Sunday, August 29, 2010

இன சுத்திகரிப்பைக் குறித்த ஆதாரங்களை வெளியிடுவதை இஸ்ரேல் தடுக்கிறது

பெய்ரூத்,ஆக30:1948 ஆம் ஆண்டில் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனர்களை அவர்களுடைய சொந்த பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆதாரங்களை வெளியிடுவதை 20 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது இஸ்ரேல். இதற்கான உத்தரவை இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின்படி ஆதாரங்கள் சாதரணமாக 50 வருடங்கள்தான் பாதுகாக்கப்படும். 1948 ஆம் ஆண்டில் ஃபலஸ்தீனர்கள் சுயமாகவே தங்கள் பூமியை விட்டுச் சென்றார்கள் என்ற இஸ்ரேலின் பரப்புரை முற்றிலும் பொய் என்பதும், ஹகனா என்ற யூத பயங்கரவாத அமைப்பு பலம் பிரயோகித்து ஃபலஸ்தீனர்களை விரட்டியடித்தனர் என்பதற்கு போதிய ஆதாரங்களுடன் வரலாற்றாய்வாளர்கள் நிறுவியிருந்தனர்.

1948 ஆம் ஆண்டில் ஐ.நா வின் மேற்பார்வையில் இஸ்ரேல் என்ற நிறுவப்படுவதற்கு முன்பே இன சுத்திகரிப்பு துவங்கியிருந்தது.

இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த டேவிட் பென்குரியனின் தலைமையில்தான் இந்த இன சுத்திகரிப்பு நிகழ்ந்தேறியது.

அச்சுறுத்தியும், கூட்டுக் கொலைகள் நடத்தியும், இருப்பிடங்களை குண்டுவைத்து தகர்த்தும், விவசாய நிலங்களில் கண்ணிவெடிகளை புதைத்தும் 'ப்ளான் தாலத்' என்று அழைக்கப்படும் இன சுத்திகரிப்பு நிகழ்ந்தேறியது.

இதுத்தொடர்பான ஆதாரங்களை வெளியிடுவது சர்வதேச அளவில் எதிர்விளைவுகளை உருவாக்கும் என பயந்துதான் நெதன்யாகு இத்திட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment