Tuesday, March 1, 2011

நாம் இன்னும் இந்தியாவில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாம் ? நம்புவோமாக

2002ல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட 11 முஸ்லி்ம்களிற்கு மரணதண்டனையும் 20 முஸ்லிம்களிற்கு ஆயுட்கால தண்டனையும் விதித்து இந்திய நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு நீதிபதி P.R. Patel இனால் வழங்கப்பட்ட மேற்படி தீர்ப்பை குஜாராத் அரசு நீதிக்கு கிடைத்த வெற்றி என கருத்து வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடியோ ஒரு படி மேலே போய் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார். விஷ்வ ஹிந்து பரிசத்தோ இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் தீர்ப்பை குறை கூறியுள்ளது. ஆயுள் தண்டனை விதித்த ஏனைய 20 பேருக்கும் மரணதண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளது.

ஓநாயாக இருந்து பார்த்தால்தான் ஓநாயின் நியாயம் புரியும் என்பார்கள். ஆம் இந்து மத வெறியர்களாக இருந்து பார்த்தால் மட்டுமே இவர்களது நியாயம் நமக்குப் புரியும். கோத்ரா ரயிலை எரித்ததே விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரே. அதை காரணமாக வைத்து நுாற்றுக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்தனர். பல நுாறு முஸ்லிம் பெண்களை இரண்டு மூன்று நாட்களாக வைத்து கூட்டுக் கற்பழிப்புச் செய்தனர். முஸ்லிம்களின் வர்தக நிலையங்களை தீயிட்டுக் கொழுத்தினர். சூறையாடினர். இராப் பகலாக கொள்ளையடித்தனர். இதையெல்லாம் செய்தது காடையர்களா. இல்லை. கல்வி கற்ற நாகரீகமான மத்திய தர வர்க்கத்தினர். முழு அனுசரனையையும் வழங்கியது குஜாராத் அரசு. நரேந்திர சிங் மோடியும் அவனது கொலைகார அரசியல் சகாக்களும். கலகத்தை ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நாடத்தி முடித்ததே குஜாராத் பொலிஸ். மத்திய அரசும் அப்பாவி வாஜ்பாயும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.



தாக்க வந்தவர்களை ஆவேசமாக திருப்பித் தாக்கிய துணிகரமான முஸ்லிம் ஆண் சிங்கங்கள் மட்டும்தான் இதற்கெல்லாம் முழுக்காரணம் என நீதித்துறை சொல்கிறது.  அதை ஊடகங்களும் அப்படியே வெளியிடுகின்றன. நியாயமான தீர்ப்புக்கள் கிடைக்காத போது முஸ்லிம்கள் ஏமாந்து போயுள்ளார்கள். இந்தியா எனும் சொல்லிலேயே இந்து எனும் ஆரம்பமே காணப்படுகிறது. இந்த லட்சணத்தில் இவர்களிடம் நீதியை எப்படி எதிர்பார்பது. இந்திய முஸ்லிம்களிற்கு இந்திய அரசியல் சாஸனத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவர்களிற்கான சமூக அரசியல் பாதுகாப்பு இஸ்லாத்திலேயே உள்ளது. இறைச் சட்டங்களிலேயே உள்ளது. இந்திய முஸ்லிம்களிற்கு கைபா் தளம் சொல்லும் செய்தி இதுதான். முதலில் நான் ஒரு இந்தியன் எனும் முட்டாள்தனமான மாயையில் இருந்து விடுபடுங்கள். முதலில் நான் ஒரு முஸ்லிம். கடைசியிலும் நான் ஒரு முஃமின் எனும் உறுதியான எண்ணத்தை உள்ளத்தில் விதைத்துக் கொள்ளுங்கள். அது உங்களை வழிநடாத்தும். உங்கள் வருகைக்காக சொர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது
கைபர் தளம் .

 

1 comments:

  1. ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு:
    “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது. இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது

    ReplyDelete