ourUmmah:கடந்த வியாழகிழமை கிழமை- 13.01.2011- உலக மனித ஒற்றுமைக்கு அச்சுறுதகாக இருந்து வரும் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாடின் தலைவரான மெய்ர் டொகான் Meir Dagan- அந்த உளவு அமைப்பிலிருந்து ஓய்வு பெறப்போகும் நிலையில் அவரை இஸ்ரேல் அரசு கவ்ரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது
இதன்போது மொசாடின் தலைவரான மெய்ர் டொகானுக்கு முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி புஷ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தை முன்னால் பிரதமர் எஹுத் ஒல்மேர்ட் சத்தமாக அனைவருக்கும் வாசித்து காட்டியுள்ளார் அதில் நீங்கள் செய்த வற்றுக்கு நன்றி உங்களுடன் நான் செயல்பட்டதை எண்ணி பெருமை கொள்கின்றேன் “I thank you for what you’ve done,” Bush wrote. “It was an honor to work with you.” என்று எழுதப்பட்டது மட்டும் ஊடகங்களுக்கு வெளியிட்டப்பட்டுள்ளது அந்த மடலுடன் ஒரு நூலும் அனுப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன விரிவாக
அந்த நிகழ்வில் உரையாற்றிய மெய்ர் டொகான் நான் எது சிறந்ததே அதை செய்துள்ளேன் இந்த பொறுப்பு மிகவும் கடினமானதும் , சவால்கள் நிறைந்ததுமாகும் புதிய இதன் தலைவராக பதவியேற்க போகும் தமிர் பர்டோ -Tamir (Pardo) இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் அவர் வெற்றி பெற எனது உள்ளத்தால் வாழ்த்துகின்றேன்
இஸ்ரேல் நாட்டுக்கு எனது சேவை 43 வருடங்களை பூர்த்தி செய்கின்றது நான் 8 ஆண்டுகள் மொசாத் தலைவராக சேவை செய்துள்ளேன் நான் மூன்று பிரதம மந்திரிகளுக்கு கீழ் செயல்பட்டுள்ளேன் என்னை பிரதமர் ஏறியல் ஷரோன் மொசாட்டின் தலைவராக நியமித்தார் அதன் பின்னர் வந்த பிரதமர் எஹுத் ஒல்மேர்ட் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹு ஆகியோரின் நிர்வாகத்திலும் கடமையற்றியுள்ளேன்
நான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் நீங்களும் இஸ்ரேலிய அரசும் எம்மை பாதுகாப்பும் , மகிழ்ச்சியும் உள்ள சுவர்கத்துக்கு அழைத்து செல்வீர்கள் என்று நம்புகின்றேன் என்றும் உலகில் பரத்து வாழும் புலம்பெயர் யூதர்களுடன் சிறந்த உறவை பேணுவீர்கள் என்றும் நன்புவதாகவும் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து தனது உளவுத்துறை உறுபினர்களை நோக்கி கருத்துரைத்துள்ள மெய்ர் டொகான் நாங்கள் மிகவும் அற்புதமான ஒப்பற்ற ஆண்களையும் பெண்களையும் கொண்ட அமைப்பு துணிவும், செயல்திறனும் இலக்கு பற்றிய உணர்வும் கொண்டவர்கள் பற்றி பேசுகின்றோம் அவர்கள் பாராட்டுகளையோ , பரிசுகளையோ துணை புரியும் அணியினரோ இன்றி இரவு பகலாக செயல்படுகின்றவர்கள் அவர்கள் யுத்த விமானங்களினதும் இராணுவத்தினதும் உதவிகள் இன்றை செயல்படுகின்றவர்கள் இன்னும் பெரும்பாலான சந்தர்பங்களில் அவர்கள் ஆபத்தின்போது மீட்சிக்கான எந்த வழியும் இன்றி செயல்படுபவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் உரையாற்றிய ஆக்கிரமிப்பு நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யஹு நான் உங்களுக்கு என் நன்றிகளை தெரிவிக்கின்றேன் இங்கு நீங்கள் ஈடுபட்ட நடவடிக்கைகள் பற்றி பேசமுடியாது !! ஆனால் நான் உங்களுக்கு நன்றி சொல்கின்றேன் அடையமுடியாத பல விடையங்களை நீங்கள் செய்தீர்கள் அனைவரின் சார்பிலும் நான் அதற்கு நன்றி சொல்கின்றேன்,
மேலும் அங்கு உரையாற்றிய நேதன்யஹு ஒரு வருடத்துக்கு முன்னர் நான் உங்கள் அலுவலகம் வந்தபோது ஒரு முதிய யூத மனிதர் நாசி படை முன் மண்டியிட்டு இருப்பதாய் காட்டும் படம் ஒன்றை பார்த்து உங்களிடம் இது யார் என்றேன் அதற்கு நீங்கள் இதுதான் உங்கள் அப்பா அவரை நாசி படைகள் கொன்றுவிட்டது என்றீர்கள் அந்த சம்மபவம் அன்று உங்களை பற்றியும் உங்களில் ஆழமான ஈடுபாட்டை பற்றியும் எனக்கு காட்டியதுடன் எவரும் எப் போதும் யூத மக்களை அழிக்கும் அச்சுறுத்தலுடன் செயல்படமுடியாது என்பதையும் எனக்கு உணர்த்தியது என்றார்,
புதியவராக பொறுப்பேற்கும் தமிர் பர்டோ துணை மொசாத் தலைவராக இதற்கு முன்னர் பொறுப்பு வகித்தவர் என்றும் மிகவும் கடும்போக்கு கொண்டவரென்றும் பார்பதற்கு சாதுவான பயங்கரவாதி என்றும் தெரிவிக்கபடுகின்றது
நன்றி:avar ummah
0 comments:
Post a Comment