Tuesday, August 24, 2010

ஃபாலஸ்தீனத்திற்க்கு எதிராக இஸ்ரேலுடன் கூட்டு இல்லை: டொனால்ட் பெரேரா

isreal-lankadonald_perera sl“ஃபாலஸ்தீனத்திற்க்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை அரசு ஆதரவளிக்கும் என்று நான் கூறவில்லை. நான் கூறியதாக இஸ்ரேலிய பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தவறானது” என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான
டொனால்ட் பெரேரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
“ஃபாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு எதிரான யூத்தத்திற்கு இலங்கை ஆதரவளிப்பதாக டொனால்ட் பெரேரா கூறியதாக செய்தி வெளியானதையடுத்து ஃபாலஸ்தீன- இலங்கை நட்புறவுச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.அத்துடன் இலங்கை முஸ்லிம்களும் அதிருப்தியை காட்டினர்.
இந்நிலையில், டொனால்ட் பெரேரா தனது மறுப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்தச் செய்தியை வெளியிட்ட  இஸ்ரேலிய பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்  இஸ்ரேலுடனான நட்பை இலங்கை எப்போதும் மதிப்பதாகவும்.
எவ்வாறெனினும் ஃபாலஸ்தீனர்களின் அபிலாஷைகளுக்கும் மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இஸ்ரேலும் ஃபாலஸ்தீனமும் பரஸ்பர சகிப்புத் தன்மையுடன் இருக்கக்கூடிய இரு நாடுகள் தீர்வு எட்டப்பட‌ வேண்டும் என்ற‌ அணிசேரா நாடுகளின் நிலைப்பாட்டை பின்பற்றும் நாடான இலங்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment