Thursday, February 3, 2011

உலக கோப்பையில் யூசுப்பதான் முக்கிய பங்கு வகிப்பார்; கபில்தேவ் சொல்கிறார்




உலக கோப்பையை கைப்பற்றிய கேப்டன்கள் பங்கேற்ற நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் கிளைவ் லாயிட் (வெஸ்ட்இண்டீஸ் 1975, 1979), கபில்தேவ் (இந்தியா 1983), ஆலன்பார்டர் (ஆஸ்திரேலியா 1987), இம்ரான்கான் (பாகிஸ்தான் 1992), ரனதுங்கா (இலங்கை 1996), ஸ்டீவ்வாக் (ஆஸ்திரேலியா 1999) ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது கபில்தேவ் கூறியதாவது:-

உலக கோப்பை போட்டியில் யூசுப்பதான் முக்கிய பங்கு வகிப்பார். அவர் 6-வது அல்லது 7-வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடியவர். தோல்வி பாதையில் இருக்கும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்லக் கூடிய திறமையை பெற்றவர். யூசுப்பதான் களத்தில் இருக்கும் வரை எதிர் அணியின் நிலை திண்டாட்டம் தான். யூசுப்பதானின் இந்த அதிரடி ஆட்டத்துக்கு 20 ஓவர் போட்டித்தான் காரணம். 20 ஓவர் போட்டியில் எந்த வீரரும் எந்த வரிசையில் வந்தும் பேட்டிங் செய்ய முடியும்.

இந்திய வீரர்கள் உலக கோப்பையை தெண்டுல்கருக்காக வெல்வோம் என்று கூறி இருக்கிறார்கள். தெண்டுல்கருக்கு மட்டும் முக்கியமில்லை உலக கோப்பையை வெல்வது மற்ற வீரர்களுக்கும் முக்கியமானததாக இருக்க வேண்டும். தெண்டுல்கர் உலகின் சிறந்த வீரர் ஆவார். அவர் நாட்டுக்காக பெரிதும் பாடுபட்டுவிட்டார்.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறியதாவது:-

உலக கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்பதை கணித்து விட முடியாது. தற்போது 6 அணிகள் எந்த அணியையும் தோற்கடிக்க கூடிய நிலையில் உள்ளன. என்னை பொறுத்த வரை இந்தியாவுக்கு உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் பேட்டிங் மிகவும் முக்கியமாக உள்ளது. இந்திய அணி தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. அதோடு உள்ளூர் மைதானத்தில் ஆடுகிறது.

வேகப்பந்து வீச்சில் ஜாகீர்கான் முக்கியத்துவம் பெற்றவராக இருக்கிறார். அனுபவம் வாய்ந்த திறமையான பவுலர். தெண்டுல்கர் உலக கோப்பையுடன் போவது பெருமையாக இருக்கும்.

இவ்வாறு இம்ரான்கான் கூறினார்.

0 comments:

Post a Comment