Saturday, January 29, 2011

அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளினால் இஸ்ரேல் அச்சம்கொண்டுள்ளது

OurUmmah: இஸ்ரேலிய பத்திரிகையொன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு எகிப்தில் துனிசியா போன்று மக்கள் புரட்சி ஏற்பட்டு எகிப்தின் தலைமைத்துவம் மாறிவிடுமோ என்ற அச்சம் கொண்டிருபதாக தெரிவித்துள்ளது இஸ்ரேலின் பிரபல தினப் பத்திரிகையான -Ha’aretz -வெளியிட்டுள்ள  கட்டுரை ஒன்றில் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு தனது ஜெருசலம் அலுவலகத்தில் தனிமையில் இருந்த வண்ணம் தனது முழுபலத்தையும் பயன்படுத்தி தற்போது இருக்கும் நிலையை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றார்என்று தெரிவித்துள்ளதுடன்
உலக தலைவர்கள் நெதன்யாகுவை சந்திக்க ஆர்வம்கொள்ளவில்லை அவர் பிஜிங்கின் அழைப்பு ஒன்றுக்காக இன்றும் காத்திருகின்றார் அது வரவேண்டிய ஒரு அழைப்பு நெதன்யாகுவை அடிக்கடி அழைக்கும் ஒரேஒரு தலைவர் நேற்றைய உலகின் மிக முக்கிய பிரதிநிதியான எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் என்று தெரிவித்துள்ளது விரிவாக
நெதன்யா துனீசியாவின் புரட்சியை பார்த்து முகம் சுழிப்பது ஆச்சரியமான விடயமில்லை அவர் இந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தை – பிராந்தியத்தில் மிக மோசமான இஸ்திரமற்றநிலை “great instability” in the region’- தோன்றியுள்ளது என்ற எச்சரிக்கை வசனங்களுடன் தொடங்கியுள்ளார் அவர் வாலிபராக இருக்கும்போது அரபு உலகில் ஜனநாயகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்று வாதிட்டார் ஆனால் இந்த நாட்களில் அவர் சர்வாதிகாரிகளை பெரிதும் விரும்புகின்றார் அவர்கள் -சர்வாதிகாரிகள் -நம்பிக்கை கொள்ள முடியுமானவர்கள் நெதன்யாகுவை அதிர்சிக்கு உட்படுத்த மாட்டார்கள் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment