Saturday, January 22, 2011

கேரளா மாராட்டு கலவரத்தை நடத்திய ஹிந்து ஐக்கியவேதி தலைவர் உள்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை.

கோழிக்கோடு,ஜன.21: கேரளா மாநிலத்தில் உள்ள மாராட்டு என்ற வூரில் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் ஒரு கலவரம் நடத்தப்பட்டது அதுவே முதல் மாராட்டு கலவரம் என்று சொல்லபடுகிறது. முதல் மாராடு படுகொலைகள் சம்பவத்தில் குஞ்சுக்கோயா(வயது 32) என்பவரைக் கொலைச்செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி பிபிஷ்(வயது 37), இரண்டாவது குற்றவாளி ஹிந்து ஐக்கியவேதி மாநிலப் பொதுச்செயலாளர் சுரேஷ், மூன்றாவது குற்றவாளி விஜேஷ்(வயது 31) ஆகியோருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அபராதத் தொகையில் 50 ஆயிரத்தை கொலைச் செய்யப்பட்ட குஞ்சுக்கோயாவின் குடும்பத்தினருக்கு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரவு எட்டு மணியளவில் மாராடு கடற்கரைப் பகுதியில் இரு பிரிவினர்களுக்கிடையே நடைப்பெற்ற மோதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். கேரள மாநிலத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இச்சம்பவத்தில் முதலில் கொல்லப்பட்டது முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த குஞ்சுக்கோயா என்பவராவார்.

மாராடு ஜும்ஆ பள்ளி முன்பக்கத்தில் வைத்து ஆயுதங்களுடன் வந்த ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஹிந்து ஐக்கியவேதியின் பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் சேர்ந்து குஞ்சுக்கோயாவை கொடூரமாக கொலைச் செய்தனர். இதனை நேரில் கண்ட சாட்சி அளித்த வாக்குமூலத்தை மிக முக்கிய ஆதாரமாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கில் இதர குற்றவாளிகள் பிபிஷ்(வயது 37), விஜேஷ்(வயது 31) ஆகியோராவர். முதல் மாராடு சம்பவத்தில் ஐந்துபேர் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு பதிலடியாக நடந்த இரண்டாவது மாராடு சம்பவத்தில் 9பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

0 comments:

Post a Comment