Saturday, January 29, 2011

சட்டவிரோத பேச்சு வார்தைகளால் பலஸ்தீன் கட்டுப்படுத்தப் படமாட்டாது


பலஸ்தீன உரிமைகளுக்காக போராடும் ஹமாஸ் இயக்கம் ‘பாதாஹ்’ கட்டுபாட்டின் கீழ் இருக்கும் பலஸ்தீன அதிகார சபைக்கு எதிரான இணைந்த தேசிய நிலைப்பாடு ஒன்றை உருவாக்க பலஸ்தீனிலுள்ள போராளிகள், படைப்பிரிவுகள், சுயாதீன அமைப்புகள் போன்றவற்றுடன் முழுஅளவிலான கலந்துறையாடலை ஆரம்பித்திருந்தது இது தொடர்பான பலஸ்தீன் அமைப்புகளின் ஒன்று கூடல் ஒன்று காஸாவில் இடம்பெற்றுள்ளது அதில் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக போராடும் பல்வேறு பட்ட அமைப்புகள் பங்கேற்றுள்ளன
இந்த வகையில் ‘ பாதாஹ்’ கட்டுபாட்டின் கீழ் இருக்கும் பலஸ்தீன அதிகார சபையின் இஸ்ரேலுடனான சட்டவிரோதமான பேச்சுவார்த்தைகளின் எந்த முடிவுகளையும் அங்கீகரிப்பது இல்லை என்ற ஏகோபித்த முடிவுக்கு வந்துள்ளதுடன் பலஸ்தீன உரிமைகளை பெறுவதற்கு தொடரான போராட்டம்தான் ஒரே தீர்வாக அமையும் என்றும் சட்டவிரோத பேச்சு வார்தைகளால் பலஸ்தீன் கட்டுப்படுத்தப் படமாட்டாது என்றும்  விரிவாக  அர்த்தமற்ற பேச்சுவார்தை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும், போராளிகளை கொலை செய்வது நிறுத்தப்படவேண்டும் போன்ற விடையங்களும் கலந்துறையாடபட்டுள்ளது
இந்த ஆலோசனை கூட்டத்துக்கான அழைப்பை இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் விடுத்திருந்தது இதில் அப்பாஸ் , அப்பாஸின் அமைப்பு தவிர்ந்த அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டுள்ளன.
அல்ஜசீரா தொலைக்காட்சி பலஸ்தீன் தொடர்பான 1600 ஆவணக் கோப்புக்களை வெளிப்படுத்தி வரும் இதில் அப்பாஸ் தலைமயிலான PLO அரசாங்கத்தின் பலஸ்தீன மக்களின் உரிமைகளை இஸ்ரேல் தரப்புக்கு விட்டுக் கொடுக்கும் தகவல்கள் , இஸ்ரேல் தொடர்பான அணுகுமுறைகள், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களை இஸ்ரேலுக்கு தாரை வார்க்கும் பேச்சுவார்த்தைகள்
பலஸ்தீனில் தனது சொந்த மக்களை இஸ்ரேலுக்கு காட்டிகொடுக்கின்றமை, இஸ்ரேலுடன் இணைத்து பலஸ்தீன போராளிகளை கொலை செய்கின்றமை போன்ற அப்பாஸ் அரசின் துரோகங்களை அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிப்படுத்த தொடங்கியுள்ளது என்பது குறிபிடத்தக்கது

0 comments:

Post a Comment