Tuesday, January 4, 2011

விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணம் மப்ஹூஹ் கொலையில் இஸ்ரேலின் பங்கை நிரூபிக்கும் - துபாய் போலீஸ் தலைவர்

ஹமாஸ் கமாண்டர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலைத் தொடர்பாக எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை உறுதிச்செய்யும் விதத்தில் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்கள் அமையும் என துபாய் போலீஸ் தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் தாஹி கல்ஃபான் தமீம் கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உண்மையை வெளிப்படுத்துவது குற்றமல்ல என ஜூலியன் அஸென்ஜேவைக் குறித்து தாஹி கல்ஃபான் குறிப்பிட்டார்.

மப்ஹூஹின் கொலையில் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாத்தின் பங்கை நிரூபிக்கும் ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாக அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜூலியன் அஸென்ஜே தெரிவித்திருந்தார்.

இரண்டாம் லெபனான் யுத்தம், மப்ஹூஹ் கொலைத் தொடர்பான 3700க்கும் அதிகமான கோப்புகளை வெளியிடப் போவதாக அஸென்ஜே தெரிவித்திருந்தார்.

மப்ஹூஹ் கொலைத் தொடர்பான தகவல் தனக்கு புதிதல்ல என தாஹி கல்ஃபான் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி துபாயில் அல் புஸ்தான் ரொட்டானா ஹோட்டலின் 23-வது அறையில் வைத்து மப்ஹூஹ் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment