டனம், அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல் என்பவற்றை தவிர வேறு எதையும் தூண்டவில்லை. பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெப் மோரெல் ஈராக்கியப் போர் ஆவணங்கள் கசியவிடப்பட்டுள்ளதை கண்டித்து இவை பயங்கரவாத அமைப்புக்களுக்குஒரு நன்கொடை, “நம் துருப்புக்களின் உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்துகின்றதுஎன்றார். இக்கருத்துக்கள் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகளாலும் எதிரொலிக்கப்பட்டன.

அமெரிக்கக் குற்றச்சாட்டுக்களுக்கான கசிவுகள் உயிர்களை ஆபத்திற்கு உட்படுத்துகின்றன என்பதற்கு ஹ்ர்ப்ன்சன் விடையிறுத்தார். இக்கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. சில மாதங்கள் முன்பு ஆப்கானிய போர் நாட்குறிப்புக்கள் வெளியிடப்பட்டபோது இதேபோன்ற கூச்சல்தான் எழுப்பப்பட்டது. இது பென்டகனிடம் இருந்து வருகிறது என்பதைக் கூறத்தேவையில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிலுள்ள செய்தி ஊடகம் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் ஆகஸ்ட் 16 அன்று செனட்டில் விடுத்த அறிக்கைகளைப் பற்றி அறிந்தது. அப்பொழுது அவர் ஆப்கானிய நாட்குறிப்புக்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்புக்கள் எதையும் சமரசத்திற்கு உட்படுத்திவிடாது என்பதை ஒப்புக் கொண்டார். அப்படி இருந்தும் அவர்கள் இத்தகைய கூற்றுக்களைத் தெரிவிக்கின்றனர், ஆனால் ஓரிரு உதாரணங்கள் கூட அவற்றை நிரூபிக்கக் கொடுக்கவில்லை.

அமெரிக்க செய்தி ஊடகத்தின் விடையிறுப்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, ஹ்ர்ப்ன்சன் கூறினார்: எனக்குச் சற்று வியப்புத்தான். அமெரிக்காவில் செய்தி ஊடகம் தகவல் அளிக்கும் முறை பெரும்பாலான மேலை நாடுகளிலிருந்து வேறுபட்டுள்ளது. உண்மை நிகழ்வைக் கூறுவது விமர்சனங்களை கொண்டுவருகிறது. அமெரிக்காவில் எங்கள் செய்தி ஊடகப் பங்காளியான New York Times இடம் கூட நாங்கள் அதைத்தான் பார்த்தோம்.


டைம்ஸ் தகவல் கொடுக்கும் முறை ஆவணங்கள் பற்றித் தெரிய வாய்ப்புள்ள மற்றச் செய்தி ஊடகப் பங்காளிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபாடானது. செய்தித்தாட்களின் முதல் பக்கத்தைப் பார்க்கும் எவரும் இதை ஒப்பிட்டுக்காணலாம்.
இந்த வேறுபாடு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு ஹ்ரப்ன்சன் கூறினார்: இதைப் பற்றி நான் ஊகம் தான் செய்யமுடியும். ஏனெனில் அமெரிக்க செய்தி ஊடகச் சூழ்நிலை பற்றி எனக்குத் தெரியாது. முக்கிய பிரச்சினைகள் அம்பலப்படுத்தப்படுவது பற்றிய நிலைப்பாட்டில் அரசாங்கத்தின் எதிர்ப்பு மற்றும் முக்கிய செய்தி ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் இது தொடர்பு உடையதா என்று ஒருவர் வியப்படையவேண்டும்.

ஹ்ர்ப்ன்சன் தான் சமீபத்தில் முன்னாள் இராணுவப் பகுப்பாய்வாளர் டானியல் எல்ஸ்பேர்க்கைச் சந்தித்ததாகக் கூறினார். அவர் 1971ல் பென்டகன் ஆவணங்களை (Pentagon Papers) வெளியிட்டார். அந்த மிக இரகசிய ஆய்வு தொடர்ந்த அமெரிக்க நிர்வாகங்கள் வியட்நாம் போர் தொடங்குதல், விரிவாக்கப்படுதல் பற்றி முறையாகக் கூறிய பொய்களை அம்பலப்படுத்தியது.
லண்டனில் நடைபெற்ற எங்கள் செய்தியாளர் கூட்டத்திற்கு அவர் வந்தபோது நான் டேனியல் எல்ஸ்பேர்க்கைப் பார்த்தேன். 1970 களைப் பற்றியும் நியூயோர்க் டைம்ஸ் இன்னும் மற்ற செய்தித் தாள்கள் எப்படி அச்சமின்றி அப்பொழுதிருந்த நிக்சன் நிர்வாகத்தை எதிர்த்து நின்றன என்று பார்க்கும்போது, மக்களுக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே ஒரு வலுவான நட்பு இருந்தது. இப்பொழுது இது இல்லை, 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தரத்தில் இல்லை. 


செய்தி ஊடகம், இராணுவத் தொழில்துறைக்கு மிக நெருக்கமாக உள்ளது. பொது மக்களின் மாறும் மன உணர்வை அவர்கள் பின்பற்றுவதில்லை, மக்களோ பெருகிய முறையில் போர்களை எதிர்க்கின்றனர்.
உண்மையில் டைம்ஸ் இராணுவம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளின் வெட்கமற்ற கருவியாகத்தான் அசாங்கேயைத் தூற்றுவதுடன் அமெரிக்கப் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்சை நடத்தும் முறை ஆகியவற்றில் அதனை ஒரு பகுதி குற்றமுள்ள அமைப்பாகத்தான் நடத்துகின்றன.
அக்டோபர் 23 அன்று லண்டனில் விக்கிலீக்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் எல்ஸ்பேர்க் விக்கிலீக்ஸின் நிறுவனர் மூன்று கண்டங்களில் மேலை உளவுத்துறைப் பிரிவினரால் பின்தொடரப்படுகிறார்என்றார். ஒபாமா நிர்வாகம் அசாங்கே மீது குற்ற விசாரணை நடத்துவதைத் தானே ஜனாதிபதி ரிச்சர்ட் எம். நிக்சனால் நடத்தப்பட்டதுடன் ஒப்பிட்டார். குடியரசுக் கட்சி தலைவர் எல்ஸ்பேர்க் தேசத் துரோகத்திற்காக 1917 உளவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று முயன்றார்.


ஆப்கானிய, ஈராக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸுக்கு கொடுத்ததாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் உளவுத்துறை ஆய்வாளரான பிராட்லி மானிங் உட்பட தவறுகளை வெளிப்படுத்துவோரை நிர்வாகமானது குற்ற விசாரணைக்கு உட்படுத்துவது அமெரிக்காவை பிரிட்டனிலுள்ள உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்திற்கு ஒப்பான அடக்குமுறைச் சட்ட வடிவமைப்பில் இருத்துகிறது என்று எல்ஸ்பேர்க் கூறினார்.

சிறையில் அடைக்கப்பட்ட படையினரான மானிங், Apache தாக்குதல் ஒளிப்பதிவு (வீடியோ) கசிவு பற்றிக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து ஹ்ரப்ன்சன் கூறினார்: அதைத்தயாரிப்பதில் நான் நெருக்கமாக இருந்தேன். நான் கூறக்கூடியதெல்லாம் இத்தகையை தகவல்களை அவர் பெற்றார் என்றால் அவர் ஒரு பெரும் வீரர், கண்டிப்பாக விடுவிக்கப்பட வேண்டும். நாங்கள் அவருடைய பாதுகாப்பிற்கு கணிசமாக உதவியுள்ளோம்.
விக்கிலீக்ஸ் வலைத் தள தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, “இல்லை, நாங்கள் இப்பொழுது மின்னணுமுறைத் தாக்குதல்களை எதிர்கொள்ளவில்லை. ஆனால் அனைத்துவித தடைகளையும் எதிர்கொள்ளக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.அமெரிக்க அரசாங்கம் பொது நன்கொடைகளை சேகரிப்பதற்கு விக்கிலீக்ஸால் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களை அச்சறுத்தியுள்ளது. அவ்வாறான நன்கொடைகளைத்தான் நிறுவனம் நம்பியுள்ளது.
கடந்தமாதம் விக்கிலீக்ஸ் அது நிதி பெறுவது தடுக்கப்பட்டுள்ளது, அமெரிக்க அரசாங்கத்தால் நிதியப் போருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கூறியது. 


விக்கிலீக்ஸிற்கு வரும் நன்கொடைகளை வசூலிக்கும் இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள Moneybookers என்னும் இணைய தள பணப் பறிமாற்றம் செய்யும் நிறுவனம் விக்கிலீக்ஸுக்கு தான் அதன் கணக்கை மூடிவிட்டதாக மின்னஞ்சல் அனுப்பியது. ஏனெனில் அது உத்தியோகபூர்வமாக அமெரிக்க, ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹ்ரப்ன்சன் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் விக்கிலீக்ஸிற்கு தாக்குதல்களில் இருந்து ஆதரவு தரும் மற்ற நிறுவனங்களுக்கும் நன்றி செலுத்தினார். நாங்கள் ஆதரவை வரவேற்கிறோம். அது வருவது நல்லதுதான்.என்றார்.
அமெரிக்கப் போர்கள் பற்றி இன்னும் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிடுமா என்று கேட்கப்பட்டதற்கு ஹ்ரப்ன்சன் தன்னுடைய அமைப்பு சரிபார்த்தலுக்கு இன்னும் ஆயிரக்கணக்கான ஆப்கானியப் போர் நாட்குறிப்புக்களை வைத்துள்ளது என்றார். பிற தகவல்கள் வந்த பின் இந்த ஆவணங்களையும் வெளியிடுவோம்.



 நன்றி World Socialist Web Site

0 comments:

Post a Comment