நரேந்திர மோடியை ஹிட்லரோடு ஒப்பிட்டு பேசினால் காவிக்கூட்டத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். அவர் ஆட்சியில்தான் குஜராத் வரலாறு காணாத வளர்ச்சியை கண்டுள்ளது என்று அவரது ரத்தக்கறை படிந்த கைகளை பொருளாதார வளர்ச்சி மையைப்பூசி மறைக்க முயல்வார்கள்.
மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியெல்லாம் சும்மா தூசியென எண்ண வைக்கும் அளவிற்கு கொடுங்கோலன் ஹிட்லரின் ஆட்சியில் ஜெர்மனி வளர்ச்சி கண்டது .
கி.பி. 1933 கும் 1936 கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஜெர்மனியின் மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) வருடத்திற்கு 9.5% என்கிற அளவில் வளர்ந்தது.
தொழிற்த்துறை வருடத்திற்கு 17.5 % என்று அசுரத்தனமாக வளர்ந்தது.
கி.பி. 1932 க்கு முந்திய காலகட்டத்தைவிட உள்நாட்டு வட்டிவிகிதம் பாதியாக குறைந்திருந்தது, பங்குச்சந்தை மீண்டு எழுந்தது . உள்நாட்டு உற்பத்தி விகிதம் 81% அதிகரித்தது. பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அறவே ஒழிக்கப்பட்டது
இளம்வயதில் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை கி.பி 1933 -1939 க்கு இடைப்பட்டக் காலத்தில் 80% குறைந்தது.
நாட்டின் உள்கட்டமைப்பு பெரும்வளர்ச்சி கண்டது .நாட்டில் புதிதாக 12 அணைகள் கட்டப்பட்டன. ஆட்டோபான் (Autobahn) எனும் தேசிய நெடுஞ்சாலைகள் (உலகத்திற்கு நெடுஞ்சாலைகளை அறிமுகப்படுத்தியவர்கள் ஜெர்மானியர்களே) நாடெங்கும் அமைக்கப்பட்டன. ரயில்வேதுறையும் அசுர வளர்ச்சி கண்டது . Breitspurbahn எனப்படும் அகல ரயில்பாதைக்கான திட்டங்கள் போடப்பட்டன.
கட்டிடக்கலை ஹிட்லரின் ஆட்சியில் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட அழகுமிகு கட்டிடங்கள் இன்றும் ஜெர்மனியில் காணக்கிடைக்கின்றன.
பெர்லின் நகரம் கி.பி 1936 ல் ஒலிம்பிக் போட்டிகளை கோலாகலமாக நடத்திக் காட்டியது.
வோல்க்ஸ்வாகன் மற்றும் போர்ச்சே போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிறுவப்பெற்றன. இதனால் ஆட்டோமொபைல் துறையும் அபரிதமான வளர்ச்சி கண்டது. பிற்காலத்தில் ஜெர்மன் கார்கள் உலகளவில் புகழ் பெறுவதற்கான அடித்தளங்கள் ஹிட்லர் ஆட்சியிலேதான் போடப்பட்டன.
இவ்வளவு சாதனைகளும் ஹிட்லரின் படுகொலைகளை மறைத்துவிட்டதா என்ன? எதோ குஜராத்திலுள்ள பணக்காரர்கள் மட்டும் ஆதாயமடையும் வகையில் வளர்ச்சி திட்டங்களை தீட்டி விட்டால் மட்டும் 2002 ம் ஆண்டில் நடந்த படுகொலைகளை எல்லாம் மறந்துவிட்டு மோடியை வளர்ச்சி நாயகன் என்று உலகம் ஏற்று கொள்ளுமென்று எண்ணுவது பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டிவிட்டது என்று எண்ணுவதற்கு சமம்.
நன்றி
உரையுர்கரன்
0 comments:
Post a Comment