Wednesday, January 12, 2011

ஈரானில் இஸ்ரேல் உளவாளியாகச் செயற்பட்ட ஈரானிய நபருக்கு தூக்குத் தண்டனை!

ஈரானை சேர்ந்த அலி அக்பர் சியாதத் என்பவர், இஸ்ரேலிய புலனாய்வு சேவையான மொசாட்டிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினால் அந்நாட்டில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சிகளுக்கு பின்னர் ஈரானில் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திட்டங்களுக்கமைய உளவு பார்த்தல் மற்றும் கடவுளுக்கெதிரான போரைத்தூண்டல் ஆகியன மரணதண்டனையை வழங்கக்கூடிய குற்றங்களாகும். அதை வலியுறுத்தும் முகமாக இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஈரானின் எதிரி நாடான இஸ்ரேலின் மொசாட் அமைப்புக்கு உளவு வேலை பார்த்தார். மேலும் இஸ்லாமிய தேசத்திலிருந்து கொண்டு அதனை எதிர்க்கும் வகையில் யூத நாடொன்றினை பலப்படுத்த முயன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இதற்காக மொசாட்டிடம் இருந்து 60,000 அமெரிக்க டொலர் பணத்தையும் தகவல் வழங்குவதற்காக மடிக் கணனியொன்றையும் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, அலி அக்பர் சியாதத்தை ஈரான் பொலிசார் கைது செய்து அவர் மீது வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணை 4 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் அவர் தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் பிடிபட்டனர்.
இந்த நிலையில் உளவு வேலை பார்த்த அலிஅக்பர் சியாதத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை தெக்ரானில் உள்ள “எவின்” சிறையில் நேற்று காலை நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவலை ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சியாதத் ஈரானின் ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ தளம் அமைந்துள்ள இடங்கள், விமானப்படை, ஏவுகணைகள் குறித்த ரகசியங்களை இஸ்ரேலுக்கு உளவு தெரிவித்துள்ளார்.
துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு சென்று இஸ்ரேல் உளவு ஏஜெண்டுகளிடம் கூறியுள்ளார்.
இதுபற்றிய தகவல்கள் அடங்கிய “லேப்டாப்” புடன் அவர் சிக்கியுள்ளார். எனவே தான் அவர் தூக்கிலிடப்பட்டார் என்ற தகவலையும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment