கணினி இணையத்தின் தேடல் நிறுவனமான கூகில் சேவையை, அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு கருவி என்று சீனாவின் அரசாங்க ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது. கூகில் அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதாகவும், தனது இணைய தேடல் இயந்திரத்தின் மூலம் சேகரிக்கும் தகவல்களை அது அவர்களுக்கு வழங்குவதாகவும், சீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா கூறியுள்ளது.
சீன கலாச்சாரத்தின் மீது அமெரிக்க பெறுமானங்களையும், பார்வையையும் திணிப்பதன் மூலம், கூகிள் சீன கலாச்சாரத்தில் ஊடுருவ விளைவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் இணைய தணிக்கை இருப்பதன் காரணமாக, அங்கிருந்து தான் வெளியேறுவதா, இல்லையா என்பது குறித்து கூகில் அறிவிக்கவிருக்கின்ற வேளையில் இந்த குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கின்றன.
0 comments:
Post a Comment