"the vast majority (of Indian muslims) remain committed to the Indian state" --- INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST, 2(c), wikileaks cablegate.
உலகை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் விக்கிலீக்ஸ் மூலமாக கசிந்த, இந்திய முஸ்லிம்கள் குறித்த ஆவணத்தில் இருக்கும் ஒரு கருத்தை தான் நீங்கள் மேலே பார்த்தீர்கள்.
இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டின் (David C.Mulford) கருத்துக்களை கொண்ட அந்த ஆவணத்தில் இருந்து சில தகவல்களை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். அந்த ஆவணத்தை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.
------------------------------
Friday, 02 December 2005, 12:54
C O N F I D E N T I A L SECTION 01 OF 06 NEW DELHI 009127
SUBJECT: INDIA'S DEMOCRACY AND ECONOMY MINIMIZE EXTREMIST
RECRUITMENT OF JUVENILES (C-CT5-00623)
REF: STATE 211901
NEW DELHI 00009127 001.2 OF 006
இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று மற்றும் பயங்கரவாத ஆதரவின்மை:
2.(C). 1991ஆம் ஆண்டு இந்திய சென்சஸ் படி, முஸ்லிம்களின் மக்கள் தொகை பதினைந்து சதவிதத்திற்கும் சற்று குறைவாக உள்ளது. 1981-2001 இடையேயான காலக்கட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தொகை 24% உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மைனாரிட்டி மார்க்கமாக இஸ்லாம் உள்ளது.
இந்தியாவின் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில், குறிப்பாக வட இந்தியாவில், மூன்றில் ஒரு பங்கோ அல்லது அதனை விட மேலாகவோ முஸ்லிம்கள் வசிக்கின்றனர். பீகார் (12 மில்லியன்), மேற்கு வங்கம் (16 மில்லியன்), உத்தரபிரதேசம் (24 மில்லியன்) போன்றவை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மாநிலங்கள். முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (92%) சன்னிகள், ஏனையோர் ஷியாக்கள்.
இந்திய முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 150 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது (இந்தோனேசியாவிற்கு அடுத்து அதிக முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடு இந்தியா). மற்ற எந்த இந்திய குழுக்களையும் விட அதிக வறுமையில் வாடுபவர்களும் முஸ்லிம்கள் தான்.
சமயங்களில், பாரபட்சத்திற்கும் பாகுபாட்டிற்கும் (Discrimination and Prejudice) இலக்காகின்றனர் இந்திய முஸ்லிம்கள். இருந்தபோதிலும், அறுதிப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து பற்று கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கேற்க முயல்கினறனர்.

குறைந்த அளவிலான முஸ்லிம் இளைஞர்கள் மட்டுமே, இந்திய அரசியல் தங்களது துயரங்களுக்கு பதில் சொல்லாது என்றெண்ணி Pan-Islamic (உலக முஸ்லிம்களை ஒரே இஸ்லாமிய நாட்டின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற கொள்கையை உடைய இயக்கங்கள்) மற்றும் பாகிஸ்தான் ஆதரவு இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இந்த இயக்கங்கள் சில நேரங்களில் வன்முறைகளிலும் ஈடுபடுகின்றன.
இந்தியாவின் வலிமையான ஜனநாயகம், கலாச்சாரம் மற்றும் வளரும் பொருளாதாரம் போன்றவை முஸ்லிம் இளைஞர்களை இயல்பான வாழ்க்கையோடு ஒன்ற வைத்துள்ளது. இது, பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பதையும், அந்த இயக்கங்கள் செயல்படுவதையும் பெருமளவு குறைத்திருக்கின்றது.
3.(C). மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இஸ்லாமிய அமைப்புகள் நிறைய இருந்தாலும், பெரும்பாலான முஸ்லிம்கள் மதச்சார்பற்ற அமைப்புகளிலேயே சேர்கின்றனர், ஆதரவளிக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், பொதுவாக, முஸ்லிம்கள் மதச்சார்பற்ற கட்சிகளில் சேர்வது, அரசியல் சக்தியாக பா.ஜ.க உருவாகுவதை தடுக்கத்தான்.
இந்திய நாட்டிற்கு எதிராகவும், முஸ்லிமல்லாத இந்திய மக்களுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மிக குறைவே. காஷ்மீருக்கு வெளியே இந்த இயக்கங்களுக்கு செல்வாக்கோ, புகழோ இல்லை.
7.(C). பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் ஆதரவை பிரிவினைவாதமோ, தீவிரவாதமோ பெற்றதில்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் மிதவாத போக்கை கடைபிடிக்கின்றனர்.
பழமைவாத சன்னி அரசியல் இயக்கங்களான ஜமாத் இஸ்லாமி மற்றும் தியோபந்தி பிரிவு போன்றவை இஸ்லாமிய குறுகியவாதத்தை ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் சிலர் ஒசாமா பின் லேடனை admire செய்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளின் தலைவர்கள் இது போன்ற தங்கள் பார்வைகளை பொதுவில் வெளிப்படுத்துவதில்லை. அதுபோல, பேச்சு அளவில் தான் இவர்களின் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு இருக்கின்றதே தவிர, அதை தவிர்த்து வேறுவிதமான ஆதரவை இவர்கள் பயங்கரவாதிகளுக்கு அளிப்பதாக தெரியவில்லை.
அப்பாவி முஸ்லிம்கள் மீதான இந்து பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அவ்வப்போது நடக்கும் மதக்கலவரங்கள் போன்றவை, சிறிய அளவிலான முஸ்லிம்களை வன்முறை என்னும் கோட்டையும் தாண்டி தீவிரவாதத்தின் பக்கம் அழைத்து சென்றிருக்கின்றன.
இந்திய மதரசாக்கள்:
13.(C). இந்திய மதரசாக்கள், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஆள் சேர்க்கும் இடங்களாகவும், அவைகளில் பல பாகிஸ்தானின் ISI-இன் பொருளுதவியோடு நடப்பதாகவும் இந்திய ஊடகங்கள் வண்ணமயமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. எனினும், இது போன்ற செய்திகள் மேலோட்டமான பார்வையை கொண்டவை. தீவிரவாத குழுக்களுக்கு ஆள் சேர்க்கும் இடங்களாக இந்திய மதரசாக்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
வட இந்திய சிறுவர் சிறுமியருக்கான தொடக்க நிலை மதரசாக்களை தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது தியோபந்தி பிரிவு. மதரசா கல்வியை ஐந்து வயது முதல் பல்கலைகழகம் வரை கொடுப்பதே அவர்களுடைய குறிக்கோள். அவர்களின் இந்த செயல்திட்டம், சிறுவர்களை, இயல்பான வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்தவோ, பயங்கரவாதத்தை நோக்கியோ அல்லது பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் குழுக்களுக்கு எளிதான இலக்காகி விடுமோ என்பது போன்ற கவலையை சற்று தருகின்றது.

இந்தியாவில் பயங்கரவாதம் பல வகைகளில் இருக்கிறதென்றும் (இந்து, இஸ்லாமிய மற்றும் சீக்கிய), அவர்கள் அனைவரும் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்த்தாலும், இந்த ஆவணத்தில் நாம் பார்க்கபோவது இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுவர்களை தங்கள் இயக்கங்களில் சேர்ப்பது பற்றிதான் என்று கூறி தொடங்கும் அந்த நீண்ட ஆவணம்,
முழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும்.
- காஷ்மீர்,
- சிறுவர்களை பயங்கரவாதத்திற்கு சேர்ப்பது,
- பயங்கரவாத எண்ணங்களை கொண்ட அமைப்புகளின் பட்டியல்,
- எதனால் சிலர் தீவிரவாத குழுக்களில் சேர்கின்றனர்?,
- தங்கள் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கூறும் காரணங்கள்,
- முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்,
முழுமையாக அந்த ஆவணத்தை படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சுட்டவும்.
விக்கிலீக்ஸ்சை விடுவோம்.....
எங்கள் நாட்டுப்பற்றை சந்தேகிக்கும் அந்த மிகச் சில சகோதரர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது...
நாங்கள் முஸ்லிம்கள்...நாங்கள் இந்தியர்கள்...
அன்றும் சரி, இன்றும் சரி, (இன்ஷா அல்லாஹ்) என்றும் சரி, தொடர்ந்து எங்கள் பங்களிப்பை எங்கள் நாட்டிற்கு செய்து கொண்டிருப்போம். நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டே இருங்கள். உங்களை திருப்திபடுத்துவது எங்கள் வேலையில்லை. நல்ல செயல்களை செய்து இறைவனை திருப்திபடுத்துவதே எங்கள் வேலை. இறைவன் எங்கள் உள்ளங்களை நன்கு அறிவான்.
இந்த நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
One can read the entire document from here
My sincere thanks to:
1. ibnlive.com
References:
1. WikiLeaks Cablegate: Indian Muslim population largely unattracted to extremism - ibnlive.com, reproduced from wikileaks.ch
0 comments:
Post a Comment