Tuesday, January 4, 2011

RSS-ன் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் அமைச்சர்

கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிவரும் பி.கே.ஸ்ரீமதி ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விஞ்ஞான் பாரதி கடந்த டிசம்பர் மாதம் பெங்களூரில் நடத்திய நான்காவது ஆயுர்வேத மாநாட்டின் ஒருபகுதியாக நடந்த கண்காட்சியை கர்நாடக மாநில பா.ஜ.க அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.எ.ராம்தாஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரான ஸ்ரீமதி திறந்துவைத்தார்.

கர்நாடகா மாநில பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரும் கம்யூனிஸ்ட் அமைச்சருடன் மேடையில் வீற்றிருந்தனர்.

இந்தியாவில் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் விஞ்ஞான் பாரதி அமைப்பு ஆரோக்கிய எக்ஸ்போ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆனால், இச்செய்தியை வெளியிட்டால் சர்ச்சையாகும் எனக்கருதி கேரள மாநிலங்கள் மூடி மறைத்துள்ளன.

ஏகற்கனவே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பிராந்திய சங்கிக் நிகழ்ச்சியில் பங்கேற்ற கொல்லம் மேயரை கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி வெளியேற்றியிருந்தது.

இந்தியாவில் நடந்தேறிய பல்வேறு குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைமையிலிருந்து அதன் தொண்டர்கள் வரை ஈடுபட்டதை புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்துவரும் வேளையில் அவ்வமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் பங்கேற்றது அக்கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியின் அகில இந்திய நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுப் பெற்றவரும், இடதுசாரி சிந்தனையுடையவருமான ரசூல் பூக்குட்டி பங்கேற்றதும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

கூத்தாநல்லூர் முஸ்லீம்கள் - தேஜஸ்

0 comments:

Post a Comment