Thursday, January 20, 2011

துனீசிய மக்கள் எழுச்சியும் பலஸ்தீனிய விடுதலை அமைப்புகளின் நிலைப்பாடு


 
OurUmmah:இஹ்வானுல் முஸ்லிமீன்- ஆட்சிக்கு வருவதை தடுக்குமுகமாக மக்களுக்கு எதிராக மரணம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைக்கு அனுமதி வழக்கினார்‘-

துனீசியாவில் இடம்பெற்றுள்ள கிளச்சியால் இஸ்ரேலுடன் சந்தேகத்துக்கிடமான உறவை -”suspicious ties”- கொண்ட துனீசிய ஜனாதிபதி ஜைனுல் ஆபிதீன் பின் அலி துனீசியாவில் இருந்து ஓடித்தப்பி சவூதி அரேபியாவில் தஞ்சம் அடைந்துள்ளார் இந்த மக்கள் எழுச்சியை பாலஸ்தீன போராளிகள் அமைப்புகள் தமது ஆதரவினை தெரிவித்துள்ளன.
காஸா வெளிநாட்டு அமைச்சர் பாதி ஹம்மாத் கருத்துரைக்கையில் நாங்கள் துனீசியா மக்கள் தாம் தலைவர்களை தெரிவுசெய்யும் விடையத்தில் நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம், அது எவ்வளது தியாகங்களை வேண்டினாலும் அது ஒரு பொருட்டல்ல என்று தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க
ஹாமாஸ் பேச்சாளர் சமாய் அபு ஜுஹ்ரி கருத்துரைக்கையில் தனது இயக்கம் துனீசிய மக்களின் விருப்பபு மற்றும் தேர்வு -will and choice- -(Free will)- ஆகியவற்றை மதிப்பதாகவும் ஹமாஸ் அவர்களுக்கு பக்க துணையாக இருக்கும் என்றும் உறுதி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் பேச்சாளர் தாவூத் சிஹாப் AFP செய்தி நிறுவனத்துக்கு கருத்துரைக்கையில் முன்னால் துனீசிய ஜனாதிபதி சந்தேகத்துக்கிடமான உறவை -”suspicious ties”- இஸ்ரேலுடன் கொண்டவர் என்று குற்றம் சாட்டியுள்ளது.
அதேநேரம் PLO அமைப்பின் பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி – -DFLP- துனீசிய மக்கள் இஸ்லாமிய அரசியல் அலை-”waves of political Islam”- சிறந்த வெற்றியை -பயங்கரவாத, தீவிரவாத சகதிக்குள் திருப்பிவிடும் என்று எச்சரித்துள்ளது.
காஸாவை ஆளும் ஹமாஸை தாக்குமுகமாக பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி துனீசிய படைகள் அரசியல் இஸ்லாம் நோக்கிய பாதையையும் துனீசியவில் காஸாவின் அனுபவங்களை உருவாக்கும் தவறான வழிகாட்டல்களையும் துண்டிக்கவேண்டும் என்று தனது -இஸ்லாமிய விரோத போக்கை காட்டியுள்ளது -தெரிவித்துள்ளது.
23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சியில் இருந்த மேற்குலகை எஜமானாக விசுவாசித்த ஜைனுல் ஆபிதீன் பின் அலி வெற்றிகரமாக மக்களினால் விரட்டியடிக்கப்பட்டார். இவரின்  UNESCO வுக்கான துனீசிய தூதுவர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி தெரிவித்ததாக கூறியுள்ள தகவலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்- இஹ்வானுல் முஸ்லிமீன்- ஆட்சிக்கு வருவதை தடுக்குமுகமாக மக்களுக்கு எதிராக மரணம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைக்கு அனுமதி வழக்கினால் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சர்வதேச இஸ்லாமிய அமைப்பான இஹ்வானுல் முஸ்லிமீன் அரபு , இஸ்லாமிய அமைப்புகளை துனீசிய மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக இருக்குமாறு வேண்டியுள்ளதுடன் துனீசிய எழுச்சிக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது

0 comments:

Post a Comment