பெய்ரூட்:லெபனானின் தெற்குப் பகுதியில் ஆட்டோமொபைல் வியாபாரி போல் வேடமிட்டு இஸ்ரேலுக்கு உளவுப் பார்த்த உளவாளியை லெபனான் உளவுத்துறை கைதுச் செய்தது.
நேற்று மாலையில் கியாம் நகரில் வைத்து இவர் கைதுச் செய்யப்பட்டார். இதனை லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த காலங்களில் லெபனான் உளவுத்துறை அதிகாரிகள் 14 இஸ்ரேலிய உளவு நெட்வொர்க்கை பூண்டோடு அழித்தனர். மேலும் இதுத்தொடர்பாக 80 இஸ்ரேலிய உளவாளிகளையும் கைதுச் செய்தனர். கைதுச் செய்யப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை விதிக்கப்படும். பெரும்பாலான உளவுவேலைப் பார்க்கும் இஸ்ரேலிய உளவாளிகளை ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கம் கண்டறிந்து பிடித்து லெபனான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.
0 comments:
Post a Comment