"Omar Sulaiman" இன்று எகிப்தில் பரபரப்பாக அதிகம் முனுமுனுக்கப்படும் சொல். எகிப்திய மக்கள் புரட்சியை தாக்குப் பிடிக்க முடியாத அதிபர் ஹீஸ்னி முபாரக் தனக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை பாரமளிக்க தேர்ந்தெடுத்த அவரது சகா. எகிப்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் கட்டளைத் தளபதி. துடிப்பான செயல்திறனும் நுட்பமான மதித்திறனும் இயல்பான இயங்கு திறனுமிக்க ஒரு மனிதர். முபாரக்கின் விசுவாசி. முபாரக் இவரின் விசுவாசி. இவ்வளவு தான் பொதுவாக நாம் அறிந்தது.
நாம் அறியாத பல நிழல் நடவடிக்கைகளிற்கு சொந்தக்காரர் இவர். 1993ல் உளவுத்துறை பொறுப்பாளராக பணியேற்ற இவர் 2001வரை யாரும் அறியாத ஒரு நிழல் மனிதன். இஸ்லாமிய இயக்கவாதிகளை களையெடுப்பதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டவர். ஆட்கடத்தல், சித்திரவதை, படுகொலை போன்ற பல குற்றங்களை நிதானமாக திட்டமிட்டு நடத்துவதில் நிபுணர். எகிப்தை முபாரக் ஆண்டாலும் அந்த ஆட்சிக்கு அச்சாணி இவரே. ஏன் சில சந்தர்ப்பங்களில் எகிப்திய அதிபரை விடவும் ஒரு படி மேலே சென்று கட்டளையிடும் வல்லமை
பெற்றவர்.
இவர் பிரபலமானது 2002களிலேயே. நாட்டின் வெளி விவகார மற்றும் உள் விவகாரங்களை கையாள முற்பட்ட போதே இவர் பொது மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். எகிப்திய இராணுவம் மக்கள் போராட்டத்தை தடுக்க பின் வாங்கியது ஏனெனில் இவரின் தன்னிச்சையான தலையீடுகளை இராணுவ நிர்வாக கட்டமைப்பில் மேற்கொள்ள முற்பட்டமையாலேயே.
பென்டகனிற்கு முபாரக்கை விடவும் ஆளுமைமிக்க, ஹமாஸை அடியோடு இல்லாது ஒழிக்கக் கூடிய ஒரு தலைவர் தேவைப்பட்டது. அதற்கான அதனது சிறந்த தெரிவு ஒமர் சுலைமான். C.I.A.யின் முக்கிய முகவரான இவர் இஸ்ரேலிய MOSAD அமைப்புடன் கூட்டு செயற்பாடுகளை மேற்கொள்பவர்.
ஹமாஸ், அல் அக்ஸா பிரிகேட், அல் கய்தா, அல் அன்ஸார் போன்ற போராளி அமைப்புக்களை அழிப்பதில் அர்ப்பணிப்புடன் பென்டகனுடனும், டெல்அவீவ் மக்காபீஸ் மற்றும் மொஸாட்டுடனும் இணைந்து வேலைத்திட்டங்களை வகுத்து செயற்பட்டவர். ஈராக் போரில் இவரின் பங்கு யாருக்கும் தெரியாது. மத்திய கிழக்கினதும் வளைகுடாவினதும் விவகாரங்களில் அமெரிக்காவிற்கு கிடைக்கும் இராஜதந்திர இராணுவ வெற்றிகளிற்கு இவரின் பங்கு இன்றியமையாதது. கிளின்டன் நிர்வாகம் தொட்டு ஒபாமா நிர்வாகம் வரை இட்ஷாட் ரொபின் முதல் இன்றைய இஸ்ரேலிய நிர்வாகம் வரை மிக நெருங்கிய இரகசிய மையக் கட்டமைப்புக்களை பேணிக்கொணடிருப்பவர். ஈராக், ஈரான், சவுதி அரேபியா, சூடான், யெமன், சிரியா, ஜோர்தான், லெபனான், லிபியா போன்ற நாடுகளை உளவு பார்ப்பதும் தேவையேற்படின் அமெரிக்க இஸ்ரேலிய கட்டளைகளிற்கு இணங்க பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இவரது குழுவின் நிழல் செயற்பாடுகளாகும்.

ம க்கள் புரட்சியை வளர்த்து ஆதரவளித்து இஹ்வான்களை மலினப்படுத்தி அரசியல் பேச்சுவார்த்தை வரை கட்டுப்படுத்தி இவற்றின் ஊடாக முபாரக்கை அதிபர் பதவியில் இருந்து அகற்றி சுலைமானை ஆட்சி பீடம் ஏற்றும் அமெரிக்க ஸியோனிஸ சதி வலையில் உலகமும் முஸ்லிம்களும் வீழ்ந்து விட்டமை கவலைக்குரிய விடயமாகும். இவை அனைத்தையும் அமெரிக்கா இஸ்ரேலுக்காக ஸியோனிஸத்திற்காக செய்கிறது. காரணம் ஹிஸ்புல்லாவை அழிக்க. ஹமாஸை இல்லாது ஒழிக்க. இப்போது புரிகிறதா எகிப்திய புரட்சி. அதன் வீச்சு எல்லை.
ஒன்று மட்டும் நிச்சயம் ஒமர் சுலைமான் ஆட்சியாளராக மாறினால் முதலில் அழிவது காஸா. சுலைமான் 100 ஜமால் அப்துல் நாஸர். 100 அன்வர் சதாத். 100 ஹீஸ்னி முபாரக். ஆம் நமக்குத் தேவை, எகிப்து தேசத்திற்கு தேவை அவசரமாக ஒரு ஹஸனுல் பன்னா கிடைக்காவிடின் ஒரு Islam Booli.
0 comments:
Post a Comment