Wednesday, February 2, 2011

எகிப்தில் 6 அல் ஜசீரா நிருபர்கள் கைது: தொலைக்காட்சி நிறுவனம் மூடல்

»
துபாய்: எகிப்தில் கத்தாரைச் சேர்ந்த அல் ஜசீரா செய்தி சேனலின் 6 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆண்டுகளாக சர்வாதிகாரம் செய்து வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை 24 மணி நேரமும் ஒளிபரப்பி வந்த அல் ஜெசீரா தொலைக்காட்சியும் மூடப்பட்டது.

எகிப்தில் சர்வாதிகார அதிபர் முபாரக்கின் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முபாரக் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயன்றும் பலனில்லாமல் போனது. இந்நிலையில் தான் அல் ஜசீராவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுமாறு எகிப்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பிறகு கெய்ரோவில் ஒரு ஹோட்டலில் வைத்து அத்தொலைக்காட்சியில் பணி புரியும் 6 நிருபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்று அல ஜசீரா தெரிவித்துள்ளது.

கைதான நிருபர்கள் ஆஸ்திரேலியா, போர்சுகல் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் அரபு ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அல் ஜசீரா கூறியதாவது,

கைதான நிருபர்கள் எங்கள் ஆங்கில சேனலில் பணி புரிபவர்கள். எகிப்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை பத்திரிக்கையாளர்கள் சுதந்திரத்தை ஒடுக்குவதாகும் என்று கூறியுள்ளது.

0 comments:

Post a Comment