வாஷிங்ட்ன்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதர்கள் என்ன செய்கிறார்களோ, அதையேதான் எங்களது தூதர்களும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செய்கிறார்கள் என்று விக்கிலீக்ஸ் விவகாரம் குறித்து அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டு வரும் தகவல்களைப் பார்க்கும்போது அமெரிக்க அரசு, இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இதற்கு அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கிரவ்லிகூறுகையில், இந்தியாவுடன் நாங்கள் முக்கிய உறவை வைத்துள்ளோம். பல்வேறு பிரச்சினைகளில் இந்திய அரசு மற்றும் மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இந்தியாவின் தூதர்கள் என்ன பணியைச் செய்கிறார்களோ, அதை பணியைத்தான் அமெரிக்க தூதர்களும் செய்கிறார்கள். இதில் எந்த வேறுபாடும் இல்லை என்றார் அவர்.
0 comments:
Post a Comment