Monday, September 6, 2010

மொடாஸா குண்டுவெடிப்பு:மோட்டார்பைக் ஃபாரன்ஸிக் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

2008 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் மொடாஸாவில் நடந்த குண்டுவெடிப்புக் குறித்து விசாரித்துவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.எ) குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கை வல்லுநர் பரிசோதனைக்காக டெல்லியில் ஃபாரன்ஸிக் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பியுள்ளது.

மொடாஸா குண்டுவெடிப்பை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியதாக கருதப்படுகிறது. 15 வயது சிறுவனான ஜைனுல் ஆபிதீன் கோரி என்றச் சிறுவன் கொல்லப்பட்ட இக்குண்டுவெடிப்பில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

ரமலான் தொழுகை ஆரம்பிக்க இருக்கவே மஸ்ஜிதின் முன்பகுதியில் வைத்து இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கின் நம்பர் ப்ளேட் போலி என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோட்டார் பைக்கினை வாரணாசி ஃபாரன்ஸிக் சோதனைக் கூடத்தில் சோதித்த பொழுதும் சம்பவத்தின் மர்மம் நீங்கவில்லை. குஜராத் போலீசாரின் விசாரணை திருப்தியளிக்காத காரணத்தால் இந்த ஆண்டு ஜூன் மாதம் இவ்வழக்கு விசாரணை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment