Tuesday, January 4, 2011

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆசிய வம்சாவளி உஸ்மான் காஜா.


சிட்னி,ஜன.3:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பிறந்த 24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும். வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா. இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. முதல் இரு பந்துகளை ஒன்றை பவுண்டரிக்கும், இன்னொன்றில் 2 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலிய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் காஜா. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்

0 comments:

Post a Comment