
லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான மலைகளை கொண்டுள்ள ஒரு சிறிய நாடு. நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் சிரியாவும், தெற்கு எல்லையில் இஸ்ரேலும் இருக்கிறது இந்த நாடு முஸ்லிம்களை 60 வீதமாகவும் கிறிஸ்தவர்களை 39 வீதமாகவும் ஏனையவர்களை 1 வீதமாகவும் கொண்டுள்ளது இதன் ஜனாதிபதியாக ஒரு கிறிஸ்தவரும் பிரதமராக ஒரு முஸ்லிமும் இருப்பது கடந்த சில காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது விரிவாக பார்க்க
முன்னால் பிரதமாரான சாட் ஹரீரியின் தந்தை ஹரீரி கடந்த 2005 ஆம் ஆண்டு கார் குண்டு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் இந்த கொலை அமெரிக்க இஸ்ரேல் கூட்டு படுகொலை என்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் தெரிவித்து வருகின்றது இந்த கொலை தொடர்பாக சாட் ஹரீரி ஐநா தலைமையிலான விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது ஹிஸ்புல்லாஹ் இயக்கம் உள்நாட்டு விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு மட்டும் ஆதரவை தெரிவித்து பிரதமரான சாட் ஹரீரி பதவி துறக்கவேண்டும் என்று நிபந்தனையிட்டு அரசில் இருந்து வெளியேறி அரசை வீழ்த்தியுள்ளது.
இதனால் தற்போது லெபனானில் உள்நாட்டு கலகம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுட்டிகாட்டப்டுகின்றது கட்டார் , சவூதி போன்ற நாடுகள் மேற்கொண்ட சமாதன முயச்சிகள் எதுவும் பயன்தரவில்லை ஹிஸ்புல்லாஹ் இயக்கம் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்படும் அரசாங்கத்தில் சாட் ஹரீரி உள்ளடக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது
M.ரிஸ்னி முஹம்மட்
0 comments:
Post a Comment