Monday, January 10, 2011

பிச்சையடுத்து கொண்டிருந்தவரை கோடீஸ்வரர் ஆக்கிய யூடியூப்.

தெருவோரம் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது ஒரு 97 செக்கன் கொண்ட ஒரு யூடியூப் வீடியோ. அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை 'குரல்' அவருடைய உள்மனதில் திடீரென ஒலிக்கத்தொடங்க, தெருவில் சென்று வரும் கார்காரர்களிடம், தனது குரலால் வானொலி அறிவிப்புக்கள் போன்றும், சில நேரங்களில் வேத வசனங்கள் கூறியும் வசீகரிக்க தொடங்கினார். இதற்காக ஒருவரிடம் ஒரு அமெரிக்க டாலருக்கு மேல் வசூலிப்பதில்லை எனவும் முடிவெடுத்தார்.

கொலம்பஸை சேர்ந்த, வெப் புரொடியூசரான டோரல் செனேவெத், தனது மனைவியுடன் அத்தெரு வழியாக ஒரு நாள் செல்கையில் டெட் வில்லியம்ஸின் அசாதாரண தங்க குரலை கேட்க முடிந்தது. 80,90 களில் வானொலி அறிவிப்புக்களில் ரசிகர்களை மூழ்கடிக்கும் திறன் பலருக்கு இருந்தது. வில்லியம்ஸிடம் இப்படி ஒரு திறமை இருப்பதாக நம்பிய செனேவெத் அவரை பற்றி விசாரிப்பதற்குள் சிக்னலில் பச்சை நிறம் காட்ட, தன்னிடமிருந்த ஒரு டாலரை வில்லியம்ஸின் கைகளுக்கு வீசிவிட்டு, புறப்பட்டு விட்டார். ஆனால் அந்த குரல் மனதுக்குள் ஏதோ செய்துகொண்டே இருக்க அடுத்த முறை தன் கமெராவையும் கொண்டு சென்று, 'எங்கே உங்கள் 'தங்க' குரலால் இரு வார்த்தைகள் கூறுங்கள்' என வில்லியம்ஸை படம்பிடித்து யூடியூப்பில் அப்லோட் செய்ய, இரண்டு வாரம் தான், மூன்று மில்லியனை தொட்டு நிற்கிறது அந்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை. இவ்வளவு பேர் பார்த்த ஒருவர் என்றால் சும்மாவா? அமெரிக்க் பிரபல க்ளிவ்லாண்ட் கவாலியர் விளையாட்டு குழுமம் உடனடியாக வில்லியம்ஸை அழைத்து, தனது வானொலிச்சேவையின் அறிவிப்பாளராக முழு நேர வேலை கொடுத்து, வீடும் கொடுத்தது. இதோ இன்றைய தேதிக்கு உலகின் பிரபல செய்தி தளங்களும், செய்தி அறிவிப்பாளர்களும் வில்லியமின் குரலை கேட்கவும், அவரை ஒரு முறையாவது நேரடியாக பேட்டி எடுக்கவேண்டுமெனவும் போட்டி போட்டு நிற்கின்றன.

0 comments:

Post a Comment