Tuesday, January 4, 2011

சுரேஷ் நாயரை கைது செய்ய பாப்புலர் பிரன்ட் வலியுறுத்தல்

அஜ்மீர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் நாயர் என்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாதியை உடனடியாக கைது செய்யவேண்டும் என பாப்புலர் பிரன்ட் வலியுறுத்தியுள்ளது.

கேரளாவில் கோயிலாண்டி என்ற ஊரை சேர்ந்த இவன் ஆர் எஸ் எஸ் இன் குஜராத் மாநிலம் கேடா மாவட்ட செயலாளராக இருந்து வருகிறான்

ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையும் மாநில போலீஸ்ஸும் வலைவீசி தேடிவருகின்றனர் . பல குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்ட இவன் கேரளா மாநிலத்தில் ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் இரகசிய இடத்தில் ஒளிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அவனுடைய மறைவிடத்தை கண்டுபிடிக்க ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை கேரளாவில் தங்கி விசாரித்து வருகிறது .

மறைவான இடத்திலிருந்து ஆர் எஸ் எஸ் தலைவர்களை இவன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிவருவதாக நம்பப்படுகிறது .

நூற்றுக்கணக்கான பாப்புலர் பிரான்ட் செயல்வீரர்கள் அவனுடைய இரகசிய மறைவிடத்தை உடனடியாக அம்பலப்படுத்தி கைது செய்ய வேண்டி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர். முன்னதாக, கோத்ரா விலிருந்து அஜ்மீருக்கு வெடிகுண்டுகளை இவன் கடத்தியதை ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்துள்ளது.

இரண்டு பேரை பலிவாங்கிய அஜ்மீர் குண்டு வெடிப்பில் பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டதும் இவர்களை பற்றிய துப்பு துலங்கியது .

  Popular Front

0 comments:

Post a Comment