Friday, February 4, 2011

நான் பதவி விலகினால் அதிகாரத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் கைப்பற்றி கொள்ளும்: முபாரக்

எகிப்தில் முபாரக் அரசுக்கு எதிரான ஆர்பாட்டம் 11 தாவது நாளாக இன்றும் தொடர்கின்றது இன்று ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் பாரிய ஆர்பாட்டங்களுக்கு ‘வெளியேற்றும் நாள் ஆர்பாட்டம்’ என்ற இன்றைய பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது அதேவளை முபாரக் அமெரிக்க ABC செய்தி சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் தான் பதவி விலக வேண்டும் என்றும் தான் இன்று அவ்வாறு செய்தால் அதனால் பெரிய கலவரம் ஏற்படும் என்றும் அதிகாரத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் கைப்பற்றி கொள்ளும் என்றும்
தன்னை பற்றி மக்கள் என்ன சொல்கின்றனர் என்பதை பற்றி தான் கவலை கொள்ளவில்லை என்றும் தான் எகிப்து பற்றி கவனம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடம் இஹ்வானுல் முஸ்லிமீன்தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment