ஒரு தொகுப்பாக: டொக்டர் யூசுப் அல் கரழாவி சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சூடான் வடக்கு , தெற்காக பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார் இந்த பிரிவினை அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை உடைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை இன்று தெற்கு பிரிவினை நாளை சூடானிலிருந்து டார்பூரை பிரிக்கும் பிரிவினை தொடரும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் இன்று மேற்கு நாடுகள் ஒன்றாக இருக்கின்றன நாம் பிரித்து போய் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் பெரிய நிலபரப்பை கொண்ட நாடான சூடானின் விளங்குகின்றது சூடானில் கடந்த 16 வருடங்களாக சூடுபிடித்துள்ள சூடான் அரசுக்கும் தென்பகுதி ஆபிரிக்கப் பழங்குடியின சூடான் மக்கள் விடுதலை இராணுவம்-SPLA- இடையிலான 2005 ஆம் ஆண்டு வரை நடந்த கலகத்தில் பல ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் விரிவாக பார்க்க
வடக்குச் சூடானில் முஸ்லிம்களும் தெற்குச் சூடானில் ஆபிரிக்கப் பண்டைய மதநம்பிக்கைகளை, மரபுப்பழக்கங்களை பின்பற்றி வருகின்ற இனக்குழுக்களும் வாழ்கின்றன இன்று BBC போன்ற மீடியாக்களில் கூறப் படுவது போன்று தெற்குச் சூடானில் கிறிஸ்தவம் பெரும்பான்மையாக இன்றும் என்றும் இருந்ததில்லை BBC போன்ற ஊடகங்கள் தென்பகுதியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதா உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்வைக்கின்றது என்பது குறிபிடத்தக்கது.
19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூட்சி சூடானிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் முஸ்லிம்களையும் பழங்குடியின மக்களையும் எப்போதும் ஒன்று சேர்ந்து விடாது பார்த்து கொண்டனர் இதற்கான முஸ்லிம்களை கொண்ட வட சூடானில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்டும்போது அவை தெற்கில் மேற்கொள்ளப்படவில்லை தெற்கில் திட்டமிட்டு கிறிஸ்தவ மிசசொனரிகளிடம் பழங்குடியின மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் பணி ஒப்படைக்கப்பட்டது வறுமையில் முழ்கி இருந்த மக்ககளை கிறிஸ்தவ மிசசொனரிகள்- மிசநரிகள்- பொருளாதார உதவி திட்டங்களின் ஊடாக பாரிய அளவில் கிருஸ்தவர்களா மாற்றியதுடன் வட பகுதி முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வுகளையும் வளர்த்தது.
அந்த கால பிரிவில் ஆங்கிலேயரின் கட்டுபாட்டில் இருந்த அரபு முஸ்லிம் தலைமைகள் இதனை விளங்கிகொள்ளவிலை அல்லது அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை இதனால் தென்பகுதி, வடபகுதி என்ற பாரிய இடைவெளி ஏற்பட்டு வந்தது இந்த சூழ்ச்சி வலையில் சிக்குண்ட வடக்கு முஸ்லிம் அரசியல் தலைமையும் பெரிதாக அபிவிருத்திகளை தென்பகுதியில் மேற்கொள்ளவில்லை அங்கு தேற்று விக்கப்பட்ட கலகமும் அதற்கு இடம்கொடுக்கவில்லை .
இந்த நிலை தொடர்ந்த போது சூடானில் திடீர்ச் சதிப்புரட்சி மூலம், 1969 ல், கேர்ணல் நிமேரி ஆட்சிக்கு வந்தார். 1980 வரை சர்வாதிகார ஆட்சி நடாத்திய நிமேரி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் நண்பராகவிருந்தார். ஆனால் 1983 ல் நிமேரியின் அரசு தீடிரென இஸ்லாமிய “ஷரியா” சட்டத்தை அமுல்படுத்துவதாக கூறியது இது முஸ்லிம்கள் அல்லாத தென்சூடானியர் மத்தியில் மேலும் எதிர்ப்பலைகளைத் தூண்டிவிட்டது “பொர்” என்ற நகரிலிருந்த இராணுவ முகாம் அரசுக்கெதிராகக் கலகம் செய்தது. இக்கலகத்தை அடக்கவென அரசால் அனுப்பப்பட்ட ஜோன் கரெங் என்ற இராணுவத் தளபதி கலக்காரர்களுடன் சேர்ந்து விடுதலை இராணுவத்தை உருவாக்கினார் அந்த போராட்டம் இன்று பிரிவினையாக விஸ்வரூபம் எடுத்து தென் பகுதி மக்களின் தேர்தல் மூல தீர்மானத்தின் மூலம் சூடானை வடக்கு , தெற்கு என்று இரண்டு தேசங்களாக பிரிப்பதா இல்லையா என்ற மேற்குலகின் சதிகளின் முடிவை காண சூடான் காத்திருக்கின்றது .
இன்று ஜனாதிபதி உமர் பஷீர் இவற்றை மாற்றி தென்பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ள பல திட்டங்களை முன்வைத்தாலும் அவற்றை மேற்கொள்ளமுடியாத பொருளாதார நிர்பந்தங்களை எதிர்நோக்கி வந்தார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்
தற்போது ஜனதிபதிய இருக்கும் உமர் பஷீர் ஜூன் மாதம் 1986 ஆம் ஆண்டு அமைதியான இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப்பிடித்து இராணுவ அரசை அமைத்ததுடன், சூடானை இஸ்லாமிய கோட்பாடுகளை நோக்கி நகர்த்த முற்பட்டார் இதற்கு முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு அதன் தலைவரான பிரான்சில் சட்டக்கல்வி பயின்ற ஹசன் துராபியும் பஷீருக்கு துணையாக இருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது
பஷீர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 75 வீதத்துக்கும் அதிகபடியான வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவானார் பின்னர் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் 86 வீதத்துக்கும் அதிகபடியான வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார் மேற்கு நாடுகளில் சதி நாசவேலைகளை புரிந்து கொண்ட பஷீர் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் ஆதிக்கத்திலிருந்த வர்த்தகம் அனைத்தையும் தடை செய்ததுடன் கிறிஸ்தவ மிசசொனரிளின் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக தடை செய்தார்.
இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா உஸாமா பின் லாடனுக்கும் அவரது போராளிகளுக்கும் சூடானில் அடைக்கலம் வழங்கியுள்ளது என்று குற்றம் சுமத்தி , ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் சூடானுக்கெதிரான பொருளாதாரத்தடைகளை விதித்தது. 1998 ம் ஆண்டு சூடானில் மலேரியாத் தடுப்பு மருந்து தயாரிக்கும் – Al-Shifa pharmaceutical factory தொழிற்சாலையொன்றில் இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க அரசு ஏவுகணை வீசி அத்தொழிற்சாலையை அழித்தது. இதன் விளைவாக பத்தாயிரம் நோயாளிகள் மருந்து கிடைக்காமல் மலேரியாவால் இறந்துபோனார்கள் என்பது வேறுவிடையம்
பொருளாதார இலாபங்களை இழந்தமையாலும் புதிய சூடானின் இஸ்லாமிய கோட்பாடுகள் நோக்கிய நகர்வினாலும் கோபம் கொண்ட அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் தமது வழமையா பிரித்தாளும் உளவு சதி நாசவேலைகளை பெரிய அளவில் சூடானில் அரங்கேற்றினர் இதன் விளைவாக தென்பகுதியில் மட்டுமின்றி மேற்கு மாகாணமான டார்பூரிலும் கலகங்கள் உருவாக காரணமாக இருந்தது என்று குற்றசாட்டுக்கள் பலமாக உண்டு தற்போது சூடானின் தென்பகுதியை பிரிக்க போடப்பட்ட திட்டங்களை போல் எதிர்காலத்தில் டார்பூர் பிராந்தியத்தையும் பிரிக்கும் வேலைத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
சூடானின் டார்பூரை-Darfur- நகரில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை அதிபர் உமர் அல்-பஷீர் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டதற்கு உரிய ஆதாரம் உள்ளதாக கூறி மேற்கு நாடுகளின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்-பஷீருக்கு 2009 ஆம் ஆண்டு பிடி ஆணை பிறப்பித்து எனினும் குறிப்பிட்ட இனங்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டமைக்கு ஆதாரங்கள் போதாமையால் இன ஒழிப்பு குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவதை நீதிமன்றம் நிராகரித்து. இவை உண்மைக்கு புரம்பாகசோடிக்கபட்டவை என்று உமர் அல்-பஷீர் தெரிவித்திருந்தார் இந்த அனைத்து நாடகங்களையும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அரங்கேற்றிய நாடகமாக பார்கபடுகின்றது
தென்பகுதியில் 1995 ஆம் ஆண்டளவில் அமெரிக்க , பிரித்தானிய , இஸ்ரேலிய கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஜோன் கரெங் தலைமையிலான “சூடான் மக்கள் விடுதலை இராணுவம்- SPLA- அரசுக்கெதிரான கலகத்தை ஆயுதப்போராட்டமாக தீவிரப்படுத்தியது. அமெரிக்கக் கிறிஸ்தவ சபைகளுடன் கொண்ட உறவினால் பலத்தால் அமெரிக்கா தனது திட்டத்தை செய்து முடிக்க கென்யா வழியாக ஆயுதத் தளபாடங்களை அனுப்பியது.
சூடான் பல அழிவுகளை சந்தித்தது இறுதியாக 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தோடு உள்நாட்டு கலகம் முடிவுக்கு வந்தது இந்த ஒப்பந்தத்தில் சூடானின் வடக்கும் , தெற்கும் ஒரு நாடாக இருப்பது அல்லது சுதந்திரத்தை தெரிவு செய்வது தென்பகுதியின் விருப்பம் மற்றும் உரிமை என்று ஒப்பந்தம் ஏற்றுகொள்ளப்பட்டது .
இதற்கமைய சூடான் வடக்கு தெற்கு என்று இரண்டு நாடாக பிரிவது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது. குறைந்தப்பட்சம் 90 சதவீதம் பேராவது நாடு இரண்டாக பிரிய ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று BBC தெரிவிக்கின்றது இந்த நிலையில் இந்த வாரம் தென்பகுதியின் ஜூபா நகரத்திற்கு சென்று இருந்த சூடான் அதிபர் உமர் அல் பஷீர், சூடான் பிரிவது வருத்தமாக இருந்தாலும் மக்கள் விரும்பினால் அதனை தான் ஏற்று கொள்வதாக கூறியுள்ளார் ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பிக்கும் வாக்கெடுப்பு ஒரு வார காலத்திற்கு இடம்பெறும். வாக்கெடுப்பில் பதிவு செய்த வாக்காளர்களில் குறைந்தப்பட்சம் 60 சதவீதத்தினராவது வாக்களித்தால் மட்டுமே தீர்மானம் செல்லுபடியாகும்.
இந்த நிலையில் அரபு நாடுகள் சுடானுக்கு போதுமான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்த படுகின்றது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐந்து வருடங்களில் வடபகுதியால் தென்பகுதிக்கு எந்த பெரிய அபிவிருத்திகளையும் செய்யமுடிய வில்லை அவ்வாறு செய்திருந்தால் இந்த பிரிவினையை தடுக்க முடியுமாக இருக்கும் ஒரு முஸ்லிம் தேசம் பிரியபோகின்றது அதுவும் வளம் கூடிய பகுதி முஸ்லிகளின் கையை விட்டும் போகபோகின்றது.
இதன் குற்றங்கள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளின் மீதுதான் ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர் காரணம் குறைத்து கடந்த ஐந்து ஆண்டுகளிலாவது போதுமான அபிவிருத்திகளை தென்பகுதியில் செய்து மக்களின் மனதை வெல்லும் எந்த முயற்சிக்கும் முஸ்லிம் நாடுகள் சூடானுக்கு உதவவில்லை என்பதுதான்.
டொக்டர் யூசுப் அல் கரழாவி சூடானின் தென்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் சூடான் வடக்கு , தெற்காக பிரிவதற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாது என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார் இந்த பிரிவினை அமெரிக்காவும் ,மேற்கு நாடுகளும் முஸ்லிம் உலகின் ஒற்றுமையை உடைக்கும் இலக்குடன் ஆதரவளிக்கும் பிரிவினை இன்று தெற்கு பிரிவினை நாளை சூடானிலிருந்து டார்பூரை பிரிக்கும் பிரிவினை தொடரும் முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் இன்று மேற்கு நாடுகள் ஒன்றாக இருக்கின்றன நாம் பிரித்து போய் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
M.ரிஸ்னி முஹம்மட்
இது மிகவும் பக்கச் சார்பானதொரு கட்டுரை என நான் கருதுகிறேன். மேற்கு நாடுகளின் கை சூடானின் பிரிவில் இல்லை என நான் கூறவில்லை, ஆனால் வடக்கு சூடானில் இருக்கும் வந்தேறு குடிகளான அரபிகள் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும், அவர்கள் செய்த இனப்படுகொலைகளின் எதிர்வினை தான் இந்த பிரிவு ஆகும்.. ஒரு இனம் இன்னொரு இனத்தை அரவணைத்து வாழ வேண்டும் அதை விடுத்து தமது கோட்பாடு மற்றும் மொழிகளை பிறர் மீது திணிக்கும் காட்டுமிராண்டித் தனத்துக்கு இது தான் முடிவாக அமையும், அமைய வேண்டும்.......
ReplyDelete