Wednesday, February 2, 2011

முபாரக்கை எகிப்து நீதியின் முன்னால் நிறுத்தும்: இஃவானுல் முஸ்லிமீன்!!!

கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை அபகரித்த ஹுஸ்னி முபாரக்கை எகிப்து நாட்டு மக்கள் நீதியின் முன்னால் நிறுத்துவார்கள் இஃக்வானுல் முஸ்லிமூன் தலைவர் முஹம்மது கானேம் தெரிவித்துள்ளார். லண்டனில் பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டின் முடிவை தீர்மானிக்கும் மக்களின் உரிமைகளை முபாரக் நீண்டகாலமாக அபகரித்துள்ளார். போக்கிரிகளின் துப்பாக்கி முனையில் அவர் எகிப்தை ஆட்சிபுரிந்தார். இதற்கெதிராகத்தான் எகிப்து நாட்டு மக்கள் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்த சர்வாதிகாரியை ஆட்சியை விட்டு அகற்றாமல் மக்கள் அடங்கமாட்டார்கள் என முஹம்மது கானேம் தெரிவித்தார்.


சிலரை மாற்றி தந்திரங்களை மேற்கொண்டு வருகிறார் முபாரக் என தெரிவித்த கானேம் போராட்டத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் .ஆயிரத்திற்குமேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான பணம் மதிப்புடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.


இவையெல்லாம் ஒரு தனி மனிதருக்கும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் நிகழ்ந்துள்ளது. எகிப்து நாட்டு மக்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அவர் அடங்கியிருக்கமாட்டார்கள். முபாரக் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுவதையும் காண்பதற்காகத்தான் எகிப்திய மக்கள் காத்திருக்கின்றனர்.



தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் எழுச்சி ஏதோ எதேச்சையாக உருவானது அல்ல. நாட்டிற்கு நல்லதை நாடியவர்கள் முபாரக்கை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்க முபாரக் தயாராகவில்லை. இறுதியாக மக்கள் அவருக்கான தீர்ப்பை எழுத உள்ளனர்.



அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எவருக்கும் எகிப்திய மக்களை திருப்தி படுத்த இயலாது. அமெரிக்காவிடமிருந்து எங்களுக்கு எவ்வித உதவியும் தேவையில்லை. அது ஒருபோதும் எங்களுக்கு உதவாது. புரட்சி தற்பொழுது துனீசியாவிலிருந்து எகிப்தை வந்தடைந்துள்ளது. அல்லாஹ்வின் கருணையினால் இப்புரட்சி அரபுலகம் முழுவதும் பரவும் என நம்புவதாக முஹம்மது கானேம் தெரிவித்தார்.


செய்தி:

தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment