Thursday, February 10, 2011

முஸ்லிம்கள் முகத்தில் விழிப்பதற்கே அவமானமாக இருக்கிறது…

குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை நாட்டிற்கு அவமானம், நீதித்துறைக்கு அவமானம் என்று பரவலாக பேசப்படு கிறதே ஒழிய பெருமைக்குரிய ஹிந்து மதத்தின் பேரால் இத்தகைய காட்டு மிராண்டித்தனத்தை நிகழ்த்திய கயவர் களைக் கண்டிக்க யாருக்கும் நா எழவில்லை.

தமது மதத்தை களங்கப்படுத்திய வர்கள் குறித்து பெரும்பாலான ஹிந்து குரு பீடங்கள், மகா சன்னிதானங்கள் கண்டுகொள்ளவேயில்லை, (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ் மட்டும் விதி விலக்கு) நமது நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுவதற்கு முன்பே முஸ்லிம் பெயர்கள் ஊடகங்களில் உச்சரிக்கப்படுகின்றன. ஊடகங்கள் குறிப்பிடும் நபர்களோ இயக்கங்களோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருப்பினும் மனித உயிர்கள் பலியாவதைக் கண்டு மனம் பொறுக்காத முஸ்லிம் அமைப்புகள். தலைவர்கள் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்வார்கள். இருந்தாலும் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் வகையில் செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடும். எனது கேள்வி அது பற்றியதல்ல? முஸ்லிம்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்டது.

எங்கேயோ எவனோ நிகழ்த்திய குண்டு வெடிப்பிற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இதயங்களையும் குத்திக் கிழிக்க குரு மூர்த்திகளின் எழுது கோல்கள் ரத்த தாகத்துடன் காத்திருக்கும்.

வெடிகுண்டு சம்வங்களில் தொடர்பு டையவன் என்று கூறுவோர்கள் கூட தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயர்களைத் தான் கூறுவது வழக்கம். நமது ஐயம் என்னவெனில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் அனைத்தும் நாட்டு மக்களிடையே செயல்படும் இயக்கங் களாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.. பஜ்ரங்தள், ஏபி.வி.வி. போன்றவை பதிவு செய்யப் பட்ட இயக்கங்கள் பாஜக அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்து விட்டு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அது மட்டுமின்றி அடுத்து ஆளுங்கட்சியாக வரவும் அது துடித்துக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள பல பிரமுகர்கள், அமைப்பு கள் சாமியார்கள் என பல்வேறு தரப்பின ரும் சங்பரிவாருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள் ளனர். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குரு பூஜைகளிலும், இந்து முன்னணியால் நடத்தப்படும் திரு விளக்கு பூஜைகளிலும் முக்கிய வர்த்தகப் புள்ளிகளும் கலந்து கொள்கின்றனர். பொது மனிதர்கள் வேடம் போடும் இவர்களோ, நாட்டின் பெரும் பான்மையான வெகுஜன ஊடகங்களோ குஜராத் இனப்படுகொலை குறித்து ஏதும் சொல்ல வில்லையே? என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அது அவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் நமக்கு அவ்வா றல்ல, நம்முடைய சந்தேகங்களெல்லாம் கோத்ராவில் நிகழ்ந்த விபத்தை முஸ்லிம்கள் செய்த சதியாக செய்திகளை பரப்பி திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் சொன்னதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக்கதை என பானர்ஜி கமிஷன் ரிப்போர்ட் கூறியது. தற்போது தெஹல்காவின் பதிவுகளும் நிரூபிக் கின்றன. சாட்சிகளை மிரட்டி முஸ்லிம்கள் மீது பழிபோடச் சொன்ன குஜராத் காவல் துறையின் ஈனச்செயலும் அதனை முழுநேரக் கடமையாகச் செய்த சங்பரிவாரின் ஆண்மையற்ற செயல் குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பொய்யான ஒரு தகவலை கர சேவர்களின் பெயரால் ஹிந்து மதத்தின் பெயரால் பரப்பியதால் அநியாயமாக படுகொலைகள் நிகழ்த்தியது குறித்து இங்குயாரும் வெட்கப்படவில்லையே? ஏன்? முஸ்லிம்கள் தானே செத்துத் தொலையட்டும் என்று அவர்கள் ஆறுதலடைந்து தொலையட்டும். ஆனால் ஹிந்து மதத்தின் பெயர் உலக அளவில் மாசுபட்டு போனதே இது குறித்து இவர்களுக்கு சிறிதும் கவலை யில்லையே?

தெஹல்கா பதிவுகளில் கயவர்களின் வாக்கு மூலங்களைப் பார்க்கும் போது கோத்ராவில் நடந்தது விபத்தல்ல.

முஸ்லிம்கள் நடத்திய சதியுமல்ல. சங்பரிவார் சக்திகளால் நடத்தப்பட்ட கொடும் சதி என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. ஹிந்து மதத்தின் பெருமை குறித்து பெருமிதம் அடைபவர்கள் இது குறித்து கவலைப்படவில்லை என்பது குறித்து விளைக்குறிகள் விடைத்து நிற்கின்றன.

இந்த கொடும் சதிகள் குறித்து இவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது 2007 அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து (தெஹல்கா உண்மைகளை அம்பலப்படுத்தியதிலிருந்து) இவர்கள் கோமாவில் கிடந்திருக்க வேண்டும் அல்லது இந்த குற்றச் செயல்கள் குறித்து மானசீகமாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான ஊடகங்களும் குஜராத் இனப்படுகொலை குறித்து மூச்சு கூட விடவில்லை. இவர்களின் இழிசெயலைக் காணும் போது அவமானம் தாங்க முடியவில்லை.

முஸ்லிம்களின் முகங்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. ஏனெனில் நான் மனித மனம் படைத்தவன்.

1 comments: