Sunday, August 29, 2010

ஆஃப்கானில் நேட்டோ முகாம்களின் மீது தாக்குதல்: 18 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்,ஆக30:கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் இரண்டு நேட்டோ ராணுவ முகாம்கள் மீது தாலிபான் போராளிகள் வலுவான தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 18 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், ஒரு அமெரிக்க ஹெலிகாப்டரும், ஆஃப்கான் போலீஸ் வாகனமும் தகர்க்கப்பட்டதாகவும் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஸபீஉல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ஆனால் தாக்குதலை தோல்வியடையச் செய்ததாகவும், 24 போராளிகளை கொன்றதாகவும், தங்களுடைய வீரர்கள் எவரும் இறக்கவில்லை எனவும் ஆக்கிரமிப்பு படையினர் கூறியுள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தினர் வேடமணிந்து இரவு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு 30 போராளிகள் கோஸ்த் மாகாணத்தில் ஸாலர்னோ தளத்தையும், அருகிலிலுள்ள கேம்ப் சாப்மானையும் தாக்கியுள்ளனர். சிறிய துப்பாக்கிகள் மூலம் சுட்டவாறு முகாமிற்குள் நுழைந்துள்ளனர் போராளிகள்.

ஆனால்,ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்கொண்டதாகவும், பெல்ட் குண்டு கட்டியவர்கள் 4 பேர் உட்பட 24 பேரைக் கொன்றதாகவும் ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது.

கேம்ப் சாப்மானில் கடந்த டிசம்பரில் தாலிபான் நடத்திய தாக்குதலில் ஏழு சி.ஐ.ஏவின் அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஐந்து பேரை கைதுச் செய்துள்ளதாக ஆஃப்கன் அரசு அறிவித்துள்ளது. இரண்டு ஆப்கான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மூன்றுபேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அரசு கூறுகிறது. ஏராளமான நேட்டோ படையினர் காயமடைந்துள்ளதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

நேட்டோ ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட ஆக்கிரமிப்பு ராணுவம், ஆனால் அதனை பத்திரமாக தரையிறக்கியதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இரண்டு தனியார் ஒப்பந்தக்காரர்களை தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதாக நேட்டோ அறிவித்துள்ளது.

வர்தக் மாகாணத்தில் போராளிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் என ஆக்கிரமிப்பு ராணுவம் அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment