Thursday, February 3, 2011

எகிப்து:புரட்சியாளர்களை எதிர்கொள்ள ஆயுதங்களை வழங்கிய இஸ்ரேல்

 


கெய்ரோ,பிப்.3:சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது பிரயோகிக்க அந்நாட்டு அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஆயுதங்களுடன் இஸ்ரேலிருந்து புறப்பட்ட விமானம் கெய்ரோ சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை வந்துள்ளதாக இண்டர்நேசனல் நெட்வர்க் ஃபார் ரைட் அண்ட் டெவல்ப்மெண்டை மேற்கோள்காட்டி பிரஸ் டி.வி தெரிவித்துள்ளது.  சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்டுள்ள வாயுக்கள் அடங்கிய ஆயுதங்கள் எகிப்திற்கு வந்துள்ளன. போராட்டத்தை தணியச்செய்ய முபாரக் நடத்திய முயற்சிகளை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment