Tuesday, February 8, 2011

இஸ்லாமிய பயங்கரவாதம் வெளிச்சத்துக்கு வருகின்றது !!


எகிப்திய அலெக்ஸாண்டிரியா நகரில் அண்மையில் கிருஸ்தவ தேவாலயமொன்றிற்கு முன்பாக நடத்தப்பட்ட தாக்குதலுடன் எகிப்தின் உள்நாட்டு அமைச்சராக இருந்து கடந்த மாத இறுதியில் இராணுவத்தால் கைது செய்யட்ட ஹபீப் அல் அத்லி சம்மந்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது
எகிப்திய அலெக்ஸாண்டிரியா நகரில் அண்மையில் கிறிஸ்தவ தேவாலயமொன்றிற்கு அருகில் புதுவருட பிரார்த்தனைகளுக்காக தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 24 பேர் கொல்லப்பட்டனர் 90 பேர்வரை காயமடைந்தனர் இந்த தாக்குதலுக்கு யாரும் உரிமைகோரவில்லை அந்த குண்டு தாக்குதலுக்கு முன்னர் கிருஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இரு யுவதிகளை அலெக்ஸாண்டிரியா நகரின் கிறிஸ்தவ போலீஸ் தடுப்புகாவலொன்றில் வைத்து சித்திரவதை செய்வதாக தகவல்கள் வெளியாயிருந்தன இதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது -இது தொடர்பாக எனது ‘மேற்கின் பிடியில் இருக்கும் நாடுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் தாக்கப்படுகின்றனர் !! ‘ என்ற தலைப்பில் கடந்த மாதம் ஜனவர் 4 ஆம் திகதி ourUmmah.org இல் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் விபரிக்கப்பட்டுள்ளது விரிவாக
கடந்த மாதம் 23 ஆம் திகதி அலெக்ஸாண்டிரியா தாக்குதல் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்த தற்போது கைது செய்யப்பட்டுள்ள எகிப்தின் உள்நாட்டு அமைச்சர் ஹபீப் அல் அத்லி இந்த தாக்குதல் அல் காதாவுடன் தொடர்புடைய பலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ‘இஸ்லாமிய இராணுவம்’ என்ற அமைப்பு செய்துள்ளதாகவும் இவர்களிடம் 19 தற்கொலை குண்டு தாரிகள் இருப்பதாகவும்  நாடு பூராவும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்தார் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் கோட்டைகளில் ஒன்றாக விளங்கும் அலெக்ஸாண்டிரியாவில் தாக்குதலுக்கு எதிராக சிறுபான்மை கிருஸ்தவ மக்காளால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் இஹ்வானுல் முஸ்லிமீன் உறுப்பினர்கள் பெரியளவில் பங்கெடுத்து கொண்டிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த மாதம் இறுதி பகுதி தொடக்கம் எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆர்பாட்டத்தை கடுமையாக அடக்க முற்படும்போது இராணுவத்தால் உள்நாட்டு அமைச்சரும் முபாரக்கின் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய அதிகாரியும் கைது செய்யப்பட்டனர் இவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர் முன்னாள் அமைச்சர் ஹபீப் அல் அத்லிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது இவருக்கு எதிரான முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றசாட்டுகளில் மிக முக்கிய குற்றசாட்டாக இவர் அலெக்ஸாண்டிரியா நகரில் கிறிஸ்தவ தேவாலய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது.
நீதிமன்றில் இவர் மீதான குற்றபத்திரிகையில் இவர் உருவாக்கிய அமைப்புகளால் எகிப்து மக்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு பலியை இஸ்லாமியவாதிகளின் மீது சுமத்தி மேற்குலகின் ஆதரவை பெற முயன்றுள்ளார் என்று சுமத்தப்பட்டுள்ளது குற்றம் அனைவரினதும் பிரதான கவனத்தை பெற்றுள்ளது அந்த குற்றபத்திரிகையில் பல முக்கிய ஆதாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த குற்றபத்திரிகையுடன் தொடர்பான சட்டத்தரணி அரபுநியூஸ் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்
எகிப்தின் சுதந்திர ஊடகங்கள் எகிப்தின் முன்னாள் உள்நாட்டு அமைச்சர் ஹபீப் அல் அத்லிக்கு அலெக்ஸாண்டிரியான் தாக்குதலுடன் நேரடி தொடர்பு இருப்பதாக ஒரு பிரிட்டிஷ் இராஜதந்திரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது அதில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஹபீப் அல் அத்லி ஒரு பாதுகாப்பு முறையை உருவாக்கியிருந்தார் அது 22 அதிகாரிகளினால் வழிநடத்தபட்டதாகவும் அதன் ஊளியர்களாக முன்னாள் போதைப் பொருள் வியாபாரிகளும், முன்னாள் அமைப்புகளின் கடும்போக்கு கொண்ட உறுப்பினர்களும், சில பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுகின்றது என்றும் நாட்டின் அரசாங்கம் கவிழும் நிலை ஏற்பட்டால் நாடுபூராவும் நாசவேளைகளை செய்யத் திட்டமிடிருந்ததாக தெரிவித்துள்ளது இந்த விடயமும் குற்றபத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று மேலும் அந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை பெயர் குறிப்பிடப்பட்டாத பிரிட்டிஷ் இராஜதந்திரி பிரிட்டிஷ் ஏன் எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கும் அவரின் அரசாங்கமும் குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஹபீப் அல் அத்லியால் வழிநடாத்தபட்ட உள்நாட்டு அமைச்சும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது என்பதை விளக்கும் முகமாக இந்த தகவல்களை தெரிவித்ததாக தெரிவித்துள்ளது
முன்னாள் உள்நாட்டு அமைச்சர் ஹபீப் அல் அத்லிக்கு எதிரான குற்ற பத்திரிகை பிரிட்டிஷ் புலனாய்வு துரையின் தகவல் ஒன்றையும் ஆதாரமாக கொண்டுள்ளது என்று அந்த வழக்கு தொடர்பான சட்டத்தரணி தெரிவித்துள்ளார் அந்த தகவலின் பிரகாரம் உள்நாட்டு அமைச்சின் மேஜர் பாத்தி அப்துல்வாஹித் என்ற அதிகாரி 11 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதியான அஹ்மத் முஹமத் காலித் என்ற நபரை தயார்படுத்தி ஜுன்துல்லாஹ் என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அலெக்ஸாண்டிரியா கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதலை செய்துள்ளார் என்ற புலனாய்வு தகவலும் இணைக்கப்பட்டுள்ளது
இவ்வாறான நடவடிக்கைகள் எப்போதும் மொசாட் மற்றும் CIA உளவு நிறுவனங்களுக்கு சொந்தமான நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படுகின்றது கடந்த நூறு வருடங்களில் பல தடவைகள் CIA மற்றும் மொசாட் இதை ஒத்த பல அழிவு வேலைகளை செய்து விட்டு அதை அடுத்தவர் தலையில் கட்டும் நடத்தை பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது
இந்த நடவடிக்கைகளை நாம் நோக்கும்போது ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’  ‘Islamic  terrorism’ – வெளிச்சத்துக்கு வருகின்றது இன்று உலகில் பல பாகங்களிலும் குண்டு வெடிப்புகளுக்கு பிரதான காரணமாக மேற்கு மற்றும் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவுகள்தான் பிரதான காரணமாக இருக்கிறது ‘இஸ்லாமிய பயங்கரவாதம் ‘ என்பது கம்யூனிஸத்தின் வீழ்சிக்கு பின்னர் மேற்குலக ஏகாதிபத்தியம் தனது அடிவருடிகளுடன் சேர்ந்து உலகை தனது கட்டுபாட்டின் கீழ் வைத்து கொள்ள கண்டு பிடித்த ஒரு மந்திரம் அந்த மந்திரத்தை மொழிந்து உலகை அடக்கி ஆள்கின்றது என்ற ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’  வெளிவர தொடங்கிவிட்டது.
‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்னும் வார்த்தைகளை உயிர் ஊட்ட உருவாக்கப்டுவதுதான் இஸ்லாமிய பயங்கரவாதிகள்  நாடகம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் , பாகிஸ்தானிலும், மட்டுமல்ல ஈரானிலும், துருக்கியிலும் யெமனிலும், ஏன் எகிப்திலும், சவூதியிலும் இடம் பெரும் குண்டு வெடிப்புக்கு பின்னால் இந்த உளவு அமைப்புகள்தான் இருக்கின்றன   அவர்கள்தான் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற பிரயோகத்தையும் உருவாக்கி அதற்கு உயிரும் கொடுக்கின்றனர் என்பது நீருபிக்கப்பட்டு வருகின்றது.
அவர்கள் பல வகையில் ‘இஸ்லாமிய பயங்கரவாதைதை’ உருவாக்குகின்றனர் சில சந்தர்பங்களில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமிய பணிகளில் தீவிரமாக செயல்படும் வலிபர்களை விசாரணைக்கு அழைத்து சென்று அவர்களின் வாகனத்தில் அவர்களுக்கு தெரியாமல் தொலைவில் இருந்து இயக்கக்கூடிய குண்டுகளை அவர்களின் வாகனங்களில் பொருத்தி அவர்களை விடுதலை செய்வது போன்று பாசாங்கு செய்து குண்டு பொருத்தப்பட்ட வாகனம் நகர் புறம், சந்தை, மஸ்ஜித் போன்ற இடங்களை அண்மிக்கும் போது குண்டை வெடிக்க செய்து பல அப்பாவி மக்களை கொன்று ‘ இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி’ 100 பொதுமக்களை படுகொலை செய்துள்ளார்கள் என்று தெரிவிப்பது
வேறு சில சந்தர்பங்களில் முஸ்லிம் சமூகத்தினுள் இருக்கும் நபர்களை பயன்படுத்தி அவர்களுக்கு இஸ்லாமிய தோற்றத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய துடிப்புடன் மேற்குலகின் அடாவடித்தனங்களை கண்டு வேதனயுடன் இருக்கும் வாலிபர்களை அணுகி அவர்களை தமக்கு தேவையான இலக்குகளின் மீது குண்டுகளை வைக்கவும் , தட்கொலை தாக்குதல்களை நடத்தவும் தூண்டுதல் இதன் மூலம் இஸ்லாமிய துடிப்புள்ள வாலிபர்களை பயன்படுத்தி முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொன்று தமது இலக்கை அடைதல் அதனை ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்று பிரச்சாரப்படுதல்.
இன்னும் வேறு சில சந்தர்பங்களில் முழுமையாகவே தமது உளவு நிறுவனங்களை பயன்படுத்தி தமது பொம்மை அரசுகள் உள்ள இடங்களில் பயிற்றபட்ட தமது முகவர்களை நேரடியா நாசவேலைகளில் ஈடுபடுதல் இந்த மேற்கண்ட வழிமுறைகள் ஈராக்கிலும் , அமெரிக்காவிலும் , பாகிஸ்தானிலும் அமெரிக்க உளவு பிரிவுகளால் செய்யபட்டமை பல சந்தர்பங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன இன்று எகிப்தில் வெளிவரும் இஸ்லாமிய பயங்கரவாதம் அதன் ஒரு தொடர் மட்டும்தான்
இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தின் வழிமுறையல்ல   மேற்கின் மந்திரம் அதன் உருவாக்கம் மேற்கு  இங்கு என்பது மேற்கின் மக்களை குறிக்க பயன்படுத்த படவில்லை மேற்கின் நிர்வாகிகளை குறிக்கின்றது- ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ வெளிச்சத்துக்கு வருகின்றது

1 comments: