Tuesday, August 31, 2010

gujarat model encounter

 
போபால்,ஆக:பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறல் போன்றக் காரணங்களால் மத்திய பிரதேச மாநிலத்தில் 4 அப்பாவி இளைஞர்களை கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி குஜராத் மாடலில் போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளியுள்ளனர். பீத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அக்கிரம சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டிலிருந்து இளைஞர்களை தவறானக் காரணங்களைக் கூறி அழைத்துச் சென்ற பிறகு கொள்ளைக்காரர்கள் என்ற பீதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் போலீஸ் வேடமணியச் செய்து கொலைச் செய்துள்ளது போலீஸ் குழு ஒன்று.

போலி என்கவுண்டரைக் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்க போலீசால் இயலவில்லை. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அம்ஜத்கான் என்ற ஃபவ்ஜியின் உறவினர்கள் போலீஸ் கூறும் காரணங்களுக்கெதிராக கூறுகின்றனர்.
ராஜு பன்ஸரா, உதல் படாய், ரவீந்திர உதைனியா ஆகியோர் கொல்லப்பட்ட இதர இளைஞர்கள். இளைஞர்களை கடத்திச் சென்று ராணுவ உடையை அணியவைத்ததை நிரூபிப்பதாக உள்ளது போலீசார் வெளியிட்ட புகைப்படம்.
அணியவைக்கப்பட்ட உடை எவருக்கும் பொருந்தாதது மட்டுமல்ல, ஒருவருடைய கால்ச்சட்டை அவருடைய இடுப்பின் கீழ் பெல்டினால் முறுக்கி கட்டப்பட்ட நிலையில் உள்ளது.
அம்ஜத்கான் காலுறை அணியாமல் ஷூ அணிய மாட்டார் என அவருடைய மனைவி கூறுகிறார். ஆனால் கொல்லப்பட்ட மூவருமே காலுறை அணியாமல்தான் ஷூ அணிவிக்கப்பட்டுள்ளனர்.
அந்தோரி காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்டதுதான் போலி என்கவுண்டர் கொலைநடந்த பக்னாஸ கிராமத்தின் ஆஸான் நதிக்கரை. இங்குள்ள டவுண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எஸ்.ஸிகார்வர்(T.I) கடந்த ஓர் ஆண்டிற்கிடையில் கொள்ளைக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி என்கவுண்டரில் கொன்றது 16 நபர்களை.
சாதாரண கான்ஸ்டபிளான இவர் T.I பதவிக்கு உயர்வுப் பெற்றதற்கு காரணம் இந்த என்கவுண்டர் கொலைகள்தான் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமான பீந்த் எஸ்.பி.சஞ்சல் சேகர் மற்றும் போலீஸ் குழுக்கெதிராக கொலைக் குற்றத்திற்கு வழக்குப் பதிவுச்செய்ய போலீஸ் காரரும், அம்ஜத்கானின் சகோதரனுமான ஃபெரோஸ்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவிந்த் சிங் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment