Saturday, January 22, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை நேர்மையாக நடைபெற வழி என்ன? சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கூறும் ஆலோசனை

இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்த என்ன செய்யவேண்டும் என்பதற்கான சீரிய ஆலோசனைகளை சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் சி.வி. நரசிம்மன் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள யோசனைகளில் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன:

இந்த ஊழலில் மிகப்பெரிய அள வுக்கு சட்டவிரோதமான பணம் கைமாறி யுள்ளது. மாபெரும் குற்ற நடவடிக்கையான இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கள் குறித்த சாட்சிகள் முழுமையாகவும் விரிவாகவும் விசாரிக்கப்பட வேண்டும். தொடர்புடைய ஆவணங்களும் அவற்றுக்குத் துணைபுரியும் சாட்சியங்களும் அடையாளம் காணப்பட்டு விரைவாக கைப்பற்றப்பட வேண்டும். சந்தேகத்திற்குரியவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படவேண் டும். இவ்வாறு ஒவ்வொரு சாட்சியையும் விசாரித்து அறிவதற்கும் பல இடங்களில் சோதனை நடத்திப் பலரைக் கைது செய்வதற்கும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவினாலோ அல்லது இதற்கென்று அமைக்கப்படுகிற ஆணையத்தினாலோ இயலாத காரியமாகும். சி.பி.ஐ. போன்ற குற்றப் புலனாய்வு அமைப்பு ஒன்றின் மூலமே இது சாத்தியமாகும்.

இந்த மிகப்பெரிய ஊழலை விசா ரிப்பதற்கு தொழில்ரீதியான திறமையும் உயர்ந்தபட்ச அர்ப்பணிப்பும் தேவை. இந்த ஊழலில் தொடர்புடைய குற்றங் கள் பல்வேறு வகையான சட்டங்களின் கீழ் வருபவையாகும். ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், வெளிநாட்டுப் பணப்பறிமாற்ற விதி முறைகள்- வருமானவரிச் சட்டம் போன்ற பல சட்டங்களின் கீழ் இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. தற்போது சி.பி.ஐ. வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு ஆகியவை இந்த ஊழல் குறித்துத் தனித்தனியே விசா ரித்து வருகின்றனர். சில வேளைகளில் முக்கியமான சில சாட்சிகளும் ஆவ ணங்களும் இந்த மூன்று அமைப்பு களுக்கும் பொதுவானவையாக இருக்கக் கூடும். போலிஸ் அமைப்பாக இருப்பத னால் சி.பி.ஐ. சாட்சிகளிடமிருந்து கையெ ழுத்திடப்பட்ட வாக்குமூலங்களைப் பெற முடியும். ஆனால் விசாரணைக்கு உதவுமே தவிர இந்த வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால் அமலாக்கப்பிரிவிற் கும் வருமான வரித்துறைக்கும் மேற் கண்ட சட்டரீதியான கட்டுப்பாடுகள் எது வும் கிடையாது. அவர்கள் கையொப்பம் இடப்பெற்ற வாக்குமூலங்களைப் பெற்று அவற்றை சாட்சியமாக தங்கள் விசார ணையில் பயன்படுத்த முடியும். பொது வான சாட்சிகளிடமிருந்து இந்த மூன்று அமைப்புகளினாலும் பெறப்பட்ட பல வகையான வாக்குமூலங்கள் ஒன்றுக் கொன்று முரணாக அமையுமே ஆனால் நீதிமன்றத்தில் மிகக்கடுமையான வாதத் திற்கு உள்ளாகும். குற்றவாளித் தரப்பு வழக்கறிஞர்கள் இத்தகைய பிரச்சனை களைப் பயன்படுத்தி விசாரணையை நீட்டிக்கவும் தாமதப்படுத்தவும் முடியும். இந்த நீண்ட காலத்தில் குற்றவாளிகள் பிணையில் வெளிவந்துவிடக்கூடும். மேலும் குற்றவாளிகள் நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் குவித்து வைத்தி ருக்கிற செல்வத்தின்மூலம். பணம் சார்ந்த ஆதாயங்களை அனுபவிக்க முடியும். இத்தகைய நிலைமை நாட்டின் நல னுக்கு உகந்தது அல்ல. எனவே இந்த மூன்று அமைப்புகளினாலும் நடத்தப் படும் விசாரணை ஒன்றுக்கொன்று இணைந்தும் ஒரு குழு மனோபாவத்து டனும் செயல்படவேண்டும். இந்த குழு விற்கு சி.பி.ஐ.யின் தலைமை விசாரணை அதிகாரி தலைமை தாங்கவேண்டும். மற்ற அமைப்புகளினால் சேகரிக்கப்படும் சாட்சியங்கள் அனைவருக்கும் கிடைக்கு மாறும் பயன்படுமாறும் பார்த்துக்கொள் ளப்படவேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின்படி பிப்ரவரி 10ஆம் தேதி இதற்கான ஏற்பாடுகளை யெல்லாம் செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அமைப்புகள் இணைந்து செயல் படவேண்டும்.

விசாரணை நடைபெறும்போது கிடைக்கும் சாட்சியங்களின் மூலம் பினாமியாக நடைபெற்ற பணப் பரி மாற்றம் பினாமி பெயரில் உள்ள சொத் துக்கள் ஆகியவை குறித்து ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. 1988ஆம் ஆண்டு மத்திய அரசு பினாமி பரிமாற்றங்கள் தடைச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ஊழலோடு தொடர்புடைய குற்றங்கள், ஊழலில் திரட்டிய பணம் ஆகியவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது இந்தச் சட் டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இந்தச் சட்டம் கொண்டுவரப் பட்டு 22 ஆண்டுகள் ஆனபிறகும் இது நடைமுறையில் செயலற்றச் சட்டமாகவே இருக்கிறது. ஏனெனில் இந்தச் சட்டத் தின்கீழ் வகுக்கப்படவேண்டிய விதி முறைகள் இன்னமும் வகுக்கப்பட வில்லை. மேலும் அது அறிவிக்கையின் மூலம் வெளியிடப்படவும் இல்லை. மிக முக்கியமான ஊழல் எதிர்ப்புச் சட் டத்தை தொடக்கத்திலிருந்து பயனற்ற தாகச் செய்த மத்திய அரசின் போக்கு மன்னிக்க முடியாதது ஆகும். இந்தப் பிழை உடனடியாகத் திருத்தப்பட்டு இந் தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக் கப்பட்டு அறிவிக்கப்படவேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப் பட்டவர்களின் பினாமி சொத்துக்கள் இச்சட்டத்தின்கீழ் முடக்கப்படவேண்டும். மேலும் அந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இச்சட்டத்தின்படி வேறுவகை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் சி.பி.ஐ.யால் இயலும்.

1946ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட தில்லி சிறப்புப் போலிஸ் அமைப்பு சட்டத்தின்படியும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்கீழும் சி.பி.ஐ. மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரத்திற்கு கட்டுப் பட்டதேயாகும். ஆனால் சி.பி.ஐ.யின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து தன் வசமே வைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்ட பொருளாதார குற் றங்கள் குறித்து சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை பற்றிய தகவல்களை மத்திய அரசு கேட்டுப்பெறுவதற்கு இந்த மேற்பார்வை அதிகாரம் சட்டப்படி இட மளிக்கிறது. சி.பி.ஐ. மற்றும் அமைப்புகள் சேகரித்துள்ள விவரங்கள் குறித்து மத்திய அரசு தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் இந்த விவரங்கள் சம்பந்தப் பட்ட வட்டாரங்களுக்குக் கசியக்கூடும். இதன்மூலம் சாட்சியங்களுக்கு துணை யாக இருக்கக்கூடிய மற்ற ஆதாரங் களை சம்பந்தப்பட்டவர்கள் அழிக்க முயற்சிக்கக்கூடும். சி.பி.ஐ.விசாரணைக்கு இவையெல்லாம் இடையூறாக அமை யும். எனவே இந்த வழக்கு சம்பந்தப் பட்ட சி.பி.ஐ. விசாரணை குறித்த தகவல் களை மேற்பார்வையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என உரிய ஆணையை உச்சநீதிமன்றத்திடம் பெறவேண்டும்.

இந்த வழக்கில் உள்ள பணயங் கள் மிகமிக அபாயகரமானவை. விசார ணையின்போது குற்றவாளி மிகவும் நெருக்கப்பட்டால் அவர் திருப்பி அடிக்கக்கூடும். முக்கியமான ஆவணங் கள், முக்கிய சாட்சிகள் மிக உயர்ந்த பாதுகாப்புக்கு உள்ளாக்கப்படுவது இன்றியமையாததாகும் சி.பி.ஐ.யுடன் கலந்தாலோசித்து இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும்.

டிசம்பர் 16ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியவற்றின் விசாரணை குறித்து உச்சநீதிமன்றமே மேற்பார்வையிடும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரையிலே அப்போதைக்கப் போது என்ன நடந்தது என்பதைக் குறித்த அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படுவதால் எதிர்பார்க்கும் பயன் விளையாது. இப்பிரச்சினையில் அள வைவிட குணாம்சம் மிகமிக முக்கிய மானது ஆகும்.

உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ள மேற்பார்வையிடும் வேலை கீழ்க்கண்ட வற்றை உள்ளடக்கியது ஆகும். விசார ணைக் குழுவின் தலைவருடன் உச்சநீதி மன்றம் உட்கார்ந்து சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை குறித்து விவா தித்து முடிவுகள் எடுக்கவேண்டியதிருக்கும். உச்சநீதி மன்ற மண்டபத்தில் இத்தகைய விவாதங்களும் கூட்டங்களும் நடைபெற முடியாது. எனவே உச்சநீதி மன்றத்தின் சார்பில் மூவர் கொண்ட ஒரு குழு அமைக் கப்படவேண்டும். இந்த குழுவிற்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைவராகவும், சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் அல்லது இணை இயக்குநர், ஓய்வுபெற்ற அரசு தலைமை வழக்கறிஞர் ஆகிய இருவர் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப் படவேண்டும். இந்த மேற்பார்வை குழு விசாரணையை அடிக்கடி மேற்பார்வை யிட்டு அவ்வவ்போது உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். அடுத்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த ஆலோசனையைத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தின் சம்மமதத்தைப் பெறவேண்டும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விசாரணையில் அரசியல் அல்லது வேறுவகையான குறுக்கீடுகள் இல் லாமல் இருக்கவும், இந்த ஊழலுக்குப் பின்னே மறைந்துள்ள முழு உண்மையை வெளிக்கொணரும் வகையிலும் நேர்மையான விசாரணை நடைபெறவும் மேற்கொண்ட ஏற்பாடு நிச்சயமாக உதவும்.

பொதுப்பதவிகளில் அமர்ந்து மிகப்பெரிய ஊழல் குற்றம் புரிந்தவர்கள் குறித்த இந்த வழக்கில் சிறப்பான விசாரணை, வழக்குத் தொடர்தல், வழக்கு நடைபெறுதல் ஆகியவை முறையாகவும் ஒழுங்காக வும் நடைபெற வேண்டும். அப்போதுதான் எதிர் காலத்தில் இத்தகைய ஊழலை யாரும் செய்யாமல் இருப்பார்கள்.பழைய பிரிட்டிசு அரசின் கீழ் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களில் இருந்து விலகி இதற்கான குற்றவியல் நீதிமுறை தனியாக வகுக்கப்பட் டாக வேண்டும். மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் இத்தகைய சிறப்பு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுத்துறையில் உள்ளவர்களின் குற்ற ஒழுங்கீனங் களைத் தடுக்கவும் விசாரிக்கவும் தண்டிக்கவும் உரிய சட்டம் ஒன்றினை மத்திய அரசு உடனடியாகக் கொண்டுவரவேண்டும். பொதுத்துறையில் இருப்பவர் கள் என்ற பதத்தின்கீழ் மத்திய மாநில அமைச்சர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர் கள் ஆகியோரை உள்ளடக்கும் வகையில் இந்தப் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு எவ்வளவு விரைவில் நிறைவேற் றப்படுகிறதோ அவ்வளவு விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்த மிகப்பெரிய ஊழல் வழக்கில் அடுத்த 9 மாதங்களில் அல்லது அதற்குள்ளாகவே விசாரணையை சிறப்பாக நடத்தமுடியும்.

- நன்றி : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 6-1-11

0 comments:

Post a Comment