புதுடெல்லி,பிப்.9:இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடத்திய குண்டுவெடிப்புகளின் ஆதாரங்களை அழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷியை கொலைச்செய்ய திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான ஹிந்துத்துவா பயங்கரவாதி இந்திரேஷ் குமார்தான் என்பது ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் கைதுச்செய்த ஹிந்துத்துவ பயங்கரவாதியான பரத் மோகன்லால் ரதேஷ்வர் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை தெரிவித்துள்ளான்.
ஏற்கனவே இவ்வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் போன்றே ரதேஷ்வரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஏற்பாடுச் செய்துக் கொடுத்தது ஹிந்துத்துவா பயங்கரவாதி ரதேஷ்வர்தான் என்பதை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலம் வால்ஸாதிலிருந்து ரதேஷ்வர் கைதுச் செய்யப்பட்டான். ரதேஷ்வரின் வாக்குமூலத்தையும் குற்றப்பத்திரிகையுடன் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில்ஜோஷி குண்டடிப்பட்டு இறந்துபோனான். தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையின்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளை தலைமை யேற்றவன் சுனில்ஜோஷி. குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெளியாகுவிடும் என அஞ்சி ஆர்.எஸ்.எஸ்காரர்களே ஜோஷியை கொலைச் செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுத் தொடர்பாக ஜோஷியுடன் தங்கியிருந்த 4 பேரில் ஒருவரான ஹர்ஷத் சோலங்கி உள்பட 3 பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். வதோதரா பெஸ்ட் பேக்கரி வழக்கில் சோலங்கி முக்கிய குற்றவாளியாவான். ஜோஷி கொலைச் செய்யப்பட்ட தகவலை அன்றைய இரவில் ஆனந்த்ராஜ் என்ற நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தன்னிடம் தெரிவித்ததாக சி.ஆர்.பி.ஸி 151, 154 படி பதிவுச் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் ரதேஷ்வர் கூறியுள்ளான்.
"ஆனால், அப்பொழுது ஜோஷிதான் கொலைச் செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. மறுநாள் பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளியானபோது, இவர் நம்முடன் தங்கியிருந்த மனோஜ் அல்லவா?(ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஜோஷியை மனோஜ் என்றுதான் அழைப்பார்கள்) என்பது தெரியவந்தது. பின்னர் நான் பிரக்யாசிங்கை அழைத்தேன். அப்பொழுது அவர் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதை உறுதிச்செய்தார். அதன் பின்னர் அஸிமானந்தாவை அழைத்தேன். அவர் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதில் அதிருப்தியாக இருந்தார். ஜோஷியை கொலைச் செய்தது இந்திரேஷ்குமார்தான் என அஸிமானந்தா என்னிடம் தெரிவித்தார்.
இந்திரேஷிற்கு ஜோஷியை பிடிக்காது. இக்காரியத்தை விரைவாக கர்னல் புரோகித்தை அழைத்துக் கூறுமாறு நான் அஸிமானந்தாவிடம் தெரிவித்தேன். ஜோஷி எனது வால்ஸாத் வீட்டில்தான் தங்கியிருந்தார். அஜ்மீர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இரவு ஜோஷி என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்திருக்கிறோம் எனவும், தொலைக்காட்சியை பார்க்கவும் என்னிடம் ஜோஷி தெரிவித்தார். அச்செய்தி அஜ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பாகும்.
வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்த நான் இந்தியாவிற்கு திரும்பி வந்தபொழுது தேஷ்முக் என்பவர் மூலமாக அஸிமானந்தாவுக்கு அறிமுகமானேன். வால்ஸாதில் வீடுகட்ட நிலத்தை வாங்கியபொழுது அங்கு பூஜைகளை செய்தது அஸிமானந்தாவார். தொடர்ந்து அவருடனான உறவு நீடித்தது. 2006-ஆம் ஆண்டு அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் வைத்து விவேகானந்தரின் புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தினேன். அங்கே வைத்துதான் பிரக்யாசிங் மற்றும் சுனில் ஜோஷிக்கு அறிமுகமானேன். 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முந்திய இரவில் ஜோஷி எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் ஒரு சிறுவனும் உடனிருந்தான்." இவ்வாறு ரதேஷ்வர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
0 comments:
Post a Comment