துனீசியாவில் ஏற்பட்டு வரும் மக்கள் புரட்சி அரபுநாடுகள் முழுவதும் தாக்கம் -domino effect- செலுத்த தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காடுகின்றனர். துனீசியாவில் கடத்த மாதம் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஜனாதிபதியான பின் அலி நாட்டை விட்டும் ஓடிவிட்டார் இந்த போரட்டங்களுக்கு அல் நதா என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி பெரிதும் பங்காற்றியுள்ளது இதேபோன்று கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் ஐந்து நாட்களாக எகிப்தில் கடுமையான ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றது இங்கு போராட்டங்களில் முக்கிய எதிர் கட்சியான இஹ்வானுல் முஸ்லிமீன் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கின் அரசாங்கம் மாற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.
எகிப்து மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக துருக்கி உட்பட பல முஸ்லிம் நாடுகளில் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன எகிப்தில் மேற்கு சார்பான அரசுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் உச்ச நிலையை அடைந்துள்ளது நேற்று வெள்ளிகிழமை ஜூம்மாஹ் தொழுகையுடன் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 100 பேர் உயிர் இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இஹ்வானுல் முஸ்லிமீன் சற்று முன்னர் ஹுஸ்னி முபாரக் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் விரிவாக பார்க்க
வன்முறையற்ற அதிகார மாற்றத்துக்கு இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது இதேவேளை எகிப்து முக்கிய இராணுவத் தளபதியான ஸாமி அனான் ஹுஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து அகற்ற முயல்வதாக உறுதிப்படுத்தப் படாத செய்திகள் தெரிவிக்கின்றன
அதேபோன்று 18 வருடங்காள சர்வதிகார அரசின் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படும் அல்ஜீரியாவிழும் ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது ஆனாலும் அங்கு மிகவும் கடுமையான முறையில் ஆர்பாட்டம் முடக்கப்பட்டுள்ளது 1992 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இஸ்லாமிய மீட்பு முன்னணி என்ற கட்சி தேர்தலில் வெற்றி பெரும் நிலையில் மேற்குலகின் ஆதரவுடன் இராணுவ புரட்சி ஏற்படுத்தப்பட்டு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது 1992 தொடக்கம் 2002 வரையான காலபகுதிகளில் ஒரு இலட்த்தி 60 ஆயிரம் பேர் அரசினால் இஸ்லாமிய எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் என்று கருதப்பட்ட அனைவரும் படு கொலை செய்யப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன 2002 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றாலும் இராணுவ அரசின் விசுவாசிகள்தான் ஆட்சியில் இடம்பெற்றுள்ளனர்
இங்கு இயங்கும் அரச உளவு இராணுவம் மிகவும் பயங்கரமான படுகொலைகளை நிகழ்த்தி அவற்றை இஸ்லாமிய சக்திகள்தான் செய்யவதாக காட்டி வருவதாக பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன, உளவு இராணுவம் மிகவும் பயங்கரமான படுகொலைகளை நிகழ்த்தி அவற்றை இஸ்லாமிய சக்திகள்தான் செய்யவதாக காட்டிய போலியான நாடகம் ஒன்று அண்மையில் வெளியானது அல்ஜீரியாவில் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு , ஆர்பாட்டங்கள் செய்வது எந்த அனுமதியையும் சர்வாதிகார அப்துல் அசீஸ் அரசாங்கள் மக்களுக்கு வழங்கவில்லை என்பதுடன் முழுமையான மேற்குலகின் விசுவாசியாக இருந்து வருகின்றார் என்று விமர்சிக்கப்படுகின்றார்.
ஜோர்டானிலும் பிரதமர் சமீர் ரிபாய் பதவி விலக வேண்டும் என்றும் தேர்தலின் மூலமான அரசு உருவாக்கப் படவேண்டும் என்றும் கோரி ஆர்பாட்டங்கள் இடம் பெற்றுள்ளன இங்கு செயல்படும் ஜோர்டான் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி ஆகியன தேர்தலின் மூலமான அரசு உருவாக்கப் படவேண்டும் என்று கோரியுள்ளது
யெமென் நாட்டில் இந்த ஆர்பாட்டங்கள் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாட்டைவிட்டும் தலைமறைவான துனீசியா ஜனாதிபதி பின் அலியுடன் யெமென் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்வை ஒப்பிட்டு கோசங்களை எழுப்பியுள்ளனர் இந்த ஆர்பாட்டம் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்றுள்ள பாரிய ஆர்ப்பாட்டமாக பதிவாகியுள்ளது வறுமை, ஊழல் என்பன அதிகரித்துள்ளதுடன் அமெரிக்காவின் செறிவான புலனாய்வாளர்களின் கோட்டையாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது
அதேபோன்று ,பலஸ்தீனிலும் மேற்குலக ஆசான்களுக்கு வழிப்படும் அரசுகளுக்கும் அரச தலைவர்களுக்கும் எதிரான ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது பலஸ்தீன் காஸாவில் நேற்று ஜூம்மாஹ் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் அப்பாசின் அரசு கலைக்க படவேண்டும் என்று தெரிவித்து ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது தற்போது அப்பாஸ் நிர்வாகத்தின் ஆதரவு பெரிதும் மேற்கு கரையிலேயே சரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன
0 comments:
Post a Comment